கடந்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் வைத்தியர் ஒருவர் தொடர்பில் சிங்களப் பத்திரியொன்று சர்ச்சைக்குரிய செய்தியொன்றை வெளியிட்டிருந்த நிலையில், குறித்த வைத்தியரை காவல் துறையினர் நேற்றிரவு கைதுசெய்துள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இவ்வாறு கைது செய்யப்பட்ட வைத்தியர் 42 வயதுடைய சேகு ஷியாப்தீன் மொஹமட் ஷாபி எனவும் குறித்த வைத்தியர் குருணாகல் வைத்தியசாலையில் கடமையாற்றுபவர் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். சந்தேகத்திற்குரிய முறையில் வருமானம் ஈட்டியமை தொடர்பிலேயே குறித்த வைத்தியர் காவல் துறையால் கைதுசெய்யப்பட்டள்ளதாக காவல் துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ...
Read More »குமரன்
காவல் துறை உத்தியோகத்தர் கொலை சம்பவம்; சந்தேகநபர்கள் 3 பேர் கைது !
மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை காவல் துறை நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கருணா ஆயுதகுழுவின் முன்னாள் உறுப்பினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டதோடு , மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்தை எதிர்வரும் 11ஆம் திகதி தோண்டி எடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக சி.ஜ.டியினர் தெரிவித்தனர். கடந்த 2008 ஆம் ஆண்டு கொக்கட்டிச்சோலை காவல் துறை நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த பிரசன்னா என்ற காவல் துறை உத்தியோகத்தர் கடமைமுடிந்து பொலிஸ் நிலையத்தில் இருந்து வீடு திரும்பிய நிலையில் அவர் ...
Read More »அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி!
ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்கும் மோடியை சந்திக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அபார வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ள மோடிக்கு பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டாவது ...
Read More »மே 18யை நினைவுகூரல்: சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் அப்பால்!
போர் முடிந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. கடந்த 10 ஆண்டுகளாக ஈழத்தமிழர் வாழும் நாடுகள் எங்கும் மே 18 நினைவுகூரப்படுகிறது. இந்த நினைவுகூரலின் சமூகப் பெறுமானம் என்ன என்ற கேள்வியை இப்போதாவது நாம் கேட்டாக வேண்டும். மே 18 நினைவுகூரல்கள், மெழுகுதிரி ஏற்றுதல், அஞ்சலி, நீதிக்கான கோரிக்கை, வீரப்பேச்சுக்கள் என்பவற்றுடன் முடிகின்றன. ஒரு மே, அடுத்த மே, அதற்கத்த மே என ஆண்டுகள் பத்து கடந்துவிட்டது. இப்போது மே18 ஆண்டு நாட்காட்டியில் சடங்குக்கு உரிய ஒரு தினம் மட்டுமே. பத்தாண்டுகளைப் பின்னோக்கியும் முன்னோக்கியும் பார்க்குமிடத்து ...
Read More »2019 அப்பிள் -எதிர்பார்க்கப்படும் முக்கிய அறிவிப்புகள்!
அ ப்பிள் நிறுவனத்தின் 2019 டெவலப்பர்கள் நிகழ்வில் அதிகம் எதிர்பார்க்கப்படும் முக்கிய அறிவிப்புக்கள் சார்ந்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். அப்பிள் நிறுவனத்தின் 2019 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு (WWDC 2019) ஜூன் 3 காலை 10.00 மணி (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) துவங்குகிறது. கீநோட் உரையுடன் துவங்கும் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு கலிஃபோர்னியாவின் சான்ஜோசில் 0ள்ள மெக் எனர்ஜி கன்வெஷன் சென்டரில் நடைபெறுகிறது. முந்தைய ஆண்டுகளை போன்று இந்த ஆண்டு கீநோட் உரையும் அப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் WWDC ...
Read More »அவுஸ்திரேலியர்களின் விருப்பத்துக்குரிய வாகனம் விடைபெறுகின்றது!
அவுஸ்திரேலிய குடும்பங்களின் விருப்பத்துக்குரிய வாகனமாக நீண்டகாலம் சந்தையில் கோலோச்சிய Toyota Tarago 36 வருடங்களுக்கு பிறகு விடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Toyota நிறுவனம் இந்த விடயம் அறிவித்துள்ளது. 1983 இல் சந்தைக்கு வந்த இவ்வாகனம் உடனடியாகவே அவுஸ்திரேலிய குடும்பங்களின் விருப்பத்துக்குரியதாக மாறியது. 80 – 90 களில் பெரிய குடும்பங்களின் விருப்பத்துக்குரிய வாகனமாக வசீகரித்துக்கொண்ட – 12 ஆசனங்களைக்கொண்ட – Toyota Tarago சுமார் ஒரு லட்சம் வாகனங்கள் விற்கப்பட்டன என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால், கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இந்த வாகனத்தின் ...
Read More »நீதித்துறை மீண்டும் தோல்வி!
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களால் ஏற்பட்ட சூழ்நிலைகள், இரண்டு முக்கியமான விடயங்களைப் பலரது கண்களில் இருந்தும் மறைத்து விட்டன. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலை, அதில் ஒன்று. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், மேஜர் பிரபாத் புலத்வத்த என்ற இராணுவப் புலனாய்வு அதிகாரி, மீண்டும் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பது இன்னொன்று. சாதாரணமானதொரு சூழ்நிலையில் இந்த இரண்டும் நிகழ்ந்திருந்தால், அது பெரிய எதிர்விளைவுகள், போராட்டங்கள், சர்ச்சைகளை ...
Read More »‘ஊசியை வைத்தே அம்மாவின் சடலத்தை கண்டேன்’!
ஆலயத்துக்கு சென்ற எனது அம்மாவும் இறந்துவிட்டாரென மாமா சொன்னார். அம்மா சென்றிருந்த ஆலையத்து ஓடோடிச் சென்றேன். ஆனால், காவலில் நின்றிருந்தவர்கள், உள்ளே செல்வதற்கு என்னை அனுமதிக்கவில்லை என சாட்சியமளித்த ஒரு தாயின் மகன், அம்மாவின் கொண்டை ஊசி மற்றும் வௌ்ளை நிறத்திலான தோடு ஆகியவற்றை வைத்தே, அம்மாவின் சடலத்தை அடையாளம் கண்டேன் என, கண்ணீர் மல்க, சாட்சியளமளித்தார். கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மரண விசாரணை, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன, நேற்று (23) இடம்பெற்றது. விசாரணையை, ...
Read More »ஐ.நா.வின் விசேட பிரதிநிதியை நியமிக்க வேண்டும்!
வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்கு ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு ஒன்றை இலங்கையில் அமைக்க வேண்டும் எனவும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன் ஐ.நா. செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்ரஸுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். வடக்கு, கிழக்கில் பெருமளவில் இராணுவம் குவிக்கப்பட்டு தமிழர் நிலங்களில் இராணுவ அனுசரணைகளுடன் குடியேற்றங்கள் நடைபெறுவதாகவும் ...
Read More »தற்கொலைக் தாக்குதல்தாரிகளுக்கு வீடு கொடுக்க உதவி புரிந்தவர் கைது!
சாய்ந்தமருது பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்தாரிகளுக்கு தங்குவதற்கு வீடு பெற்றுக் கொடுப்பதற்கு உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வந்த இளைஞனை கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஐ.எம். றிஸ்வான் புதன்கிழமை (22) விடுதலை செய்துள்ளார். சஹ்ரான் குழுவினருக்கு வீடு பெற்றுக் கொடுப்பதற்கு உதவி புரிந்துள்ளாரென சந்தேகத்தின் பேரில் கடந்த 02 வாரங்களுக்கு முன்னர் பொலிஸாரினாலும், குற்றப்புலனாய்வு அதிகாரிகளாலும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குறித்த இளைஞன்கைது ...
Read More »