Home / செய்திமுரசு (page 5)

செய்திமுரசு

வேலையைத் தூக்கியெறிந்த தொகுப்பாளினி!

lisa-wilkinson-351262

அவுஸ்திரேலியாவில் ஆண்களுக்கு நிகரான ஊதியம் பெண்களுக்கும் வழங்கப்படவேண்டுமென்ற கோரிக்கைகள் வலுவடைந்துள்ளது. இந்நிலையில் சக ஆண் ஊழியருக்கு நிகரான ஊதியம் தனக்கு வழங்கப்படவில்லை என்பதை காரணம் காட்டி பிரபல பெண் தொலைக்காட்சித் தொகுப்பாளர் Lisa Wilkinson தனது வேலையை இராஜினாமா செய்துள்ளார். குறித்த தொகுப்பாளினி Channel 9 தொலைக்காட்சியில் காலை நிகழ்ச்சியை (Today Show) Karl Stefanovic உடன் இணைந்து Lisa Wilkinson தொகுத்து வழங்கி வந்தார். ஆண் தொகுப்பாளர் Karl ...

Read More »

எல்லை நிர்­ணயம் குறித்து யோசனைகள் பெறு­வ­தற்கு ஆணைக்­குழு நட­வ­டிக்கை

ellai-nirnayam-L

மாகா­ண­ச­பை­க­ளுக்கு நிர்­வாக மாவட்­டங்­களின்  கீழ் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­ட­வுள்ள உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை அடிப்­ப­டையில் தேர்தல் தொகு­தி­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­யான யோச­னைகள் மற்றும் கருத்­துக்­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கு எல்லை நிர்­ணய ஆணைக்­குழு தீர்­மா­னித்­துள்­ளது. 2017 ஆம் ஆண்டு   17ஆம் இலக்க மாகா­ண­சபை தேர்தல் வாக்­கெ­டுப்பு திருத்த சட்­ட­மூ­லத்தின் அடிப்­ப­டை­யிலே இந்த தேர்தல் தொகு­திகள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­க­ஆ­ணைக்­கு­ழுவின் செய­லாளர் சமன் ஸ்ரீ ரத்­நா­யக்க  அறி­வித்­துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரி­விக்­கையில், மாகா­ண­ச­பை­க­ளுக்கு குறிப்­பிட்ட நிர்­வாக மாவட்­டத்தின் கீழ் ...

Read More »

கிளிநொச்சியில் இராணுத்தினரின் பிரசன்னம் அதிகரிப்பு!

download-42-1

கிளிநொச்சி நகரில் தற்பொழுது இராணுத்தினரின் பிரசன்னம் அதிகரித்துள்ள நிலையில், அந்த பகுதி இராணுவத்தினரின் முற்றுகைக்குள் காணப்படுவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பொருட்கள் கொள்வனவில் அதிகளவிலான இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், ஏடிஎம் இயந்திரங்களை பயன்படுத்துவதற்கும் இராணுவத்தினரின் பின்னால் நீண்ட நேரம் காத்து நிற்க வேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும், இராணுவத்தினர் மக்கள் நடமாட்டமுள்ள பொது இடங்களில் பிரசன்னமாகியிருப்பதால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Read More »

உணவின்றி காட்டில் மகனுடன் பத்து நாட்கள் சிக்கி கொண்ட பெண்!

1507805597438

காட்டுக்குள் சென்று வெளியே மீண்டும் வர வழித்தெரியாமல் பத்து நாட்கள் அங்கேயே உணவின்றி வெறும் தண்ணீர் மட்டும் குடித்து தாயும், மகனும் உயிர்வாழ்ந்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர் மிச்சலே ஸ்மால் (40), இவர் மகன் டைலன் டீனே (9) இருவரும் Hunter Valley பகுதியில் அமைந்திருக்கும் மவுண்ட் ராயல் தேசிய பூங்காவுக்கு கடந்த 2-ஆம் திகதி சென்றுள்ளனர். அது மிகப்பெரிய காட்டு பகுதி என்பதால் வெகுதூரம் ...

Read More »

அகதிகள் அல்லாதவர்கள் நாடுகடத்தப்படுவர்: அவுஸ்ரேலியா

Australia-Refugee-yaalaruvi

அவுஸ்திரேலியாவின் மனுஸ் தீவிலுள்ள தடுப்புமுகாம், ஒக்டோபர் 31ம் திகதியுடன் மூடப்படவுள்ளது. இந்நிலையில் உண்மையான அகதிகள் என இனங்காணப்படாதவர்கள், விரைவில் தமது நாடுகளுக்கு திருப்பியனுப்பப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. உண்மையான அகதிகள் என இனங்காணப்பட்டவர்கள் விரும்பினால் நவுறுவுக்கு செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் உண்மையான அகதிகள் என இனங்காணப்படாதவர்கள், தாமாகவே முன்வந்து தமது நாடுகளுக்குச் செல்லவேண்டும். அவ்வாறு அவர்கள் செல்லவில்லையெனில் வலுக்கட்டாயமாகத் திருப்பியனுப்பும்பணி விரைவில் ஆரம்பிக்கப்படுமெனவும் அமைச்சர் Michaelia Cash தெரிவித்தார்.

Read More »

அவுஸ்ரேலியாவில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய ஆலோசனை!

hqdefault-1

அவுஸ்ரேலியாவில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய ஆலோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. சிட்னி, மெல்பேர்ன் வாகன சாரதிகளிடம் Traffic congestion charge எனப்படும் கட்டணத்தை வசூலிப்பதன் மூலம், போக்குவரத்து நெரிசலைக் கட்டுக்குள் கொண்டுவரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன், சிங்கப்பூர் போன்ற நாடுகளைப்போல, போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படும் நேரத்தில் (Peak hours), இதற்குரிய சிறிய கட்டணத்தை வசூலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை சிறப்பாக இருக்குமென Grattan Institute என்ற அமைப்பு ...

Read More »

அவுஸ்ரேலியாவில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில் சந்தேகம்!

Aus-Death-Srilankan-Boy-yaalaruvi

அவுஸ்ரேலியாவில் உயிரிழந்த யாழ்.மீசாலையைச் சேர்ந்த இளைஞனின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சடலத்தைப் பெற்றுக் கொள்வதற்காக உறவினர்கள் வந்திருந்தனர். இந்நிலையில் மகனின் சடலத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அவருடைய தாயும் தந்தையும் கண்ணீருடன் காத்திருந்துள்ளனர். குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் பெற்றோரும் உறவினர்களும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். உயிரிழந்த ராஜேந்திரன் ராஜிப் 2003 ஆம் ஆண்டு மலேசியா சென்றதாகவும் பின் 11 ஆண்டுகள் தொடர்பு இன்றி இருந்துள்ளதாகவும் கூறினர். அதன்பின்னர் 2014 ஆம் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் வரதட்சணைக் கொடுமைக்கெதிரான சட்டம்!

dc8d4420ed058035526c890a914760c0

அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் முதல்தடவையாக வரதட்சணைக் கொடுமைக்கெதிரான சட்டம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது. இந்தியப் பின்னணி கொண்ட பல ஆண்கள் வரதட்சணை பெற்று திருமணம் செய்கின்றனர். பின் இங்கே தமது மனைவியை அழைத்து வந்து நிர்கதிக்கு உள்ளாக்கி விடுவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இந்தவிடயம் தொடர்பாக ரோயல் கமிஷன் விசாரணையின் அடிப்படையில், புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக விக்டோரிய மாநில பல்கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் Robin Scott தெரிவித்தார். இதேவேளை வரதட்சணை ...

Read More »

அழிவை சந்திக்கப்போகிறது அவுஸ்திரேலியா: வடகொரியா

download (9)

அமெரிக்காவை தொடர்ந்து அவுஸ்திரேலியா ஆதரிக்குமானால் அவுஸ்திரேலியா அழிவைச் சந்திக்க நேரிடும் என்று வடகொரியா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வாரம் தென்கொரியாவுக்கு அவுஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சர் Julie Bishop மற்றும் ராணுவத்துறை அமைச்சர் Marise Payne ஆகியோர் சென்றிருந்தனர். இந்தநிலையில் அமெரிக்காவுக்கும், தென்கொரியாவுக்கும் அவுஸ்திரேலியாவின் முழுமையான ஆதரவு உண்டு என்று கூறியிருந்தனர். அவுஸ்திரேலிய அரசின் வெளிப்படையான இந்த ஆதரவு வடகொரியாவுக்கு கடும் சினத்தை உண்டுபண்ணியுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வடகொரியாவின் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் உயிரிழந்த இளைஞரின் உடலம் உறவுகளிடம் கையளிப்பு!

IMG-20171005-WA0073

அகதி அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியா சென்று உயிரிழந்த யாழ். மீசாலை தெற்கு, சாவகச்சேரியைச் சேர்ந்த ராஜேந்திரன் ராஜிப் என்பவரின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இவருடைய சடலம் நேற்று (15) இரவு சிங்கப்பூரிலிருந்து எஸ்.கிவ்.468 ஆம் இலக்க விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு இன்று பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், மரணமடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளமை பிரேத பரிசோதனையில் ...

Read More »