தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலாபால், இதை செய்தால் உலகில் மற்றம் வரும் என கூறியுள்ளார்.
ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை அமலாபால், சமீபத்தில் இந்தி பாடகர் பவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். திருமண புகைப்படங்களை பவ்னிந்தர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு சிறிது நேரத்தில் நீக்கி விட்டார். இந்த திருமணம் குறித்து சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி, “‘உங்களுடைய பஞ்சாப் கணவர், உங்களை நன்றாக பார்த்துக்கொள்வார். பஞ்சாபியரை நம்பலாம்” என்று வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து அமலாபால் கூறியிருப்பதாவது:- “கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பொதுமக்களுக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டு இருக்கலாம். இந்த இக்கட்டான நேரத்தில் உங்களை சுற்றி இருக்கும் மக்களுக்கு உதவியாக இருங்கள். பால்காரர், வாட்ச் மேன், டிரைவர்களுக்கு உதவி செய்யுங்கள். முன்னாள் பணியாளர்கள் நன்றாக இருக்கிறார்களா? என்று விசாரியுங்கள். எதை சரி என்று நினைக்கிறீர்களோ அதை செய்யுங்கள். இதன் மூலம் உலகில் மாற்றம் வரும்” இவ்வாறு கூறியுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal