குமரன்

நிதி மோசடி செய்த வங்கியின் முகாமையாளர் கைது!

நிதி மோசடி செய்த குற்றத்திற்காக கம்பஹா சணச கிராமிய வங்கியின் முகாமையாளர் மற்றும் பிரதி பொது முகாமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 73 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது. வைப்பாளர்களினால் வைப்பில் இடப்பட்ட நிதியே இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை  ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை அடுத்தே சணச கிராமிய வங்கியின் முகாமையாளர் மற்றும் பிரதி பொது முகாமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். குறித்த சம்பவம் ...

Read More »

‘அகோரி’ படத்தின் முன்னோட்டம்!

டி.எஸ்.ராஜ்குமார் இயக்கத்தில் சாயாஜி ஷிண்டே, ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அகோரி’ படத்தின் முன்னோட்டம். அறிமுக இயக்குநர் டி.எஸ்.ராஜ்குமார் இயக்கத்தில் சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘அகோரி’. மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே.மேனன் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஸ்ருதி ராமகிருஷ்ணன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். மேலும் மைம் கோபி, சித்து, டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி, கார்த்தி, ‘கலக்கப்போவது யாரு’ சரத் ஆகியோரும் நடித்துள்ளனர். கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற புதிய கலைஞர்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சிவனடியாராக உள்ள ஓர் ...

Read More »

ஆஸ்திரேலிய காட்டுத் தீயணைப்பு பணியில் தன்னார்வ வீரர் உயிரிழப்பு!

ஆஸ்திரேலிய காட்டுத் தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வ வீரர் பில் ஸ்லேட் தென்பகுதியில் தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது மரம் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். ஆஸ்திரேலியாவின் தென் பகுதியிலும், நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா கடற்கரையையொட்டிய பகுதிகளிலும் பரவி வருகிற காட்டுத்தீ அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரீசனுக்கு பெருத்த தலைவலியாக மாறியுள்ளது. இந்த தீயில் சிக்கி இதுவரை தீயணைப்பு வீரர்கள் 3 பேர் உள்பட 26 பேர் உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரம் வீடுகள் எரிந்து தரை மட்டமாகி உள்ளன. அமெரிக்காவின் இண்டியானா மாகாண பரப்பளவுக்கு ...

Read More »

திருமணம் நடைபெற்ற தருணம் பிலிப்பைன்ஸில் எரிமலை வெடித்த காட்சி!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே உள்ள மிகவும் ஆக்ரோசமாக குமுறக்கூடிய எரிமலைகளில் டால் எரிமலையும் ஒன்றாகும். குறித்த எரிமலை நேற்றையதினம் குமுறிய நிலையில் ஒரு கிலோ மீற்றர் உயரத்துக்கு சாம்பல் புகை வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. மேலும் பலத்த சத்தத்துடனும், அதிர்வுகளுடனும் வெடித்து சிதறிவருகிறது. குறித்த எரிமலை வெடித்துக் குமுறிய இடத்திலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள ஒரு இடத்தில் திருமண நிகழ்வொன்று இடம்பெற்றது. இந்நிலையில் அவர்களின் மணவறைக்கு பின்புறமாக குறித்த எரிமலை வெடித்துக் குமுறும் போது ...

Read More »

கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய சவூதி விமானம்!

சவூதி – ஜெட்டாவிலிருந்து இந்தோனேசியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்திலிருந்து, இந்தோனேசியாவை சேர்ந்த இரு பெண்களின் சடலங்கள் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன

Read More »

வாள் – கத்தி முனையில் அச்சுறுத்தி யாழில் கொள்ளை!

யாழ்ப்பாணம், குப்பிழான் தெற்கு வீரமனைப் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறையின் புகை போக்கியைப் பிரித்து உள்ளிறங்கிய கொள்ளைக் கும்பல் குறித்த வீட்டிலிருந்தவர்களை வாள் மற்றும் கத்தி முனையில் கடுமையாக அச்சுறுத்தி அங்கிருந்த தங்க நகைகள் பெறுமதிவாய்ந்த கைத்தொலைபேசிகள் மற்றும் ஒருதொகைப் பணம் என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது. குறித்த கொள்ளைச் சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை (11) அதிகாலை இடம்பெற்றுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த வீட்டின் உரிமையாளர்களான கணவனும், மனைவியும் வீட்டில் இல்லாத நிலையில் அவர்களது நெருங்கிய உறவினரான இருவர் வீட்டின் பாதுகாப்புக் ...

Read More »

ஐந்து குழந்தைகளுடன் ஹரிஷ் கல்யாண்!

தனுசு ராசி நேயர்களே படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் 5 குழந்தைகளுடன் இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தனுசு ராசி நேயர்களே படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது ‘தாராள பிரபு’ திரைப்படம் உருவாகியுள்ளது. ஆயுஷ்மான் குரானா நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற ‘விக்கி டோனர்’ என்ற படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது. ரொமான்டிக் காமெடி வகையை சேர்ந்த இந்த படம், விந்து தானம் மற்றும் குழந்தையின்மை ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. பாக்ஸ் ஆபீசில் ...

Read More »

‘கோர்ட்’ போட்ட கோட்டாவின் சிங்கப்பாதை!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், சமாதான காலப்பகுதியில், இராணுவ சீருடை இல்லாமல், சாதாரண உடையில் சர்வதேச செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டது, அப்போது பரபரப்பாகப் பேசப்பட்ட விடயமாகும். செய்தியாளர் சந்திப்புக்குப் பின்னரும்கூட, பல அரசியல் தலைவர்கள், இராஜதந்திரிகள் உடனான சந்திப்பில், அவர் சாதாரண உடையிலேயே கலந்துகொண்டார். அதுபோல, தென்னிலங்கையிலும்கூட, அரசாங்கத்தின் தலைவர்கள், பாரம்பரிய உடையணிந்து கொண்டதற்கும் வேறு சிலர் மேற்கத்தேய உடையணிந்ததுக்கும் இலங்கை அரசியலில் பல்வேறு அரசியல், இராஜதந்திரப் பார்வைகள் உள்ளன. இந்த உடை விவகாரம், அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் மாத்திரமல்ல, படைகளிலும்கூட, பல செய்திகளைத் தன்னகத்தே ...

Read More »

அவுஸ்திரேலியா காட்டுத் தீ பாதிப்பை கண்முன் காட்டும் படங்கள்!

அவுஸ்திரேலியாவில் பல மாதங்களாக எரியும் காட்டுத் தீ ஒரு அழியாத வடுவை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் மாதம் முதல், அவுஸ்திரேலியா முழுவதும் கிட்டத்தட்ட 10 மில்லியனுக்கும் அதிகமான ஹெக்டயர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலாக்கிய ;தீ விபத்தில் குறைந்தது 27 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன், சுமார் 2,000 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்து நாசமாகியுள்ளது அத்தோடு, வனவிலங்குகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 1 பில்லியனுக்கும் அதிகமான விலங்குகள் ;உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு, பாதிக்கப்பட்ட பகுதிகள் வழமை நிலைக்கு மீள்வதற்கு பல ஆண்டுகள், தசாப்தங்கள் ஆகலாம் எனவும் ...

Read More »

இந்­தி­யாவின் பாது­காப்பு ஈழ தமி­ழர்­களை பாது­காப்­பதில் தங்­கி­யுள்­ளது!

லங்கை தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெறும் ஆறாம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழா மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இன அழிப்பில் இருந்து தமிழ் மக்களை பாதுகாத்துக்கொள்வதற்கு சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டி கட்டமைப்பே தீர்வு என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதை பெற்றுக்கொடுக்கும் பாரிய கடப்பாடு பாரத மக்களுக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒற்றையாட்சிக்குள் ...

Read More »