‘அகோரி’ படத்தின் முன்னோட்டம்!

டி.எஸ்.ராஜ்குமார் இயக்கத்தில் சாயாஜி ஷிண்டே, ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அகோரி’ படத்தின் முன்னோட்டம்.

அறிமுக இயக்குநர் டி.எஸ்.ராஜ்குமார் இயக்கத்தில் சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘அகோரி’. மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே.மேனன் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஸ்ருதி ராமகிருஷ்ணன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். மேலும் மைம் கோபி, சித்து, டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி, கார்த்தி, ‘கலக்கப்போவது யாரு’ சரத் ஆகியோரும் நடித்துள்ளனர்.
அகோரி
கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற புதிய கலைஞர்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டமே கதை. இது ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படம். ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினருக்குமான வணிக அம்சங்கள் படத்தில் இருக்கும் படி உருவாகியிருக்கிறது. ஃபோர் மியூசிக் எனும் நான்கு இசையமைப்பாளர்களின் கூட்டணி இப்படத்திற்கு இசையமைக்கின்றனர்.