குமரன்

சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேறியது

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டதுடன் பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் 14 நாடுகள் நடுநிலையும் வகித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு குறித்து பிரித்தானியா தலைமையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இலங்கை நேரப்படி பிற்பகல் 4 மணியாளவில் முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் 22 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்ததுடன் 11 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராகவும் 14 நாடுகள் நடுநிலையாகவும் வாக்களித்திருந்தன. இந்நிலையில், சிறிலங்காவின்   பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில் தீர்மானம் ...

Read More »

அகதியின் புதிய ஆவணப்படம்

நவுருத்தீவில் செயல்படும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் தஞ்சம் கோரிய மக்களை ஆஸ்திரேலிய அரசு எப்படி நடத்துகிறது என்பதை அம்பலப்படுத்தும் புதிய ஆவணப்படம் ஒன்றை அத்தடுப்பில் இருந்த முன்னாள் கைதியான Elahe Zivardar எனும் ஈரானிய அகதி வெளியிட்டிருக்கிறார். Searching for Aramsayesh Gah என்ற தலைப்பிலான படத்தில், படகு சிக்கல் முதல் அகதிகள் சிறைவைக்கப்பட்டுள்ள முறை வரை நவுருத்தீவில் உள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முறை குறித்த பல்வேறு அம்சங்கள் இதில் பேசப்பட்டுள்ளது. “என்னை எப்படி அறிமுகப்படுத்திக் கொள்வது என உண்மையில் எனக்குத் தெரியவில்லை. ...

Read More »

சீனாவை எதிர்க்க விரும்பாத தமிழ்த் தேசிய தலைமைகள்

இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் இறுதி வரைபு, மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அடுத்த வாரம் இது தொடர்பான இறுதி விவாதங்கள் இடம்பெறவுள்ளன. இந்த விவாதங்களின் போது, இலங்கையை பாதுகாக்கும் தலைமைப் பொறுப்பை சீனா எடுத்துக் கொள்ளும். ஏற்கனவே இது தொடர்பில் சீனா பகிரங்கமாக அறிவித்திருக்கின்றது. இலங்கையின் மீது புதியதொரு பிரேரணை என்னும் வாதம் மேலொழுந்த நாளிலிருந்து சீனா மிகவும் உறுதியான நிலையில் அதனை எதிர்த்து வந்திருக்கின்றது. இந்த விவகாரம் இலங்கையின் உள்விவகாரம். எனவே இதில் வெளியார் தலையீடு செய்ய வேண்டியதில்லை. இலங்கையை நாங்கள் ...

Read More »

தாய்லாந்தில் மன்னராட்சிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

தாய்லாந்தில் முக்கிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக இயக்கம் கடந்த ஓர் ஆண்டாக தொடர்ந்து அறவழியில் போராட்டங்களை நடத்தி வருகிறது. தாய்லாந்தில் அரசியலமைப்பில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் மன்னரின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக இயக்கம் கடந்த ஓர் ஆண்டாக தொடர்ந்து அறவழியில் போராட்டங்களை நடத்தி வருகிறது. மாணவர்களின் இந்த போராட்டத்தை ஒடுக்க தாய்லாந்து போலீசார் போராட்டக் குழுக்களின் தலைவர்களை ...

Read More »

நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்

ரேணிகுண்டா, பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார். ரேணிகுண்டா படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தீப்பெட்டி கணேசன். அதற்கு பிறகு அஜித்தின் பில்லா 2, விஜய் சேதுபதியின் தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இதன்பின்னர், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், பொருளாதாரத்தில் நலிவடைந்த தீப்பெட்டி கணேசன், பல்வேறு சிறு தொழில்களை செய்து வந்தார். கடந்தாண்டு, கொரோனா ஊரடங்கு காலத்தில், பால் வாங்கக் கூட காசு ...

Read More »

ஊடகங்களை அரசாங்கம் ஒடுக்குவதற்கு எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க முடியாது

ஊடகங்களை அரசாங்கம் ஒடுக்குவதற்கு எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்எம் மரிக்கார் இதனை தெரிவித்துள்ளார். தீவிரவாதத்திற்கு எதிராக பேசும்போது ஊடகங்களை பாராட்டும் அரசு காடழிப்பு குறித்து பேசும்போது ஊடகங்களை கண்டிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார் ஊடகங்களை இவ்வாறு ஒடுக்கமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவிவகித்தவேளை அவரது முகநூலை ஹக்செய் இளைஞன் அலரிமாளிகைக்கு அழைக்கப்பட்டு அவரது திறமைக்காக பாராட்டப்பட்டார் ஆனால் இன்று காடழிப்பிற்கு எதிராக குரல்கொடுக்கும் இளைஞர்கள் ...

Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபரிடமிருந்து 27 இலட்சம் ரூபா கைப்பற்றப்பட்டது

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரிடமிருந்து 27 இலட்சம் ரூபா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி  காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய ஐக்கிய அரபு இராச்சியத் திலிருந்து நாடு கடத்தப்பட்ட சந்தேகநபர் வெலிகம பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரி வித்தார். பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் குறித்த சந்தேகநபர் கைது செய் யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.   குறித்த சந்தேகநபரிடம் இருந்து 27 இலட்சம் ரூபா பணம் ...

Read More »

‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியை கமலுக்கு பதில் தொகுத்து வழங்கப்போகும் பிரபல நடிகர்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனை கமலுக்கு பதில் பிரபல நடிகர் தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர். வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடத்தப்படும். ஆனால் கடந்தாண்டு கொரோனா ...

Read More »

ஆஸ்திரேலியாவில் வெளுத்து வாங்கும் மழை… 50 ஆண்டுகளில் இல்லாத வெள்ளப்பெருக்கு

கிழக்கு ஆஸ்திரேலியாவில் கனமழை பெய்து வருவதால் நாளை பல்வேறு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் கடந்த  வியாழக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். வேகமாகப் பாய்ந்த வெள்ள நீர் பெரிய அளவில் சேதத்தை உண்டாக்கியதால் சிட்னியின் தென்மேற்குப் பகுதியில் வாழும் மக்கள், நள்ளிரவில், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவேண்டியிருந்தது. வெள்ளப்பெருக்கினால் ...

Read More »

அமெரிக்காவில் அதிகரித்து வரும் ஆசிய எதிர்ப்பு இனவெறிக்கு ஜோ பைடன் கடும் கண்டனம்

ஆசிய நாடுகளின் மக்களாலேயே கொரோனா வைரஸ் பரவியது என்கிற தவறான கண்ணோட்டத்தில் அவர்கள் மீது வெறுப்புணர்வு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் அண்மைக்காலமாக ஆசிய அமெரிக்கர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கொரோனோ வைரஸ் பரவ தொடங்கியதற்கு பிறகு இது போன்ற தாக்குதல்கள் அதிகளவில் நடந்து வருகின்றன.‌ ஆசிய நாடுகளின் மக்களாலேயே கொரோனா வைரஸ் பரவியது என்கிற தவறான கண்ணோட்டத்தில் அவர்கள் மீது வெறுப்புணர்வு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனை கண்டித்து அமெரிக்காவில் உள்ள ஆசிய அமெரிக்க சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ...

Read More »