சீனாவின் இலங்கை மீதான ஊடுறுவல் கச்சதீவை தீவை கூட சிலவேளை இந்தியா மீளப்பெறக்கூடிய நிலமையை ஏற்படலாமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்
மட்டக்களப்பு ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக மேலும் இங்கு கருத்துத்தெரிவிக்கும்போது,
சீனா தற்போது வடபுலம் யாழ்ப்பாணம் வரை ஊடுருவி இருக்கின்றது பூநகரியில் கௌதாரிமுனையில் இப்போது கடலட்டை வளர்க்கும் ஒரு பண்ணையை ஏற்படுத்தி இருக்கின்றார்கள் இதுகூட இங்கு இருக்கின்ற மக்களுக்கு தெரியாமல் நடந்து இருக்கின்றது, முறையான அனுமதி பெறப்படவில்லை, இப்படியெல்லாம் பார்க்கின்றபோது இன்று சீனா யாழ்ப்பாண குடாநாட்டு பக்கமாகச் சென்றால் அது இந்தியா இலங்கை மீது ஆத்திரம் அடையக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடும்.
ஆகவே இந்நிலையில் பார்த்தால் அவர்கள் எங்களுக்கு அபிவிருத்தி என்ற போர்வையில் வருகின்றபோது இந்தியா தன்னுடைய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எனும் நிலைக்கு வரும். எனவே சீனாவும் இந்தியாவும் போட்டி போடுகின்ற மோதுகின்ற ஒரு போர்க்களமாக இந்து மா சமுத்திரத்தில் இலங்கை மாறப்போகின்றது என்ற கேள்வி எமக்குள் எழுகின்றது.
எனவே இப்படியான செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அண்மையில் உள்ள இந்தியா, ஜப்பான், சீனா போன்ற மற்றய நாடுகளோடு பொதுவான சமநிலையான முறைமையை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆலோசனையாக இருக்கின்றது.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கின்ற போது அது இந்தியாவிற்கு விடுக்கின்ற ஓரு சவாலாகத்தான் பார்க்கப்படுகின்றது, ஏன் என்றால் இன்று சீனா ஒரு முத்துமாலை வியூகத்தை அமைத்துவருகின்றது. பாக்கிஸ்தானாக இருக்கட்டும் நேபாலாக இருக்கட்டும் மியன்மாராக இருக்கட்டும் வங்காளதேசாக இருக்கட்டும் எல்லா நாடுகளிற்கும் அளவிற்கு அதிகமான கடன்களை கொடுத்து பொறிக்குள் விழுத்தி அந்த இந்தியாவை சுற்றி பெரிய தொரு முத்துமாலை வியூகத்தை அமைத்து இருக்கின்றது.
அந்த முத்துமாலை வியூகத்தில் முக்கியமான ஒரு கேந்திர நிலையமாக இப்போது இலங்கை மாறி இருக்கின்றது. வட புலத்தில் அவர்கள் தங்களுடைய கால்களை தரிப்பார்களாக இருந்தால் இந்தியாவின் ஆயுத களஞ்சியமென்பது தென்னிந்தியா பக்கமாக இருக்கின்றது.
ஆகவே நவீன தொழில் நுட்பங்களை வைத்துக்கொண்டு இந்தியாவை முழுமையாக அவதானிப்பதற்குரிய வாய்ப்பு இருக்கின்றது. இந்த நிலையில் நான் சொல்லக்கூடிய ஒரு விடயமாக இருப்பது நிச்சயமாக சீனா கிழக்கிலும் வடக்கில் கால் ஊன்றுகின்றபோது நிச்சயமாக அது இந்துயாவிற்கு ஒரு பெரிய ஆத்திரத்தை ஏற்படுத்துகின்ற ஒரு செயலாக அது இருக்கும் அதன்மூலமாக இந்தியா மாத்திரம் அதனை எடுத்துக்கொள்ளாமல் யப்பானும் விரும்பாது, அமைரிக்கா விரும்பாது,
மேற்குலக நாடுகளும் விரும்பாது, எனவே அபிவிருத்தி என்கின்ற போர்வையில் சீனாவின் இலங்கை மீதான ஊடுறுவல் என்பது நிச்சயமாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் பாரியதொரு பகையை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாக இருக்கும் சில வேளைகளில் கச்சை தீவை கூட இந்தியா மீளப்பெறக்கூடிய நிலமை ஏற்படலாம் அவர்களுடைய பாதுகாப்பை அடிப்படையாக வைத்துக்கொண்டு என தெரிவித் தார்.