குமரன்

சீரற்ற காலநிலை காரணமாக திருமலையில் 3 மீனவர்களுடன் மீன்பிடிப் படகு மாயம்

திருகோணமலையிலுள்ள திருக்கடவூர் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீன்பிடிப் படகு சீரற்ற காலநிலை காரணமாக காணாமல் போயுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். குறித்த படகில் 3 மீனவர்கள் இருந்ததாகவும் மாயமான படகைத் தேடி 20 படகுகள் காணாமல் போன பிரதேசத்துக்குச் சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்தச் சம்பவம் குறித்து மீன்வளத் திணைக்களம் மற்றும் கடற்படையினருக்கு தாம் அறிவித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Read More »

உகான் ஆய்வகத்தில் இருந்தே கொரோனா பரவியிருக்கலாம்

கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பது பற்றி உலக சுகாதார நிறுவனம் அடுத்த கட்ட விசாரணையை தொடங்க உள்ள நிலையில் அமெரிக்க உளவுத்துறையின் தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று, உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கிவிட்டது. இந்த வைரசின் அடுத்தடுத்த அலைகளால் இன்றளவும் உலக நாடுகள் திணறி வருகின்றன. சீனாவின் உகான் நகர ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. கொரோனா வைரஸ் உகான் நகரில்தான் தோன்றியது என்ற ...

Read More »

200 மில்லியன் .. நடிகை சாய் பல்லவியின் புதிய சாதனை

நடிகை சாய் பல்லவி நடித்த படங்களில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் 200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த நடிகை சாய் பல்லவி, தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தற்போது ராணாவின் ‘விராட பருவம்’, நாக சைதன்யாவுடன் ‘லவ் ஸ்டோரி’ போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படங்களின் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது. நடிப்பை போலவே நடனத்திலும் சிறந்து விளங்கி வருகிறார் சாய் பல்லவி. இவரது நடனத்திற்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இதனால் இவர் ...

Read More »

தமிழினம் கலங்கி நிற்க, தென்னிலங்கையில் விழா கொண்டாடியதை இன்றும் மறக்க முடியவில்லை

முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு மேற்கொண்ட இன அழிப்புப் போரின் இறுதி நாட்களில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் தாயகத்திலும் உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களும் நாதியற்று கலங்கி நின்ற போது, தென்னிலங்கையும், அதன் ஆதரவு சக்திகளும் பல பத்தாயிரம் மக்களை படுகொலை செய்து நிறைவுக்கு கொண்டு வந்த போரின் மூலம் ஒரு இனத்தை அடிமைப்படுத்தியதை எவ்வாறு கொண்டாடினார்கள் என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்கள் ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய கருத்து வருமாறு: 2009ஆம் ...

Read More »

’’கலப்பின அரிசியின் தந்தை’’ காலமானார்

“கலப்பின அரிசியின் தந்தை” யான யுவான் லாங்பிங் காலமானார் என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். இறக்கும்போது அவருகு்கு வயது  91 ஆகும்.   அவரது மறைவுக்கு இலங்கையிலு சீன தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. அந்த இரங்கல் செய்தியில், “யுவானின் கடின உழைப்பு காரணமாக, சீனாவின் மொத்த அரிசி உற்பத்தி 1950இல் 56.9 மில்லியன் தொன்னிலிருந்து 2017.ல் 194.7 மில்லியன் தொன்னாக உயர்ந்தது. கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 300 பில்லியன் கிலோ அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. வருடாந்த அதிகரிப்பு 60 மில்லியனுக்கும் அதிகமான ...

Read More »

யாழில் 8 மாத கர்ப்பிணியை கொரோனா மையத்தில் இரவு வேளை இறக்கிச் சென்ற சுகாதார அதிகாரிகள்!

எட்டு மாதம் நிரம்பிய கர்ப்பிணிப் பெண்ணை எந்த ஏற்பாடுகளும் இன்றி உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவினர் இரவு 8.30 மணியளவில் வட்டுக்கோட்டை கொரோனா தடுப்பு மையத்தில் கொண்டு சென்று இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். அவர்களின் பொறுப்பற்ற இந்தச் செயலால் அந்தக் கர்ப்பிணிப் பெண் பல அசௌகரியங்களுக்கு உள்ளானதாகவும் அத்துடன் அவரை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்ல வேண்டிய இக்கட்டான நிலை வட்டுக்கோட்டை கொரோனா சிகிச்சை மைய நிர்வாகத்துக்கு ஏற்பட்டதாகவும் தெரிய வருகின்றது. நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது: உடுவில் ...

Read More »

வடக்கில் நேற்று 80 பேருக்கு கொவிட் தொற்று

யாழ்ப்பாணத்தில் 41, கிளிநொச்சியில் 25 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 80 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் ஆயிரத்து 232 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், யாழ்ப்பாணத்தில் 41 பேருக்கும், கிளிநொச்சியில் 25 பேருக்கும், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா 6 பேருக்கும், மன்னாரில் இருவருக்குமாக 80 பேருக்கு நேற்று தொற்று அடையாளம் காணப்பட்டது.

Read More »

பிரபல நடிகருக்கு சகோதரியாக நடிக்கும் ஜோதிகா

பல படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை ஜோதிகா, அடுத்ததாக பிரபல நடிகருக்கு சகோதரியாக நடிக்க இருக்கிறார். கேஜிஎப் படம் மூலம் மிகவும் பிரபல இயக்குனராக மாறியவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக கேஜிஎப்-2 படத்தை இயக்கிய முடித்துவிட்டு, தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இந்த நிலையில் இப்படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிகை ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் பிரபாஸுக்கு சகோதரியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

Read More »

இந்திய கிரிக்கெட்டுக்கு இன்சமாம் பாராட்டு – ஆஸ்திரேலியா செய்யாததை சாதித்துள்ளது

இந்தியாவில் எப்போதுமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட 50 வீரர்கள் தயாராக உள்ளனர் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்ஹக் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 2 அணிகள் வெவ்வேறு நாடுகளில் விளையாட உள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 6 டெஸ்டில் விளையாடுகிறது. நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியாட்டத்தில் ஆடுகிறது. அதைத்தொடர்ந்து இங்கிலாந்துடன் 5 டெஸ்டில் விளையாடுகிறது. இதற்காக வருகிற 2-ந் தேதி வீரர்கள் புறப்பட உள்ளனர். இந்த நிலையில் அதே ...

Read More »

தீவிர பாக்ஸிங் பயிற்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் திரையுலகில்   நடிகையாக வலம்வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தீவிர பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவரையும் ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை, செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும், கா/பெ ரணசிங்கம் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வரும் இவர், துருவ நட்சத்திரம், திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர் ஜமுனா, தி ...

Read More »