குமரன்

அச்சத்தில் அகதிகள்….குறுகிய காலத்தில் நேர்காணல்

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய அகதிகள், தங்களது தஞ்சக்கோரிக்கை விண்ணப்பங்கள் பரிசீலணைக்காக பல ஆண்டுகளாக காத்திருந்த நிலையில் திடீரென இரண்டு வாரங்களில் நேர்காணல் எனும் அறிவிப்பு ‘போதுமான காலமல்ல’ என அகதிகளின் வழக்கறிஞர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கை பரிசீலணை வேகப்படுத்தப்பட்டுள்ளதனால், அந்நாட்டில் பல ஆண்டுகளாக வசித்து வரும் சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட அகதிகள் அச்சத்தில் உள்ளனர். கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த பல அகதிகள் ஆஸ்திரேலிய உள்துறையுடனான இந்த நேர்காணல்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் பாதுகாப்புக் கோரியுள்ள இந்த அகதிகள் ...

Read More »

அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் அடைபட்டிருக்கும் ஈழ தமிழ் சிறுமிகளின் கதை!

5 வயதாகும் கோபிகா தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாமில் அடைப்பட்டுக் கழித்து வருகிறார். 2019-ஆம் ஆண்டு கோபிகாவின் குடும்பம் கிறிஸ்துமஸ் தீவில் உள்ள அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுற்றிலும் வேலியிடப்பட்ட 24 மணி நேரக் கண்காணிப்பில் உள்ள வளாகத்தில் அவர்கள் அடைக்கப்பட்டனர். கோபிகாவுக்கு நண்பர்கள் வைத்திருக்கும் பெயர் கோபி. அவருக்கு பள்ளி செல்ல அனுமதி உண்டு. ஆனால் காவலர்களின் வேனில்தான் செல்ல வேண்டும். பள்ளி மட்டும்தான் கோபிகாவுக்கு கவலைகளை மறக்கும் மகிழ்ச்சியான இடம். “நம்மை ஏன் அவர்கள் ...

Read More »

முதல்முறையாக இணைந்து நடிக்கும் உதயநிதி – அருள்நிதி?

நடிகர் உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தில் அருள்நிதியுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.வாக தேர்வாகி உள்ளார். அரசியலில் பிசியாக இருந்தாலும், படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார் உதயநிதி. இவர் கைவசம் ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக், கண்ணை நம்பாதே, ஏஞ்சல் போன்ற படங்கள் உள்ளன. இந்நிலையில், இவர் நடிக்க உள்ள ...

Read More »

மே 18 – இனப்படுகொலை நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால், தமிழ் இனப்படுகொலை 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் ; நினைவு வழமைபோன்று, திட்டமிட்டபடி, இவ்வாண்டும் மே 18 அன்று, கொவிட் 19 சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முள்ளிவாய்க்கால் தமிழர் அடக்குமுறைக்கெதிரான எழுச்சிமையம். அடக்குமுறைக்கெதிரான விடுதலைப் போராட்டங்கள் அணுகுமுறை சார்ந்து& பின்னடைவுகளைச் சந்திக்கின்றனவே தவிர, விடுதலை பெறும் வரை ஓய்ந்துவிடுவதில்லை என விடுதலைப் போராட்ட வரலாற்றியல் எமக்குக் கற்பித்திருக்கின்றது . முள்ளிவாய்க்காலும் இதற்கு விதிவிலக்கல்ல ...

Read More »

செய்த உதவிகளை வெளியே சொல்வதில் விருப்பமில்லை

கொரோனா காலகட்டத்தில் நடிகர் நடிகைகள் உதவ மனம் இல்லாமல் இருக்கிறார்கள் என்று விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் அமிதாப் பச்சன் விளக்கம் அளித்துள்ளார். இந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஏற்கனவே கொரோனா தொற்றில் சிக்கி சிகிச்சை பெற்று மீண்டார். சில வாரங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் உயிர் இழந்த சம்பவமும், மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக வெளியாகும் தகவல்களும் அமிதாப்பச்சனை கவலையடைய வைத்துள்ளது. இதையடுத்து டெல்லியில் உள்ள கொரோனா சிகிச்சை மருத்துவ மையத்துக்கு அமிதாப்பச்சன் ரூ.2 கோடி ...

Read More »

டிசம்பருக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: ஆஸ்திரேலியா திட்டம்

மற்ற நாடுகளை விட எல்லையை மூடுவதில் சற்றும் தயங்காத ஆஸ்திரேலியா, வயது வந்த அனைவருக்கும் டிசம்பருக்குள் தடுப்பூசி செலுத்த முடிவு செய்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றை ஆஸ்திரேலியா வித்தியாசமாக எதிர்கொண்டது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் உலகளவில் பரவியது போது உடனடியாக நாட்டின் எல்லையை மூடியது. மாநிலங்களுக்கு இடையிலும் கடுமையான கட்டுப்பாட்டை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று வெகுவாக குறைந்தது. நாடு தழுவிய கொரோனா தொற்று என்பதை முறியடித்தது. தற்போது உருமாறிய கொரோனா 2-வது அலை, 3-வது அலை ...

Read More »

மே 18ஐ இனப்படுகொலை நாளாகவும் செப நாளாகவும் அனுஷ்டிக்க வட,கிழக்கு ஆயர் மன்றம் அழைப்பு

வடக்கு – கிழக்கு ஆயர் மன்றத் தால் மே மாதம் 18ஆம் திகதி குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. போரில் பலியானோரை நினைவுகூரும் தினம் என்று குறிப்பிடப்பட்டு வெளியிடப் பட்டுள்ள குறித்த அறிக்கையில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கி. நோயல் இம்மானுவேல், யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம், மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இம்மானுவேல் பெர்னாண்டோ, மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு யோசப் பொன்னையா ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளனர். அந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு:- “மே ...

Read More »

யாழில் 35 பேர் உட்பட வடக்கில் மேலும் 55 பேருக்கு கொவிட்-19 தொற்று

யாழ்ப்பாண மாவட்டத்தில் 35 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 55 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் ஆயிரத்து 18 பேரின் மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 35 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 6 பேரும், வவுனியா மாவட்டத்தில் 7 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ...

Read More »

அவுஸ்திரேலிய அரசினால் நாடு திரும்புவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்பில் வழக்கு தாக்கல்

அவுஸ்திரேலியா – மெல்பன் பகுதியினை சேர்ந்த நபரொருவரினால் இந்தியாவிலிருந்து மீண்டும் நாடு திரும்புவதற்கு அரசினால் விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தியாவில் சிக்கியுள்ள மெல்பன் குடியிருப்பாளரான 73 வயதான Gary Newman என்பவரே இவ்வாறு வழக்கு தொடர்ந்துள்ளார். இவர் 14 நாட்கள் இந்தியாவில் தங்கியிருந்ததால், அங்கிருந்து நாடு திரும்புவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனை எதிர்த்து, அவர் அரசின் மேல் வழக்கு தொடுத்துள்ளார். அரசின் தடை உத்தரவானது அவரது தனியுரிமை மீறல் என்று இதன்போது அவரது வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர். இந்நிலையில், தேசிய ...

Read More »

இருண்ட யுகத்தை நோக்கி நகரும் ஊடக சுதந்திரமும், கருத்து வெளிப்பாட்டு உரிமையும்

ஊடக சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை. அது ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாகும். எங்கு ஊடக சுதந்திரம் ஒடுக்கப்படுகின்றதோ அங்கு அராஜகம் தலைதூக்கும்; அநியாயங்களே கோலோச்சும். இதற்கு உலக வரலாறுகள் அழிக்க முடியாத சான்றுகளாகத் திகழ்கின்றன. ஜனநாயகம் நிலவுவதாகக் கூறப்படுகின்ற நாடுகளில் தொடர்ச்சியாக அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அரசியல்வாதிகள் அடிப்படை உரிமைகளையும், மனித உரிமைகளையும், ஜனநாயக உரிமைகளையும் மதிப்பதில்லை. அவற்றைப் பேணுவதில் உரிய கவனம் செலுத்துவதுமில்லை. ஆனால் ஊடகவியலாளர்களையும், ஊடக நிறுவனங்களையும் தங்கள் கைகளுக்குள் வைத்துக் கொள்வதற்காகவும், தமது அதிகார எல்லைக்குள் ...

Read More »