இணையத்தில் வெளியான 2021 ஐமேக் விவரங்கள்

அப்பிள் நிறுவனத்தின் 2021 ஐமேக் மாடல் பற்றிய புது விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஆப்பிள் நிறுவனம் சிறிய மேக் ப்ரோ மற்றும் 24 இன்ச் ஐமேக் சீரிஸ் மாடல்களை வெளியிட தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புதிய ஐமேக் பற்றிய விவரங்களும் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய ஐமேக் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இத்துடன் புதிய ஐமேக் சில்வர், ஸ்பேஸ் கிரே, ரோஸ் கோல்டு, ஸ்கை புளூ மற்றும் கிரீன் போன்ற நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் போர்ட்கள் 2020 ஐமேக் மாடல்களில் இருந்ததை போன்றே வழங்கப்படலாம். புதிய ஐமேக் மாடல்களின் போர்ட்கள் வெவ்வேறு இடங்களில் வழங்கப்படலாம்.
புதிய ஐமேக் பேஸ் ஐடி போன்ற அம்சங்களை கொண்டிருக்காது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஐபேட் ப்ரோ, மேக்புக் ப்ரோ மாடல்களுடன் ஏர் டேக்ஸ் மற்றும் ஆப்பிள் ஏர்பாட்ஸ் போன்ற சாதனங்கள் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது