குமரன்

20வது திருத்தச் சட்டத்திற்கு கிழக்கு மாகாண சபை ஆதரவு

இலங்கையிலுள்ள அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவது தொடர்பான 20வது திருத்தச் சட்டத்திற்கு கிழக்கு மாகாண சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர். இதன்படி, இது தொடர்பான யோசனை இன்றைய மாகாண சபை அமர்வுகளில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 25 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதோடு, எதிராக 8 வாக்குகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More »

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவத் தயாராகும் விக்டோரியா மாநில அரசு

தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக சுமார் 6 லட்சம் டொலர் நிதியை விக்டோரியா மாநில அரசு ஒதுக்கியுள்ளது. மனுஸ் மற்றும் நவுறு தடுப்பு முகாம்களிலிருந்து உடல் நலமின்மை காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு 400 புகலிடக் கோரிக்கையாளர்கள் அழைத்துவரப்பட்டனர். அவர்களுக்கு நிதியுதவி மற்றும் தங்குமிட வசதிகளை அண்மையில் அரசு நிறுத்தியிருந்ததோடு, மேலும் இவர்கள் அனைவரும் அவுஸ்ரேலியாவிலிருந்து வெளியேறுவதற்கான ஆயத்தவேலைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அரசு அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. இதேவேளை விக்டோரியாவில் வாழும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் ஏனைய வாழ்வாதார உதவிகளுக்காக 6 லட்சம் நிதியினை அரசு ...

Read More »

நாளை அவுஸ்ரேலியா மோதும் பயிற்சி ஆட்டம்: ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம்

அவுஸ்ரேலியா- இந்திய போர்டு பிரசிடென்ட் லெவன் மோதும் பயிற்சி ஆட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. இந்த பயிற்சி ஆட்டத்தை ரசிகர்கள் இலவசமாக காணலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் ஒருநாள் போட்டி சென்னையில் நடைபெறுவதால் அவுஸ்ரேலிய வீரர்கள் 2 கட்டங்களாக இங்கு வந்தனர். இந்தியா- அவுஸ்ரேலிய அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 17-ந்திகதி (ஞாயிற்றுக்கிழமை) ...

Read More »

பணம் புரளும் பகுதிகளை கண்டறியும் மென்பொருள்!

ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள், செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அலசி, அந்த பகுதியில் உள்ளவர்கள், எத்தனை வசதியானவர்கள் என்பதை அலசிச் சொல்ல முடியும் என, நிரூபித்து உள்ளார், அமன் திவாரி. அமெரிக்காவில் உள்ள, கார்னகி மெலன் பல்கலைக் கழக கணிப்பொறி விஞ்ஞானியான திவாரி, ‘பென்னி ஏ.ஐ.,’ என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்கு, நியூயார்க் நகரின் செயற்கைக்கோள் படங்களையும், செழிப்பான பகுதிக்கான அடையாளங்களையும் கற்றுத் தந்தார். இதன் அடிப்படையில், பென்னி ஏ.ஐ., துல்லியமாக புகைப்படத்தில் உள்ள பகுதி, உயர் வருவாய், நடுத்தர வருவாய், குறைந்த ...

Read More »

மன்மத நாயகனுடன் மீண்டும் இணையும் ஜோதிகா!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது பல படங்களில் நடித்து வரும் ஜோதிகா, அடுத்ததாக மன்மத நாயகனுடன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜோதிகா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தற்போது ‘மகளிர் மட்டும்’ படம் உருவாகி ரிலிசூக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தை அடுத்து பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘நாச்சியார்’ படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ஜோதிகா. ‘காற்று வெளியிடை’ ...

Read More »

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்!

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உமேஷ் யாதவ், மொகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணி சமீபத்தில் இலங்கை சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடியது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உமேஷ் யாதவ், மொகமது ஷமி, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் இடம்பிடித்திருந்தனர். ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரேயொரு டி20 போட்டிக்கு, இந்த நான்கு பேருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டது. இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ...

Read More »

இவ்வருட நவராத்திரி விரதம் எப்போது ஆரம்பம் ?

சக்­தியை நாய­கி­யாகப் போற்றும் நவ­ராத்­திரி விழா­வா­னது ஒரு கலா­சார விழு­மி­யங்­களைப் பேணு­கின்ற சக்­தியின் மகி­மையைப் போற்­று­கின்ற கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்­ப­வற்றில் இறை­யு­ணர்வைப் பிர­தி­ப­லிக்­கின்ற ஒரு விழா­வாகும். இத­னால்தான் சிவ­ராத்­தி­ரிக்கு இல்­லாத முக்­கி­யத்­து­வமும், பிர­பல்­யமும் சக்தி விழா­வா­கிய நவ­ராத்­தி­ரிக்கு உண்டு. இவ்­வி­ழா­வா­னது ஆல­யங்­களில் சமய வைப­வ­மாக மட்­டு­மல்­லாமல் இல்­லங்கள், பொது மன்­றங்கள், பாட­சா­லைகள், அலு­வ­ல­கங்கள், வேலைத்­த­ளங்கள் என எல்லா இடங்­க­ளிலும் சரஸ்­வதி பூஜை என்றும் கலை­விழா என்றும் காலங்­கா­ல­மாகக் கொண்­டா­டப்­பட்டு வரு­கின்­றது. இவ்­வாறு பல­வி­தத்­திலும் சிறப்பு பெற்ற நவ­ராத்­திரி விரத ஆரம்பம் ...

Read More »

அவுஸ்ரேலியாவுக்குள் நுழைய முயன்றால்?

அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முன்னர் வெளிநாட்டு விமான நிலையங்களில் வைத்து, சந்தேகப்படும்படியான நபர்களை தடுத்து நிறுத்தும் பணியில் அவுஸ்திரேலிய குடிவரவுத்துறையின் Border Force ஈடுபடுகின்றது. குறிப்பாக ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள, சில சர்வதேச விமான நிலையங்களிலிருந்து வருபவர்களை தடுத்தும் நிறுத்தும் பணி தொடர்கிறது. அவுஸ்திரேலிய Border Force-இன் Airline Liaison Officers – சிறப்புப் பிரிவு இயங்கிவருதாக குடிவரவுத்துறை அமைச்சர் Peter Dutton தெரிவித்தார். இதன்மூலம் தீவிரவாதம் மற்றும் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கானவர்கள், அவுஸ்திரேலியாவுக்குள் வர முன்னரே தடுத்துநிறுத்தப்பட்டதாக ...

Read More »

அவுஸ்ரேலியக் குடியுரிமைச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்படுமா?

அவுஸ்ரேலியாவில் குடியுரிமை பெறுவதைக் கடினமாக்கும் அரசின் சட்ட முன்வடிவு, பலரால் மீளாய்வு செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் குடியுரிமை பெற அதிக நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. அத்துடன் அவுஸ்ரேலிய விழுமியங்கள் குறித்த மேலதி மதிப்பீடு, மற்றும் பல்கலைக்கழக நிலை ஆங்கிலப் பரீட்சையில் தேர்ச்சி என்பன முன்மொழியப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கை, மற்றும் செனட் சபையில் இதன் எதிர்காலம் குறித்த கேள்வி என்பன இந்த சட்டமூலம் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More »