சுமந்திரன் ஜெனீவா சென்று இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற பரிந்துரைகளைச் செய்துவிட்டு அதனை ஜனநாயகரீதியில் தாங்கள் முடிவெடுத்ததாக காட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாடகமே நேற்றையதினம் வவுனியாவில் நடைபெற்ற கூட்டம் அமைந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று (12) ஊடக சந்திப்பு ஒன்றினை மேற்கொண்ட அவர் தெரிவித்ததாவது, ஏற்கனவே ஒன்றரைவருடகால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் போர்க்குற்றவாளிகள் தொடர்பில் எந்த விசாரணையும் நடைபெறவில்லை. காணாமல் போனவர்கள்தொடர்பாக இதுவரை யாரும் கண்டறியப்படவில்லை. தொடர்ச்சியாக மனித ...
Read More »குமரன்
‘குவாண்டம்’ கணினி வந்துவிட்டது!
கணினி நிறுவனமான, ஐ.பி.எம்., சமீபத்தில் ‘குவாண்டம்’ ரக கணினி சேவையை, ஐ.பி.எம்.-க்யூ., என்ற பெயரில், கடந்த வாரம் அறிவித்து உள்ளது.தற்போதுள்ள கணினிகளால், கையாள முடியாத அளவுக்கு, ஏராளமான தகவல்களை, பல லட்சம் மடங்கு கையாள்வதோடு, பல்லாயிரம் மடங்கு வேகத்திலும் கையாளும் திறன் கொண்டவை, குவாண்டம் கணினிகள்.கடந்த சில மாதங்களாக, ‘குவாண்டம் எக்ஸ்பீரியன்ஸ்’ என்ற சேவையை, இணையம் மூலம் பல நிறுவனங்களுக்கு அளித்து, குவாண்டம் கணினி மூலம், சோதனைகளை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறது ஐ.பி.எம். விரைவில், வர்த்தக ரீதியில் குவாண்டம் கணினிகளை தயாரித்து விற்கவிருப்பதால், இவற்றுக்கு ...
Read More »பரத நாட்டியம் அல்ல; பரிதாப நாட்டியம்!- வலைதளங்களில் கிண்டல்
” ஐ.நா.,வின் பெண்களுக்கான நல்லெண்ண துாதராக நியமிக்கப்பட்டுள்ள ரஜினியின் மகளும், தனுஷ் மனைவியுமான ஐஸ்வர்யா, மகளிர் தினத்தை முன்னிட்டு, ஐ.நா.,வில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடத்தினார். பரிதாப …”, ” ஐ.நா.,வின் பெண்களுக்கான நல்லெண்ண துாதராக நியமிக்கப்பட்டுள்ள ரஜினியின் மகளும், தனுஷ் மனைவியுமான ஐஸ்வர்யா, மகளிர் தினத்தை முன்னிட்டு, ஐ.நா.,வில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடத்தினார். பரிதாப நாட்டியம்கவிஞர் வைரமுத்துவின் தாலாட்டு பாடலுக்கு, புதுமையான முறையில், ஐஸ்வர்யா நடத்திய பரத நாட்டியம், சமூக வலைதளங்களில் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. ‘ஐஸ்வர்யா ஆடியது பரத நாட்டியம் …” ...
Read More »யாழ்ப்பாணம், முல்லைத்தீவு வறுமைக்கோட்டில் முதலிடம்!
சிறீலங்காவில் வறுமைக்கோட்டுக்குட்பட்ட மாவட்டங்களில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்கள் முதலிடத்தில் உள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத்தின் தகவல் அறிக்கை தெரிவித்துள்ளது. வறுமைக்கோட்டு எல்லையைத் தீர்மானிக்கும், தனிநபர் ஒருவருக்கான மாத வருமான எல்லை, 2017 ஜனவரி மாதம், 4,207 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது பெப்ரவரி மாதம், 4,229 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 4,229 ரூபாவுக்குக் கீழ் தனிநபர் ஒருவரின் மாத வருமானங்கள் உள்ள மாவட்டங்கள் வறுமைக்கோட்டுக்குட்பட்டவையாக பட்டியல்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டம் ஆகக் கூடிய தனிநபர் வருமானம் உள்ள மாவட்டமாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு தனிநபர் ஒருவரின் மாத வருமானம், ...
Read More »கோலி படத்தை விலங்குகளுடன் வைத்து போலிங் நடத்திய அவுஸ்ரேலியா மீடியா
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் படத்தை விலங்குகள் படத்துடன் வைத்து அவுஸ்ரேலியா மீடியா ஒன்று கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. 11 பேர் பீல்டிங் செய்ய, இரண்டு பேர் பேட்டிங் செய்யும் கிரிக்கெட் விளையாட்டை பொதுவாக ‘ஜென்டில்மேன் கேம்’ என்று அழைப்பார்கள். இந்த விளையாட்டில் சில நேரங்களில் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் அது பெரும்பாலும் போட்டியின் உற்சாகத்தைப் பாதிக்காத வகையில் இருக்கும். இந்தியா- அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டியின்போது இரு அணி வீரர்களுக்கும் இடையில் அதிக அளிவில் ஸ்லெட்ஜிங் நடைபெற்றது. உச்சகட்டமாக ...
Read More »“எனக்கு அம்மாவாக வந்தவள் ஆனந்தி..!” – அஜய்
சின்னத்திரையில் ‘கனா காணும் காலங்கள்’, ‘ஜோடி நம்பர் ஒன்’, ‘கிச்சன் சூப்பர்ஸ்டார்’ என்று கலக்கிக் கொண்டிருந்த ஆனந்தி, ‘வாலு’, ‘மீகாமன்’, ‘தாரை தப்பட்டை’, ‘பறந்து செல்ல வா’ என வெள்ளித்திரையிலும் காலூற்றி நின்றிருக்கிறார். இந்த நிலையில், திடீர் என தனது திருமண புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தார் ஆனந்தி. ‘என்ன திடீர்னு கல்யாணம் பண்ணிட்டீங்க..?’ என்று ஆனந்தியை கேட்டபோது… “கொஞ்ச நாளாகவே வீட்டுல வரன் பார்த்திட்டு இருந்தாங்க. என்னைத் தேடி ஒரு நல்ல வரன் வந்தது. நான் அவரையே கெட்டியா பிடிச்சுக்கிட்டேன். உடனே நிச்சயதார்த்தம் ...
Read More »இந்தியாவின் முதல் பெண் கார் மெக்கானிக்
உத்திரபிரதேச மாநிலம், மீரட்டில் இருக்கும் டிம்மக்கியா எனும் கிராமத்தைச் சேர்ந்தவர், 24 வயதே நிரம்பியவர் பூனம் சிங். இவர் முக்காடு போட்டுக் கொண்டு செல்லும் வழக்கமான கிராமத்து பெண் அல்ல என்பதை, இவர் செய்யும் வேலையை வைத்தே சொல்லிவிடலாம். ஆம், ஆண்களுக்கான பணியாக அறியப்படும் கார் மெக்கானிக் வேலையை, இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் மாருதி சுஸூகி நிறுவனத்தின் மீரட்டைச் சேர்ந்த டீலர்ஷிப்பின் சர்வீஸ் சென்டரில் (Mann Service Center) இவர் செய்து வருகிறார்! ஆட்டோமொபைல் மெக்கானிக்கிற்கான பட்டப் படிப்பை அதிகாரப்பூர்வமாக முடித்திருக்கும் ...
Read More »தமிழீழ செயற்பாட்டாளர் ட்ரெவர் கிறான்ட் வணக்க நிகழ்வு!- அவுஸ்ரேலியா
அண்மையில் சாவடைந்த தமிழீழச் செயற்பாட்டாளர் ட்ரெவர் கிறான்ட் அவர்களின் வணக்கநிகழ்வு ஜெனிவாவில் முக்கிய உலகத்தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து நடத்தப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 10 – 03 – 2017 அன்று உள்ளுர் நேரப்படி மாலை ஆறு மணிக்கு மொன்பிறில்லியன்ற் என்ற மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. பொதுச்சுடரினை வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் ஈகச்சுடரினை மாவீரர்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவராலும் ஏற்றப்பட்டதை தொடர்ந்து தமிழ்ச்செயற்பாட்டாளர்கள்ட்றெவர் கிறான்ட் தொடர்பான நினைவுரைகளை ஆற்றினார்கள். மன்னார் சிவில் சமூகத்தை சேர்ந்த லியோவின் உறவினரும் மதகுருவுமான செபமாலை அவர்கள் உரையாற்றும்போது, அவுஸ்திரேலியாவில் லியோ ...
Read More »மொட்டை தலையுடன் நடிக்க வேண்டும் – அக்ஷ்ராஹாசன்
நடிகர் கமல்ஹாசனின் வாரிசு அக்ஷ்ராஹாசன். சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்று கனவோடு சில இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். ஆனால் இப்போது அவரும் நடிகையாக மாறிவிட்டார். பாலிவுட்டில், பால்கியின் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக ‛ஷமிதாப் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அக்ஷ்ரா, இப்போது ‛லாலி கி ஷாதி மெயின் லாடூ தீவானாஎன்ற படத்தில் நடிக்கிறார். இதுதவிர தமிழில் அஜித்துடன் ‛விவேகம் என்ற படத்திலும் நடிக்கிறார். தற்போது அவருக்கு ஒரு வித்தியாசமான ஆசை வந்துள்ளது. அதுவும் சினிமா நடிகைகள் ஏற்க தயங்கும் ஒரு வித்தியாசமான ...
Read More »‘ஏசி’க்களில் கவனம்!
வெயில் காலத்தில் ‘ஏசி’ விற்பனை அதிகம். குளிர்ச்சி வேண்டும் என்பதற்காக ‘ஏசி’யை 23 டிகிரிக்கும் குறைவாக வைக்கக் கூடாது. அப்போது ‘ஏசி’ அதிக பணிச்சுமைக்கு உட்பட்டு திணறும். ‘ஏசி’ மெஷின் பாகங்களின் வெப்ப நிலையும் அதிகரிக்கும். இதனால் தீப்பிடிக்கும் அபாயமும் ஏற்படுகிறது. ‘ஏசி’ ஓடிக் கொண்டிருக்கும் போது எக்காரணம் கொண்டும் ‘ரூம் ஸ்பிரே’ அடிக்கக்கூடாது. பெர்ப்யூம்கள் ‘ஏசி’ மெஷினின் உள்ளே இருக்கும் காயிலை பழுதாக்கி விடும். 1 டன் அளவுள்ள ‘ஏசி’யை விட, 1.5 டன் அளவுள்ள ‘ஏசி’யில் மின்சார நுகர்வு குறைவாக இருக்கும். ...
Read More »