குமரன்

ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான தொழிற்பட்டியலில் புதிதாக 22 தொழில்கள் இணைப்பு!

ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான Priority Migration Skilled Occupation List (PMSOL)- முன்னுரிமை  அடிப்படையிலான தொழிற்பட்டியலில் புதிதாக 22 தொழில்கள் இணைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் Alex Hawke இன்று அறிவித்தார். இதையடுத்து Priority Migration Skilled Occupation List-இல் உள்ள மொத்த தொழில்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. Priority Migration Skilled Occupation List என்பது மிக அத்தியாவசிய தொழில்துறைகளுக்கான பணியாளர்களை  முன்னுரிமை அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு வரவழைப்பதற்கான பொறிமுறையாகும். Priority Migration Skilled Occupation List-இல் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள தொழில்களின் விவரங்கள் வருமாறு: Accountant ...

Read More »

ராணாவை நாடு கடத்தும் வழக்கில் நாளை நேரடி விசாரணை

மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவும் அவருடைய நண்பரும், கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் தொழிலதிபருமான தஹாவுர் ராணாவுக்கும் இவ்வழக்கில் தொடர்புள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம், மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் பலியானார்கள். இதில் முக்கிய குற்றவாளியான ஹெட்லி, அமெரிக்காவில் பிடிபட்டார். அவர் அப்ரூவராக மாறி, சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். அவருடைய நண்பரும், கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் தொழிலதிபருமான தஹாவுர் ராணாவுக்கும் இவ்வழக்கில் தொடர்புள்ளது. அவர் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் ...

Read More »

அனுஷ்கா, சமந்தா மாதிரி இருந்தால் மட்டுமே சினிமாவில் நிலைக்க முடியும் – ராஷி கண்ணா

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் ராஷி கண்ணா, சினிமா துறை ஆணாதிக்கம் உள்ள துறையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராஷி கண்ணா, தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இதுதவிர மலையாளத்தில் ஒரு படத்திலும், இந்தியில் இரண்டு வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவ்வாறு பிசியான நடிகையாக வலம்வரும் ராஷி கண்ணா, சமீபத்திய பேட்டியில் சினிமாவில் ஆணாதிக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: “சினிமா துறை ஆணாதிக்கம் ...

Read More »

தமிழ் மக்களுடைய நில உரிமையைப் பறித்தெடுக்கப்படுகிறது!

இந்த அரசு மேற்கொள்கின்ற அனைத்து விதமான செயற்பாடுகளும் இறுதியிலே தமிழ் மக்களுடைய நில உரிமையைப் பறித்தெடுப்பதாகத்தான் இருக்கின்றதே தவிர தமிழ் மக்களுடைய நில உரிமையை உறுதிப்படுத்துவதாக இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தொடர்பான சட்டமூல விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தொடர்பான சட்டமூல விவாதம் இங்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ...

Read More »

பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்கள்…..

பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்வது குறித்து அமைச்சரவை ஆராய்ந்தது என நீதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாங்கள் இது குறித்து ஆராய்நது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாத விதத்தில் மாற்றங்களை மேற்கொள்வோம் என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார். இன மதங்களை கருத்தில்கொள்ளாமல் அனைவரும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் தீர்வை வழங்க முயல்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

‘விமலுக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஏற்க முடியாது’

அமைச்சர் விமல் வீரவன்ஸவின் அமைச்சுக்கு கீழிருந்த பொஸ்போட் நிறுவனத்தை, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு கீழ் கொண்டு வந்த விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்துள்ள நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, சிலரது தேவை, கோரிக்கை, அவசியம், அளவீடுகளுக்கு அமைய இந்த மாற்றங்கள் முன்னெடுக்கப்படுகிறன என்றார். “எனினும், இவ்வாறு சிறு கட்சிகளின் அமைச்சர்களுக்கும் கட்சிகளுக்கும் திட்டமிட்டே இழைக்கப்படும் அநீதிகளுக்கு  எதிராக  போரட்டங்களை முன்னெடுக்க நாங்கள் தயாராக இல்லை” என்றார். எனினும், இலாபமடைந்த பின்னர் இந்த நிறுவனத்தை கைமாற்றியமைக் குறித்து எதிர்வரும் நாள்களிள் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Read More »

அரிய வகை நோய்களை எதிர்கொள்வது எப்படி?

உலகில் 8 ஆயிரம் அரிய வகை நோய்கள் இருப்பதாகவும், அவற்றைக் கொண்டிருப்பவர்கள் 40 கோடிப் பேர் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் கணக்கு 450 அரிய வகை நோய்களும், 7 கோடி மக்களும். குறிப்பிட்ட மக்கள்தொகையில் குறைந்த அளவில் ஏற்படும் நோய்களை ‘அரிய வகை நோய்கள்’ (Rare Diseases) என்று வரையறுத்திருக்கின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் வரையறைப்படி அரிய வகை நோய் என்பது 10 ஆயிரம் பேரில் 10 பேருக்கும் குறைவாக இருப்பது. அரிய வகை நோய்களில் 5% நோய்களுக்குத்தான் சிகிச்சை இருக்கிறது. இருக்கும் ...

Read More »

வடகொரியாவில் கரோனா இல்லையா? –

வடகொரியாவில் ஜூன் 10 -ம் தேதி வரை நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் யாருக்கும் கரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் அந்நாடு தெரிவித்துள்ளது. ஆனால் இதில் உண்மை இல்லை என தற்போது தெரிய வந்துள்ளது. ஜூன் மாதம் 10 ஆம் தேதிவரை சுமார் 30,000 பேருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனைகளில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என உலக சுகாதார அமைப்புக்கு அளித்த அறிக்கையில் வடகொரியா சமீபத்தில் தெரிவித்திருந்தது. ஆனால் உலக சுகாதார அமைப்பின் கண்காணிப்பு குழு வெளியிட்ட அறிக்கையில், “ 733 ...

Read More »

பிரபல நடிகர் ஹம்சவர்தனின் மனைவி காலமானார்

பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மருமகளும், நடிகர் ஹம்சவர்தனின் மனைவியுமான சாந்தி ஹம்சவர்தன் (42) நேற்று மாலை காலமானார். காதலிக்க நேரமில்லை, நான், ஊமை விழிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் ஹம்சவர்தன், ‘மானசீக காதல்’, ‘வடுகபட்டி மாப்பிள்ளை’, ‘புன்னகை தேசம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். மம்மூட்டியுடன் ‘ஜூனியர் சீனியர்’ படத்தில் இணைந்து நடித்தார். இவரது மனைவி சாந்தி. இவர் ரேஷ்மா என்ற பெயரில் மு.களஞ்சியம் இயக்கிய ‘பூமணி’ படத்தில் இரண்டாவது நாயகியாகவும், நடிகர் கார்த்திக் உடன் ‘கிழக்கு முகம்’ ...

Read More »

ஆஸ்திரேலி தடுப்பு முகாமில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அகதிகள்

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட அகதிகள் தாங்கள் சிறைவைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மெல்பேர்ன் குடிவரவுத் தடுப்பு முகாமில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மனுஸ் மற்று நவுருத்தீவுகளிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அகதிகள் எனக் கூறப்படுகின்றது. “நாங்கள் இங்கு மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டோம். ஆனால் எந்த காரணமுமின்றி எங்களைத் தடுப்பிலேயே வைத்திருக்கின்றனர்,” என ஓர் அகதி தெரிவித்திருக்கிறார்.

Read More »