குமரன்

புதிய அவதாரம் எடுத்த நடிகை காவேரி கல்யாணி!

கண்ணுக்குள் நிலவு, சமுத்திரம், காசி படங்களில் நடித்து பிரபலமான நடிகை காவேரி கல்யாணி, தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார். மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழில் கண்ணுக்குள் நிலவு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் காவேரி கல்யாணி. இப்படத்தை தொடர்ந்து சமுத்திரம், காசி உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். தற்போது காவேரி கல்யாணி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். கே 2 கே புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தமிழ், தெலுங்கு ஆகிய ...

Read More »

ஆர்யாவுக்காக உருகிய சாயிஷா

ஆர்யாவை திருமணம் செய்து ஓராண்டு ஆன நிலையில், அவருக்காக உருகி ட்விட்டரில் ஒரு பதிவு செய்திருக்கிறார் சாயிஷா. கஜினிகாந்த் என்ற படத்தில் ஆர்யாவுடன், சாயிஷா இணைந்து நடித்தார். அப்போது இருவரும் காதலிக்கத் துவங்கினர். சில காலத்துக்குப் பின், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து, கடந்த ஆண்டு மார்ச் 10ல், ஐதராபாத்தில் மிகப் பிரம்மாண்டமாக தங்களுடைய திருமண விழாவை நடத்தினர். அதில் திரையுலகம் மற்றும் அரசியல் உலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு இருவரையும் வாழ்த்தினர். இருவரும் திருமணம் செய்து கொண்டு ஓராண்டு ...

Read More »

அவுஸ்திரேலியாவில் சிறிய ரக விமான விபத்து : 5 பேர் உயிரிழப்பு!

அவுஸ்திரேலியாவில் சீரற்ற வானிலை காரணமாக சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செயதிகள் தெரிவிக்கின்றன. வட அவுஸ்திரேலிய மாநிலமான குயின்ஸ்லான்ந்து பகுதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று காலை 11.30 மணியளவில் பறந்துக்கொண்டிருந்து விமானம் சீரற்ற காலநிலயை தொடர்ந்து காணாமல் போயுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றதை அடுத்தே , அந்நாட்டின் பூர்வீக சமூக குடியேற்றமான லாக்ஹார்ட் கடற்கரை அருகே விமானத்தின் பாகங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே விமானம் அப்பகுதியில் விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

தேர்தலில் உள்நாட்டு, சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 6000 கண்காணிப்பாளர்கள்!

நாடாளுமன்றத் தேர்தலில் உள்நாட்டு மற்றும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 6000 கண்காணிப்பாளர்களை, கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தவுள்ளதாக, பெப்ரல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்காக, சர்வதேச நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் 40 பேர் இலங்கை வர உள்ளதாக, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார். வேட்புமனு கையளிக்கும் நாள் தொடக்கம் கண்காணிப்புச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆசிய தேர்தல் கண்காணிப்பு நிலையத்தைச் சேர்ந்தவர்களும் இத்தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர். வேட்புமனுக்கள் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி ...

Read More »

வாக்காளர்களைக் குழப்பியுள்ள தமிழ் அரசியல்வாதிகள்!

ஜனநாயகத்துக்கான ஆதாரமாக  இருக்கும்  தேர்தல் என்ற ‘மக்கள் சக்தி’க்கு, இலங்கை தேசம் சற்றும் சளைத்ததில்லை என்பது போல், அடுத்தடுத்துத் தேர்தல்களைச் சந்திக்கத் தயாராகின்றது நாடு. அந்தவகையில், ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத்துக்கான தேர்தல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் கைகளைப் பலப்படுத்தும் முனைப்போடு, தென்னிலங்கையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பெருந்தேசிய கட்சிகளில் ஒன்றான ஐ.தே.க, இரண்டாகப் பிளவுபட்டுக் கிடக்கின்றது. எனவே, தென்னிலங்கையில் ராஜபக்‌ஷ அணியின் வெற்றி என்பது, தற்போதைய அரசியல் நிலைவரப்படி, ஓரளவு உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற ...

Read More »

இலங்கையர் ஒருவருக்கு கொரோனா!

இலங்கையர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டும் ஒருவருக்கே இவ்வாறு, கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டது. அவர், ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தாலி சுற்றுலா பயணிக்கு வழிகாட்டியவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

Read More »

கோவிட்-19 பெயரில் கணினி வைரஸ் தாக்குதல் !

கோவிட்-19 காய்ச்சல் அச்சுறுத் தலைப் பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களை குறிவைத்து கணினி வைரஸ் தாக்குதல் நடத்தப் படுவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதையும் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது. இந்த காய்ச்சல் தொற்று ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது. இந்த அறிவுரைகள் இ-மெயில், இணையதளம், சமூக வலைதளங்கள் மூலமாக பரப்பப் பட்டு வருகின்றன. தற்போது கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தலைப் பயன் படுத்தி கார்ப்பரேட் நிறுவனங் களை குறிவைத்து கணினி வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டு வருவது ...

Read More »

ஆயிரம் பேர் கிரீஸ் எல்லையில் தடுத்து நிறுத்தம்

துருக்கியில் இருந்து கிரீஸ் எல்லை வழியாக கடந்த 24 மணி நேரத்தில் சட்ட விரோதமாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 963 பேரை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகவும் முக்கிய இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அந்நாட்டு அரசுப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மீதும் ரஷியா உதவியுடன் சிரியா ராணுவம்  தாக்குதல் நடத்திவருகிறது. ஆனால், கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகிறது. சிரியா மற்றும் துருக்கி என இரு நாடுகளுக்கும் இடையே நடந்த சண்டையில் ...

Read More »

எங்களுக்கு பெவன் அல்லது டோனி போன்ற பினிஷர் தேவை!

ஆஸ்திரேலிய அணிக்கு பெவன் அல்லது டோனி போன்ற பினிஷர் தேவை என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். ஒயிட்-பால் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் பெவன் மற்றும் இந்தியாவின் எம்எஸ் டோனி ஆகியோர் தலைசிறந்த பினிஷர் என்றால் அது மிகையாகாது. இவர்களை போன்ற ஒரு பினிஷர் ஆஸ்திரேலிய அணிக்கு தேவை என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘கடந்த காலத்தில் நாங்கள் மைக் ஹசி அல்லது மைக்கேல் பெவன் ஆகியோரை ...

Read More »

வைரலாகும் ஜெயம் ரவியின் பூமி!

லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் பூமி படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கோமாளி படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக நடிக்கும் படம் ‘பூமி’. ரோமியோ ஜூலியட், போகன் போன்ற படங்களை இயக்கிய லக்‌ஷ்மண் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இமான் இந்த படத்திற்கு இசையமத்துள்ளார். விவசாயத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இது ஜெயம் ரவிக்கு 25-வது படமாகும். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ...

Read More »