குமரன்

சர்வதேச விருதுகளை வென்று குவிக்கும் நயன்தாரா படம்

நடிகை நயன்தாரா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சர்வதேச பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வென்று வருகிறது. நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இவர்கள் தயாரிப்பில் ‘நெற்றிக்கண்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதுதவிர பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘கூழாங்கல்’ படத்தையும் தயாரித்துள்ளார் நயன்தாரா. இப்படம் சர்வதேச பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வென்று வருகிறது. ஏற்கனவே நெதர்லாந்தில் நடந்த ரோட்டர்டம் சர்வதேச ...

Read More »

24 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட மகனை தேடி கண்டுபிடித்த தந்தை

24 ஆண்டுகளாக மகனை தேடி 20 மாகாணங்களில் கிட்டத்தட்ட 5 லட்சம் கி.மீ. பயணம் செய்துள்ளார் அந்த பாசக்கார தந்தை. சீனாவில் குழந்தை கடத்தல் மிகப்பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். இந்நிலையில் சீனர் ஒருவர் 2 வயதில் கடத்தப்பட்ட தனது மகனை 24 வருடங்களாக தேடி இறுதியில் அவனுடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கடந்த 1997-ம் ஆண்டு ஷாங்டாங் மாகாணத்தை சேர்ந்த குவோ கேங்டாங் என்பவரின் 2 வயது மகன் வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தபோது ...

Read More »

ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றை எதிர்த்து செயல்படுவதற்காகாக அழைப்பு

ஹிஜாஸ் ஹெஸ்புல்லா அஹ்னப் ஜஸீம் ஆகியோரின் தடுப்புக்காவல்இ முஸ்லீம் மக்களிற்கு எதிரான வன்முறை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றிணை எதிர்த்து செயற்படுவதற்கு இலங்கையின் 96 கல்விமான்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அறிக்கையொன்றில் ஹிஜாஸ் ஹெஸ்புல்லா அஹ்னப் ஜஸீம் ஆகியோர் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும்அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் பயங்கரவாத தடுப்புச்சட்டங்களை இரத்து செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது பல தசாப்தகால பெரும்பான்மை அரசியல் மற்றும் அண்மைக்காலத்தில் இடம்பெற்று வரும் எதேச்சையதிகாரமும் இராணுவமயமாக்கலும் எமது ஜனநாயகத்தின் அடித்தளத்தை ஆட்டம் காணச் ...

Read More »

சீன கடலட்டைப் பண்ணைகளா? இந்திய இழுவை மடிகளா?

கடந்த சில நாட்களாக வடக்கில் சீன மற்றும் பாகிஸ்தான் நிறுவனங்கள் அகல கால் பதிப்பதாகவும் இது ஈழத்தமிழர் நலன்களுக்கும்  அதற்கு அப்பால் இந்திய இறையாண்மைக்கும் அச்சுறுதலை ஏற்படுத்தலாம் எனவும் பாராளுமன்றத்தில் தமிழ் கட்சி உறுப்பினர் ஒருவர் மிகுந்த உசாராகப் பேசியிருந்தார். அத்துடன் இந்தியா தமது தொப்புள்கொடி உறவுகளாம், அதனால் இந்தியா பக்கமே தாங்கள் நிற்போம் இந்தியாவுக்கு எதிரான இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளவேண்டும் எனவும் விளாசித்தள்ளியிருந்தார். இவர்கள்   பேசிக்கொண்டிருந்த அதேகாலப்பகுதியில் (4.7.2021)பாக்கு நீரிணைக்கடலில் தொப்புள்கொடி உறவுகள் வட மராட்சி கிழக்கு மீனவர்களின் சுமார் எழுபத்தைந்துக்கும்  (75) மேற்பட்ட படுப்பு ...

Read More »

89 பேருக்கு கோவிட் தொற்று! ஒருவர் பலி!

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 89 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒருவர் மரணமடைந்துள்ளார். சிட்னியின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 70 வயதுகளிலுள்ள முதியவர் ஒருவரே மரணமடைந்ததாகவும் இவருக்கு ஏற்கனவே தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கோவிட் பரவல் மூலம் மரணமடைந்தோர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் ஆகக்குறைந்தது 21 பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்து விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நால்வருக்கும் ...

Read More »

விடுதலைப்புலிகள் அமைப்பினை மீள உருவாக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்டவர் கைது

கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழர் ஒருவரை விடுதலைப்புலிகள் அமைப்பினை மீள உருவாக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சிஐடியினர் கைதுசெய்துள்ளனர். காவல் துறை பேச்சாளர் அஜித்ரோகண இதனை தெரிவித்துள்ளார். பாக்கியதுரை நகுலேசன் என்பவரே சிஐடியினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் 2019 ம் ஆண்டு கட்டாருக்கு சென்றவர் என காவல் துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட நபர் விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார் என தெரிவித்துள்ள காவல் துறை  பேச்சாளர் அவருக்கு எதிராக சர்வதேச காவல் துறை ஊடாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். ...

Read More »

சீனாவின் இலங்கை மீதான ஊடுறுவல் கச்சதீவை தீவை கூட இந்தியா மீளப்பெறக்கூடிய நிலமையை ஏற்படுத்தலாம்

சீனாவின் இலங்கை மீதான ஊடுறுவல் கச்சதீவை தீவை கூட சிலவேளை இந்தியா மீளப்பெறக்கூடிய நிலமையை ஏற்படலாமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மட்டக்களப்பு ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக மேலும் இங்கு கருத்துத்தெரிவிக்கும்போது, சீனா தற்போது வடபுலம் யாழ்ப்பாணம் வரை ஊடுருவி இருக்கின்றது பூநகரியில் கௌதாரிமுனையில் இப்போது கடலட்டை வளர்க்கும் ஒரு பண்ணையை ஏற்படுத்தி இருக்கின்றார்கள் இதுகூட இங்கு இருக்கின்ற மக்களுக்கு தெரியாமல் ...

Read More »

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர ஆர்வமாக உள்ளேன் – ஜாக்கி சான்

நடிகர், தற்காப்புக் கலை நிபுணராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர் என்றும் முத்திரை பதித்தவர் ஜாக்கி சான். ஹாங்காங்கில் பிறந்த ஜாக்கி சான் அதிரடிப் படங்களில் நடித்து அசாத்தியமான சண்டைக் காட்சிகளின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியவர். அதன்மூலம் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தனது 8 வயது முதல் நடிக்கத் தொடங்கிய அவர் எழுத்தாளராகவும், இயக்குநராகவும் பல  திரைப்படங்களை ஹாங்காங்கில் எடுத்துள்ளார். இந்தியாவிலும் குறிப்பாக, தமிழகத்திலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதற்கிடையே, ஹாங்காங்கில் ஆதிக்கம் செலுத்த அங்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தை ...

Read More »

தடுப்பூசிகளை கலந்து போடுவதால் ஆபத்து ஏற்படலாம்

கொரோனாவுக்கு 3-வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி அளிப்பதற்கான போதிய ஆதாரங்கள், தரவுகள் இப்போது இல்லை. தாய்லாந்து போன்ற சில நாடுகளில் 2 வெவ்வேறு நிறுவன தடுப்பூசிகளை போட்டதில் நல்ல பலன் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே 2 ஊசிகளை கலந்து போட்டுக்கொள்ளலாம் என்ற எண்ணம் பல நாடுகளில் உருவாகி இருக்கிறது. இது சம்பந்தமாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் கூறியதாவது:- கொரோனாவுக்காக 2 தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம் என்று கூறுவது சரியான நடவடிக்கை அல்ல. இன்னும் உலக சுகாதார நிறுவனம் ...

Read More »

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 112 பேருக்கு தொற்று!

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 112 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக தொற்றுக்காண்போர் எண்ணிக்கை அடுத்துவரும் நாட்களில் நூற்றுக்கும் அதிகமாக இருக்கும் என ஏற்கனவே எதிர்வுகூறப்பட்டிருந்த பின்னணியில், ஒரே நாளில் 112 பேருக்கு புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜுன் மாதம் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கோவிட் பரவல் ஆரம்பித்ததையடுத்து அங்கு ஒரே நாளில் பதிவான ஆகக்கூடிய தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும். வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்து விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ...

Read More »