குமரன்

ஆதரவு அளிப்பதா? இல்லையா?- நாளைமறுதினம் தீர்மானம்!

நாடாளுமன்ற நம்பிக்கைப் பெரும்பான்மை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவுக்கே உள்ளது என்ற பிரேரணையை புதன்கிழமை கொண்டு வருவதற்கு அக்கட்சி தீவிர முயற்சி எடுத்துள்ள நிலையில் அதற்கு ஆதரவு அளிப்பதா? இல்லையா? என்ற தீர்மானத்தைக்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை மறுதினம் எடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர்  எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்துள்ளார்.

Read More »

மும்பை தாக்குதலை நடத்தியது ‘லஷ்கர் இ-தொய்பா’ இயக்கம்தான்!

2008-ம் ஆண்டு மும்பையில் தாக்குதலை நடத்தியது ‘லஷ்கர் இ-தொய்பா’ இயக்கம்தான் என்று பாகிஸ்தான் முதல் முறையாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டு உள்ளது. இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பைக்குள் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்திகதி கடல் வழியாக புகுந்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் 10 பேர் நகரின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியாலும் கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை உலக நாடுகள் வன்மையாக கண்டித்தன. தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ-தொய்பா ...

Read More »

இரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா?

இரண்டு வருடங்களின் பின் இரணைமடு முழுமையாக நிரம்பியிருக்கும் காட்சியினை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்றார் கிளிநொச்சியின் மூத்த விவசாயி ஒருவர் அவர் மட்டுமல்ல விவசாயத்துறைக்கு வெளியால் உள்ள பலரும் இரணைமடுவை பார்த்து பூரிப்படைகின்றனர். இரணைமடுவின் கீழ் நேரடியாக பயன்பெறுகின்றவர்கள் முதல் எந்தப் பயனையும் பெறாதவர்கள் என கிளிநொச்சியில் அனைவரும் இரணைமடுவை தங்களின் ஒரு பொக்கிசமாக நோக்குகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் அமைந்துள்ள இரணைமடுகுளத்திற்கு வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து பிரதானமாக கனகராயன் ஆற்றின் ஊடாக நீர் வருகிறது. ஆனால் இரணைமடுகுளத்தின் நீர்பாசனத்திணைக்கள நிர்வாகம் மற்றும் அதன் ...

Read More »

தனுஷ் – அனிருத்தை இணைத்து வைத்த ரஜினி!

‘2.0’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் ‘பேட்ட’. இப்படத்தின் பாடல்கள் இன்று (டிசம்பர் 9) வெளியாகவுள்ளது. பொங்கல் வெளியீடு என்பதால், விளம்பரப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு. இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் எனப் பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு, திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்திலிருந்து வெளியிடப்பட்ட ‘மரண மாஸ்’ மற்றும் ‘உல்லாலா’ ஆகிய பாடல்கள் ...

Read More »

துப்பாக்கியை உடனடியாக நீக்குங்கள்! – குயின்ஸ்லாந்து காவல் துறை

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள விளம்பர பலகையிலிருந்து துப்பாக்கி படத்தை நீக்குமாறு விளம்பரதாரர்களிடம் குயின்ஸ்லாந்து காவல் துறை ஆணையாளர் Ian Stewart கோரியுள்ளார். இறுக்கமான துப்பாக்கி மற்றும் ஆயுத தடைகளை பேணுகின்ற அவுஸ்திரேலியாவில் இவ்வாறான விளம்பரங்கள் தேவையற்றது என தெரிவித்துள்ளார். இவ்வாறான விளம்பரங்கள் மூலம் தூண்டுதல்களை மக்களுக்கு ஏற்படுத்தக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை அவரது கருத்துக்கு இணையதளவாசிகள் பலர் விமர்சனம் கூறி வருகின்றனர். இருப்பினும் ஏனையவர்கள் விழித்துக்கொள்வதற்கு முதல் நாங்கள் விழித்துக்கொள்ளவேண்டும் என குயின்ஸ்லாந்து காவல் துறை ஆணையாளர் Ian Stewart தெரிவித்துள்ளார்.

Read More »

ட்விட்டர் ஆன்ட்ராய்டு செயலியில் அற்புத அம்சங்கள்!

ஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கான ட்விட்டர் செயலியில் பல்வேறு புது வசதிகள் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. ட்விட்டர் ஆன்ட்ராய்டு தளத்தில் பல்வேறு புது வசதிகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், ட்வீட் எங்கிருந்து பதிவு செய்யப்பட்டது, வீடியோ பிளேபேக் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகிறது. எனினும் இந்த அம்சங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த அம்சங்கள் ஒருவேளை சோதனையிலோ அல்லது ஒவ்வொரு கட்டமாக வழங்கப்படலாம் என தெரிகிறது. இதனால் புது அம்சங்களை அனைத்து பயனர்களுக்கும் கிடைக்க சில காலம் ஆகும். புது வீடியோ ...

Read More »

தன் மரணத்தை தானே தேர்வு செய்த கைதி!

விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றினால் தனக்கு வலி அதிகம் இருக்கும் என்பதால் மின் அதிர்ச்சி மூலம் தமக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என கைதி ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தை சேர்ந்த டேவிட் ஏர்ல் மில்லர், 1981-ம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 36 ஆண்டுகள் சிறைவாசத்துக்கு பின்னர் நேற்றுமுன்தினம் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற ஏற்பாடுகள் நடந்தன. ...

Read More »

ஆஸ்திரேலியாவை 235 ஓட்டங்களில் சுருட்டியது இந்தியா!

அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி தனது நேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை 235 ரன்களில் சுருட்டியது. ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, புஜாரா (123) சதத்தால் 250 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஆரோன் பிஞ்ச் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் வந்த கவாஜா 28 ரன்னிலும், ஷேன் மார்ஷ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ...

Read More »

“மகாவம்சம்” எழுதப்பட்ட வரலாறு! – என்.சரவணன்

“மகாவம்சம்” மூல நூல் இலங்கையின் பண்டைய இதிகாசம் தொடக்கம் கி.பி 301 வரையான மாகாசேனன் மன்னரின் காலப்பகுதிவரை மகாநாம தேரரால் எழுதப்பட்டது. அது; முதல் 36 அத்தியாங்களைக் கொண்டது. 37வது அத்தியாயத்தை அவர் எழுதிக்கொண்டிருக்கும் மகாநாம தேரர் போது மரணமாகிவிட்டார். அது 50 செய்யுள்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் “அத்தியாயம் நிறைவுற்றது” என்று குறிப்பிட்ட அவர் 37வது அத்தியாயத்தில் அப்படி குறிப்பிடாததால் அவர் அந்த அத்தியாயத்தை முடிக்கவில்லை என்றும் தொடரவிருந்தார் என்றும் பல ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றன. 2வது தொகுதி 2வது தொகுதி கி.பி  ...

Read More »

விஜயகலாவின் வழக்கு ஒத்திவைப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கை, பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைத்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று(07) உத்தரவிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டமை தொடர்பிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கப்பெறாமையினால், குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read More »