emurasu

தென்னமரவடி மக்களின் மீள்குடியேற்றம்? – திருமலை நவம்

1984 ஆம் ஆண்டு தென்னமரவடி மக்கள் இனச்சங்காரத்தால் 10 உயிர்களை பறிகொடுத்தார்கள். குடியிருப்புக்கள் எரிக்கப்பட்டன. நூற்றாண்டு காலமாக பாரம்பரியமாக வாழ்ந்த அக்கிராம மக்கள் தமது சொந்த மண்ணை விட்டு வெளியேற வேண்டிய அவலத்துக்கு ஆளாக்கப்பட்டனர். கால் நூற்றாண்டு கால இடப்பெயர்வுக்கு பிறகு அந்த மக்கள் சொந்த ஊருக்குத் திரும்பியபோது வீடுகளிருக்கவில்லை. வயல்களும், வரம்புகளும் அயல் கிராமத்தவர்களால் கபளீகரம் செய்யப்பட்டிருந்தன. கனவுகளோடு திரும்பியவர்களுக்கு எஞ்சியிருந்தது தென்னமரவடி என்னும் நாமம் மட்டுமே. இவர்கள் சகல வசதிகளுடனும் மீளக்குடியேற்றப்பட வேண்டுமென்பதே எமது நோக்கமாகும். இவ்வாறு தெரிவித்தார் கிழக்கு மாகாண ...

Read More »

அவுஸ்திரேலியாவின் தற்காலிகவிசா! மறைந்துள்ள ஆபத்துகள்!!

பிரதான எதிர்கட்சியான தொழிற்கட்சியும் கிறீன்கட்சியும் இச்சட்டமசோதாவை கடுமையாக எதிர்த்தபோதும் வேறு தனித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பகீரத பிரயத்தனத்தின் மத்தியில் ஆளுங்கட்சி நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் அகதிகளாக இனங்காணப்படுவோருக்கு 3 ஆண்டுகள் தற்காலிகவதிவிட உரிமையும் அல்லது 5 ஆண்டுகள் துாரபிரதேசங்களில் தொழில்செய்து வாழும் உரிமையும் வழங்கப்படலாம். குறித்த விசாக்கள் காலாவதியாகும்போது அவர்கள் மீண்டும் தாம் அகதி என்பதை நிருபிக்கவேண்டும். இதனால் தமது நாடுகளில் கடுமையான ஆபத்துகளில் தப்பிவந்தவர்களுக்கு மீண்டும் வாழ்வில் நிச்சயமற்றநிலையை வழங்குவதன் மூலம் அவர்களை மீண்டும் உளரீதியாக கொடுமைப்படுத்துவதாக அகதிகளுக்கான சட்டத்தரணி டேவிட் மானே ...

Read More »

தந்தித் தோலைகாட்சியில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் காசி ஆனந்தன்

சிறிலங்காவின் பிரதமர் ரணில் வடக்கு முதல்வர் மீது காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ள நிலையில் தமிழர் பிரச்சனைகள் போராளிகளின் தியாகங்கள் தொடர்பாக விபரிக்கின்றார் காசி ஆனந்தன்

Read More »

அவுஸ்திரேலியாவில் நீதிக்கான நடைபயணமும் பேரணியும்

விசாரணையின்றி அடைத்துவைக்கப்பட்டிருக்கு அரசியல் கைதிகளின் விடுதலையை கோரியும், படையினரின் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழரின் வாழ்விடங்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரியும், படையினரிடம் சரணடைந்த அல்லது காணாமல்போகச்செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடைபெற்றது என்ற விபரத்தை வெளியிடுமாறு கோரியும் இப்பேரணி நடைபெற்றது. இன்று 15 – 03 – 2015 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு கிளன்வேவலி என்ற இடத்திலிருந்தும் காலை 10.30 மணிக்கு சண்சைன் என்ற இடத்திலிருந்து ஆரம்பித்த நடைபயணத்தில் 15 இற்கும் மேற்பட்டவர்கள் பங்குகொண்டனர். மாலை 3 மணிக்கு மெல்பேணின் மத்தியிலுள்ள State Library என்ற இடத்தையடைந்த ...

Read More »

தேர்தல், கூட்டமைப்பு தொடர்பாக கஜேந்திரகுமார்

1. எதிர்வரும் பொதுத்தேர்தலின்போது தமிழ்த்தேசிய மக்கள்முன்னனி தேர்தலில் போட்டியிடுமா? 2. தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து ஏன் வெளியேறவேண்டிய நிலையேற்பட்டது? 3. 13 ஆம் திருத்த தீர்வு ஏன் பொருத்தமற்றது? 4. ஒரு நாடு இரு தேசங்கள் என்ற தீர்வுயோசனை ஏன்? 5. கூட்டமைப்பை வழிக்கு கொண்டுவருதல் அல்லது மாற்றுத்தலைமை ஏன்? என பல விடயங்களை விளக்குகின்றார் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம்.

Read More »

ஆழ்கடல்கடந்த அவுஸ்திரேலியப் பயணம் (பகிர்வு)

மூன்று தசாப்தகாலமாக இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழ்மக்களின் தமிழீழ விடுதலைப் போராட்டம் கடந்த 2009-ல் மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிங்களப்பேரினவாத அரசு உலக வல்லாதிக்கசக்திகளின் உதவியுடன் இரும்புக்கரம்கொண்டு அடக்கப்பட்டது. இதன் பிற்பாடு வடக்கு கிழக்குவாழ் தமிழ்மக்கள் சிங்களப்பேரினவாதசக்திகளாலும் அதன் கைக்கூலிகளாலும் பல்வேறுவிதமான நெருக்கடிகளுக்கும் சொல்லொணாத்துன்ப துயரங்களுக்கும் முகம்கொடுத்துவருகின்றனர். இதன்விளைவாகவே குறிப்பாக 2009-ம்ஆண்டிற்குப்பின்னரான காலப்பகுதிகளில் இலங்கையிலிருந்து பல ஆயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்கள் படகுகளில் கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு வந்திருந்தமை யாவரும் அறிந்த விடயம். அதிலும் குறிப்பாக 2011-ம் 2012-ம்ஆண்டுகளில் இலங்கை அகதிகளுடன் அவுஸ்திரேலியாவை சென்றடைந்த படகுகள் தொடர்பான செய்திகளையும் அகதிகளை ...

Read More »

பலூன்!

“மாமா பெரிசாக ஊதாதையுங்கோ….. அப்பா….. மாமாவை ஊதவேண்டாம் என்று சொல்லுங்கோ…..“ என்று கண்கள் அகல விரிய முகத்தில் பயம பரவ சத்தமாக கத்தி அழுதுகொண்டு காதுகள் இரண்டையும் தனது பிஞ்சுக் கைகளால் பொத்திக்கொண்டு ஓடிப்போய் இரு கண்களையும் இறுக மூடிக்கொண்டு கதிரைகளுக்குப் பின்னால் மறைந்து கொண்டான் எட்மன். எட்மனுக்கு 9 வயது தான் ஆகிறது. அந்தக் குடும்பத்தில் மூத்த பையன். 5 வருடங்களின் முன்னர் அவன் மிகச் சுட்டிப்பையன். அவனது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது தத்தளிக்கும் அவனது பெற்றோரும் அம்மம்மாவும், 4 வயதிலேயே அவனது ...

Read More »

மெல்பேணில் மாவீரர் நாள் – 2014

தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. ஸ்பிறிங்வேல் நகர மண்டபத்தில் 27 – 11 – 2014 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற இந்நினைவெழுச்சிநாள் நிகழ்வில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தினர். சரியாக மாலை 6 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசின் அவுஸ்திரேலிய பிரதிநிதிகளில் ஒருவரும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட் டாளருமான திரு டொமினிக் சந்தியாப்பிள்ளை அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியத் ...

Read More »

அவுஸ்திரேலியா மெல்பேணில் தியாகி திலீபன் நினைவு நிகழ்வு – 2014

தியாகி லெப்.கேணல் திலீபன் நினைவாக ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் ‘தியாகதீப கலைமாலை’ நிகழ்வு இம்முறையும் மெல்பேணில் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.  திலீபனின் 27ஆவது ஆண்டுநினைவுகளை சுமந்தவாறு கடந்த சனிக்கிழமை 27 – 09 – 2014 அன்று  மெல்பேணில் அமைந்துள்ள சென்.ஜூட் மண்டபத்தில் மாலை 6 மணிக்கு தேசியக்கொடியேற்றலுடன் இந்நிகழ்வு தொடங்கியது. தியாகி லெப்.கேணல் திலீபன் நினைவாக ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் ‘தியாகதீப கலைமாலை’ நிகழ்வு இம்முறையும் மெல்பேணில் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.  திலீபனின் 27ஆவது ஆண்டுநினைவுகளை சுமந்தவாறு கடந்த சனிக்கிழமை 27 – 09 – 2014 அன்று ...

Read More »

மறைந்து போகும் நம் அடையாளங்கள்!

ஒவ்வொரு இனமும் தமக்கே உரித்தான தனித்துவமானஅடையாளங்களை தன்னகத்தே கொண்டுள்ளன. கலை,கலாச்சாரம்,பண்பாடு இவை யாவற்றிற்கும் மேலாக மொழி என்பது ஓர் இனத்தின் முக்கிய அடையாளமாகும். ஒவ்வொரு இனங்களும் தமதுஅடையாளங்களை நிலைநிறுத்துவதிலும் இவை அழிந்துபோகாமல் பாதுகாப்பதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கின்ற வேளை தமிழர்களாகியநாம் எவ்வளவுதூரம் எமதுஅடையாளங்களுக்கு முதன்மையளிக்கின்றோம் ? அதை அழியாது காக்க எவ்வளவு முயல்கின்றோம் என்றால் அது வருத்தத்திற்குரிய ஒன்றாகவே இருக்கின்றது. தமிழனுக்கே உரித்தான நாடு ஒன்று இதுவரை இல்லை எனினும் உலகில் தமிழரில்லாத நாடுகள் இல்லை எனும் அளவிற்கு பரந்து வாழ்கின்ற இனமாக தமிழினம் ...

Read More »