சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.சண்முகராஜா இன்று காலை காலமானர். கடந்த 55 வருடகால ஊடக அனுபவத்தைக் கொண்ட சிரேஷ்ட ஊட கவியலாளரான இவர் சிந்தாமணி, சூடாமணி, வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் தொடர்ச்சியாக பணியாற்றி வந்தவராவார். கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த இவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று காலை தனது 85 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு ஊடக அமைப்புகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிக்கிரியைகள் நாளைய ...
Read More »குமரன்
வடக்கு மாகாணத்தில் மேலும் 16 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ்
வடக்கு மாகாணத்தில் மேலும் 16 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 3 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் பருத்தித்துறை மருத்துவ அதிகாரி பிரிவில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 244 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் 6 பேருக்கு தொற்றுள்ளது என அறிக்கையிடப்பட்டுள்ளது. இவர்களில் மூவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள். சிறைச்சாலைகளிலிருந்து ...
Read More »ஆஸ்திரேலிய அகதிகள் கொள்கையினால் நிகழ்ந்த உயிரிழப்பு
அண்மையில், ஆஸ்திரேலியாவில் உயிரிழந்த அகமது முகமது எனும் சோமாலிய அகதி முதன் முதலில் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த பொழுது அவரது காலில் தோட்டாவை சுமந்து கொண்டிருந்தார். ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த அவர் ஆஸ்திரேலியாவின் படகுக் கொள்கையினால் பல ஆண்டுகள் மனுஸ்தீவிலும் நவுருத்தீவிலும் உள்ள தடுப்பில் இருக்க வேண்டி வந்தது. நவுருத்தீவில் இருந்த பொழுது அவருக்கு ஏற்பட்ட இதயப்பிரச்னை இறுதியில் அவர் ஆஸ்திரேலியாவுக்குள் அழைத்து வரப்பட்ட போதிலும் அவரது உயிரைப் பறித்து விட்டது. ஆம், அவர் தனது 39வது பிறந்தநாளுக்கு அடுத்த நாளே இதயப்பிரச்னையில் உயிரிழந்து ...
Read More »இலங்கையில் 82 ஆயிரத்தைக் கடந்த கொரோனா நோயாளர்கள்
இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை 464 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 855 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை வெலிக்கடை சிறைச்சாலையில் 909 பேருக்கும் மஹசீன் சிறைச்சாலையில் 878 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மஹர சிறைச்சாலையில் 827 பேருக்கும் கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலையில் 450 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் ,இது வரையில் கொரோனா தொற்றில் இருந்து ...
Read More »இணையத்தில் வெளியான 2021 ஐமேக் விவரங்கள்
அப்பிள் நிறுவனத்தின் 2021 ஐமேக் மாடல் பற்றிய புது விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆப்பிள் நிறுவனம் சிறிய மேக் ப்ரோ மற்றும் 24 இன்ச் ஐமேக் சீரிஸ் மாடல்களை வெளியிட தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புதிய ஐமேக் பற்றிய விவரங்களும் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய ஐமேக் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஐமேக் சில்வர், ஸ்பேஸ் கிரே, ரோஸ் கோல்டு, ஸ்கை புளூ மற்றும் கிரீன் போன்ற நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. ...
Read More »விஜய்யின் ‘தளபதி 65’ படத்தில் சிவகார்த்திகேயன்?
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 65’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. நெல்சன் இயக்கும் படங்களில் சிவகார்த்திகேயன் பாடல்களை எழுதி வருகிறார். அந்தப் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி வருகின்றன. அந்தவகையில் ...
Read More »இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும்
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்தவேண்டும் என்பது உட்பட மூன்று கோரிக்கைகளைமுன்வைத்து லண்டனில் தமிழ் பெண்ணொருவர் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். புலம்பெயர் லண்டனில் வசிக்கும் அம்பிகா செல்வகுமார் என்ற பெண்மணியே சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் பிரிட்டன் சமர்பித்துள்ள தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பரிந்துரைத்தல் சர்வதேச சுயாதீன புலனாய்வுப் பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் இலங்கைக்கான ஐ.நா. நிரந்தர சிறப்புப் பிரதிநிதியை நியமித்தல் போன்றவற்றை உள்ளடக்க வேண்டும் என ...
Read More »தண்ணிமுறிப்பு கிராம மக்களின் விவசாய நடவடிக்கைக்கு தடை
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு கிராமத்தில் போர் சூழல் காரணமாக கைவிடப்பட்ட தனது காணியை துப்பரவு செய்து எல்லையிட்டு விவசாய நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கோடு பணியில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவரை பௌத்த தேரர் தலைமையிலான தொல்லியல் திணைக்கள குழுவினர் அச்சுறுத்தி காவல் துறை மற்றும் வனவள திணைக்களத்தினரை அனுப்பி வேலைகளுக்கு தடைவிதித்த சம்பவம் நேற்று மாலை (27)இடம்பெற்றுள்ளது. தண்ணிமுறிப்பு கிராம சேவகர் பிரிவில் குமுளமுனை தண்ணிமுறிப்பு குள வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள பேரானந்தம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தினை துப்பரவு செய்து டோசர் இயந்திரம் மூலம் காணியை ...
Read More »விரைக தமிழர்களே, அதிகத் தொலைவில்லை – வைரமுத்து
விரைக தமிழர்களே, அதிகத் தொலைவில்லை ஆஸ்கார் என்று கவிபேரரசு வைரமுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார். சமீபத்தில் வெளியான என்றாவது ஒருநாள், க/பெ ரணசிங்கம் மற்றும் சியான்கள் ஆகிய திரைப்படங்கள் சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருதுகளை பெற்றது. இந்த திரைப்படங்கள் தமிழ் திரைப்பட உலகிற்கு பெருமையை சேர்த்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து வைரமுத்து அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ‘என்றாவது ஒருநாள்’, ‘க/பெ ரணசிங்கம்’, ‘சீயான்கள்’ – ஆகிய திரைப்படங்கள் சர்வதேச விருது கொண்டது பெருமிதம் தருகிறது. முதலிரு ...
Read More »76 பேருக்கு எதிராக அமெரிக்கா விசா கட்டுப்பாடுகள் அறிவிப்பு
வெளிநாடுகளில் உள்ள அதிருப்தியாளர்களை அச்சுறுத்துவதாக கூறி சவுதி அரேபியாவை சேர்ந்த 76 தனிநபர்களுக்கு எதிராக அமெரிக்கா விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, அமெரிக்காவின் பிரபல பத்திரிகையில் சவுதி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் கட்டுரைகளை எழுதி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியாவின் தூதரகத்துக்கு சென்ற ஜமால் படுகொலை செய்யப்பட்டார். சவுதி அரேபியா அரசு தான் இந்த கொலையைத் திட்டமிட்டு நிகழ்த்தியதாக துருக்கி திட்டவட்டமாகக் ...
Read More »