emurasu

அவுஸ்திரேலியா மெல்பேணில் தமிழர் விளையாட்டு விழா 2018

இந்தியச்சதியால் வங்கக்கடலில் 16 – 01 – 1993 இல் வீரகாவியமாகிய மூத்ததளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவாக ஆண்டுதோறும் விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடாத்தப்படுகின்ற மாபெரும் தமிழர் விளையாட்டுவிழா இந்த ஆண்டும் மெல்பேர்ணில் மிகவும் சிறப்பாக நடந்தேறியுள்ளது. 07-01-2018 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 8.30 மணிக்கு மெல்பேர்ண் கிழக்கு பேர்வூட் றிஸேவ் (East Burwood Reserve) மைதானத்தில் ஆரம்பமான இவ்விளையாட்டுவிழா நிகழ்வில் அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை இளைய தமிழ்த் தேசியச் செயற்-பாட்டாளர் செல்வன் பவித்திரன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் ...

Read More »

மெல்பேணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் நிகழ்வு – 2017

தமிழீழ விடுதலைப்போரில் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் தேசிய நினைவெழுச்சிநாள் நிகழ்வுகள் 27ம் திகதி திங்கட்கிழமையன்று மெல்பேணில் அமைந்துள்ள Springvale நகர மண்டபத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. மெல்பேண் நேரம் மாலை 6 மணிக்கு மணியொலியுடன் தொடங்கிய ஆரம்பமான இந்நிகழ்விற்கு பிரசாத் (தமிழ்மொழியில்) மற்றும் துளசி (ஆங்கிலமொழியில்) ஆகியோர் தலைமை தாங்கினார்கள். பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில், பொதுச்சுடரினை தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் திரு.பிரான்ஸிஸ் கிறிஸ்ரி அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து அவுஸ்திரேலியத் தேசியக் கொடியினை மாவீரர் லெப்.கேணல் மணிவண்ணனின் சகோதரர் திரு.சிங்கராசா சுரேஷ்குமார் ...

Read More »

‘மயிலே தா’ என்றால் மனமுவந்து தராது – விக்னேஸ்வரன்

ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிறீவ் அறிந்து வைத்திருக்கும் அளவிற்கு கூட எமது மக்கள் தலைவர்கள் அறிந்து வைக்க வில்லையே என்பது மனவருத்தத்தைத் தருவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரத்துக்கு ஒரு கேள்வி என்ற வகையில் முதலமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். இதன்போது “தாங்கள் சிங்கள அரசியல் மற்றும் மத ரீதியான தலைமைகளுடன் பலதையும் பேசி வருகின்றீர்கள். சில நேரங்களில் அவர்களைச் சினம் ஊட்டும் வண்ணமும் கருத்துக்ளை வெளியிட்டு வருகின்றீர்கள். இதனால் தர இருப்பதையும் சிங்கள ...

Read More »

கழுதை தேய்ந்து கட்டெறும்பானது! கூட்டமைப்பு பங்காளிக்கட்சிகள் கூட்டம்!!

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஆராய்வதற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான சந்திப்பு யாழில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு யாழ்ப்பாணம் மார்டீன் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப் பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது. அத்துடன், அந்தக் கட்சி கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட உள்ளதென கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார். அதனால் அந்தக் கட்சி கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான இன்றைய சந்திப்பை தவிர்த்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read More »

மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகதீபம் கலைமாலைநிகழ்வு 2017

பாரததேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூர்க்கந்தன் ஆலய முன்றலில் நீர்கூட அருந்தாது பன்னிருநாட்கள் சாகும்வரை உண்ணாநோன்பிருந்து 26-09-1987 அன்று ஈகைச்சாதவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் முப்பதாவது ஆண்டு நினைவு தினமும் தியாகதீப கலைமாலை நிகழ்வும் 30-09-2017 சனிக்கிழமையன்று மாலை 6.00மணிமுதல் 8.00மணிவரையும் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரத்தில் சென்யூட்ஸ் மண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் 26-09-2001 அன்று சிறிலங்காப் படைகளின் ஆழஊடுருவும் அணியினரின் கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கேணல் சங்கர் அவர்களையும் 25-08-2002 ...

Read More »

அவுஸ்திரேலியாவில் தமிழ்ப்பற்றாளர் பொன். சத்தியநாதன் என்ற பெருமனிதன் மறைவு!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் வாழ்ந்துவந்த தமிழ்ப்பற்றாளர் வைத்திய கலாநிதி பொன். சத்தியநாதன் வெள்ளிக்கிழமை ( 15 – 09 – 2017 ) அன்று சாவடைந்தார். இவர் தமிழரின் வாழ்வுக்காக தமிழ்மொழி பாதுகாக்கப்படவேண்டும் அதன் மூலம் சாதி சமயம் கடந்த தமிழர் நெறியை அனைவரும் போற்றி பாதுகாக்கவேண்டும் என தனது வாழ்நாளை அதற்காகவே அர்ப்பணித்து பணிசெய்து வந்த ஒரு பெருமனிதனாக வாழ்ந்து மறைந்துள்ளார். தமிழரின் தொன்மைமிக்க வள்ளுவரின் குறள்களை நெறியாகக் கொண்டு வள்ளுவமே தமிழரின் மதமாக இருக்கவேண்டும் என குறிப்பிட்டு தான் செல்லும் வீடுகளுக்கு வள்ளுவரின் ...

Read More »

மெல்பேர்ண் நகரில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வு 2017

பாரததேசத்திடம் இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து முப்பதுநாட்கள் உண்ணாநோன்பிருந்து 19-04-1988 அன்று ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 29-வது ஆண்டு நினைவு தினமும் தாயக விடுதலைப் போராட்டத்திற்கு பக்கபலமாக உழைத்து சாவடைந்த நாட்டுப்பற்றாளர்களை நினைவுகூரும் நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வும் உணர்வுபூர்வமாக மெல்பேர்ணில் அனுஸ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அவுஸ்திரேலியாவில் தமிழ்த்தேசியப் பரப்பிலும் தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்திலும் உன்னதமான பணிகளை முன்னெடுத்து தமிழீழ தேசத்தின் கனவுகளோடு சாவடைந்து தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் உயர்விருதான மாமனிதர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட மாமனிதர்களும் நினைவுகூரப்பட்டது சிறப்பம்சமாகும். ...

Read More »

ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும் நூல் வெளியீடு

முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர்களில் ஒருவரான திருமதி நளினி முருகன் அவர்களின் முழுமையான அனுபவங்களை உள்ளடக்கியதான எழுத்தாளர் திரு பா. ஏகலைவன் எழுத்துருவாக்கம் செய்த “ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்” என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டுவிழா கடந்த 17-04-2017 திங்கட்கிழமையன்று மாலை 4.00 மணியளவில் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ணில், டன்டினோங் நகரத்தில் சிறப்புற நடைபெற்றது. இந்நிகழ்வை தமிழ் ஏதிலிகள் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. தமிழ் ஏதிலிகள் கழகத்தின் செயற்பாட்டாளர் திரு அருந்தவம் பகீரதன் தலைமையில் நடைபெற்ற ...

Read More »

அவுஸ்திரேலிய பப்புவா நியுகினி தடுப்பு முகாமில் மாவீரர் நாள் நிகழ்வு

அவுஸ்திரேலிய அரசால் பப்புவா நியுகினி  தீவில் தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழர்களும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் பங்குகொண்டுள்ளார்கள். மிகவும் நெருக்கடியான சூழலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் என பலர் விடுதலை போராட்டத்தில் மரணித்துள்ளதாகவும் அவர்களை நினைவுகூருகின்ற சந்தர்ப்பம் கிடைத்தமை நல்ல விடயம் எனவும் அந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் சமூக வலைத் தளங்கள் ஊடாக தமது ஆதங்கங்களை பகிர்ந்துகொண்டார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை 27 – 11 – 2016 அன்று தாயக நேரப்படி மாலை ஆறு மணிக்கு இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமது ...

Read More »

அவுஸ்திரேலியாவில் “தியாகத் திருவொளிகள்” இசைத்தொகுப்பு வெளியீடு!

தியாகத் திருவொளிகள் – 02 உன்னதமான இன்னுயிரை எமது மக்களின் விடுதலைக்காக வித்தாக்கி மறைந்துபோன மாவீரர்களின் நினைவுகளில் நிறைந்திருக்கும் மாவீரர் நாள் – 2023 இல், மாவீரர்கள் கனவுகளை சுமந்து “தியாகத் திருவொளிகள் – 2” என்ற இசைத்தொகுப்பு வெளியிட்டுவைக்கப்பட்டது. தங்களது உன்னதமான இன்னுயிரை எமது மக்களின் விடுதலைக்காக வித்தாக்கி மறைந்துபோன மாவீரர்களின் நினைவுகளில் நிறைந்திருக்கும் இன்றைய நாளில், அவர்கள் கனவுகளை சுமந்து “தியாகத் திருவொளிகள் – 2” என்ற இசைத்தொகுப்பை மாவீரர் நாள் – 2023 இல் வெளியிட்டு வைக்கின்றோம். தமிழீழத் தாயகத்தில் ...

Read More »