அவுஸ்திரேலியாவின் தற்காலிகவிசா! மறைந்துள்ள ஆபத்துகள்!!

பிரதான எதிர்கட்சியான தொழிற்கட்சியும் கிறீன்கட்சியும் இச்சட்டமசோதாவை கடுமையாக எதிர்த்தபோதும் வேறு தனித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பகீரத பிரயத்தனத்தின் மத்தியில் ஆளுங்கட்சி நிறைவேற்றியுள்ளது.

இதன்மூலம் அகதிகளாக இனங்காணப்படுவோருக்கு 3 ஆண்டுகள் தற்காலிகவதிவிட உரிமையும் அல்லது 5 ஆண்டுகள் துாரபிரதேசங்களில் தொழில்செய்து வாழும் உரிமையும் வழங்கப்படலாம்.

குறித்த விசாக்கள் காலாவதியாகும்போது அவர்கள் மீண்டும் தாம் அகதி என்பதை நிருபிக்கவேண்டும். இதனால் தமது நாடுகளில் கடுமையான ஆபத்துகளில் தப்பிவந்தவர்களுக்கு மீண்டும் வாழ்வில் நிச்சயமற்றநிலையை வழங்குவதன் மூலம் அவர்களை மீண்டும் உளரீதியாக கொடுமைப்படுத்துவதாக அகதிகளுக்கான சட்டத்தரணி டேவிட் மானே கூறுகின்றார்.

இச்சட்டமூலத்தின் மூலம் இதுவரை கிடப்பில் போடப்பட்டுள்ள 30000 அகதிகளின் விசா கோரிக்கையை தாம் விரைவில் பரிசீலனை செய்யவுள்ளதாகவும் உடனடியாகவே கிறிஸ்மஸ்தீவில் உள்ள 400இற்கும் மேற்பட்டவர்கள் அவுஸ்திரேலியாவிற்குள் அழைத்துவரப்படுவார்கள் என்றும் ஆளுங்கட்சியின் குடிவரவுத்துறை அமைச்சர் மொறிசன் தெரிவிக்கின்றார்.

இச்சட்டமூலத்தின் மூலம் குடிவரவுத்துறை அமைச்சர் கொண்டுள்ள ஆபத்தான அதிகாரங்கள்:

1. அகதிகள் படகை அவுஸ்திரேலிய கரையை அடையாமல் தடுப்பதுடன் அதனை வெளியகற்றி நடுக்கடலில் விட்டுவிடலாம்.

2.நன்னடத்தை அல்லது தேசியநலன்களை காரணம் காட்டி ஒருவருக்கு விசா வழங்காமல் விடலாம். உண்மையான காரணத்தை அமைச்சர் வெளிப்படுத்தவேண்டிய அவசியமில்லை.

3. அமைச்சரால் எடுக்கப்படும் தீர்மானத்தை நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பமுடியாது.

4. படகில் வந்தவர்கள் RRT எனப்படும் Refugges Review Tribunal க்கு விண்ணப்பிக்கமுடியாது.

5. அகதிகளை மீளவும் அவர்களது நாட்டுக்கு திருப்பியனுப்பகூடாது (non-refoulement) என்ற சர்வதேச விதிமுறை இனிமேல் பொருந்தாது. அவுஸ்திரேலியாவுக்கு என தனி நியமங்கள் உருவாக்கப்படும்.

6. சர்வததேச நடைமுறைகளின் கீழ் அகதி என இனங்காணப்படுவர் அவுஸ்திரேலிய நியமங்களின் கீழ் அகதி எனக்கூறவேண்டிய அவசியமில்லை. அவுஸ்திரேலிய நியமங்களே ஒருவர் அகதியா அல்லது இல்லையா என தீர்மானிக்கும்.

Leave a Reply