Tag Archives: ஆசிரியர்தெரிவு

முதல்வராகிறார் ஸ்டாலின்: திமுக கூட்டணி அமோக வெற்றி

2021 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கும், திமுக கூட்டணிக்கும் பெரிய அளவில் வெற்றியை அளித்துள்ளது. தனிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைப்பதன் மூலம் ஸ்டாலின் முதல்வர் ஆகிறார். தமிழக அரசியல் வரலாற்றில் திமுக எழுச்சியைப் பெற்ற ஆண்டு என்றால் அது 1971ஆம் ஆண்டு திமுக பெற்ற வெற்றிதான். திமுக 1967இல் முதன்முதலாக ஆட்சியைப் பிடித்தது. முதல்வர் அண்ணா பொறுப்பேற்ற ஓராண்டிலேயே மறைய, கருணாநிதி முதல்வர் ஆனார். காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவில் இரண்டாகப் பிளவுபட, தமிழகத்தில் போட்டியில்லா நிலையில் எம்ஜிஆர், கருணாநிதி எனும் ...

Read More »

மரணச் சடங்கு குறித்து அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

ஒருவர் மரணித்தால 24 மணித்தியாலத்தில் குறித்த மரணச்சடங்கு நிறைவேற்றப்பட வேண்டுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொவிட் 19 அல்லாத மரணச் சடங்குகளே இவ்வாறு இடம்பெற வேண்டுமென சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது மரணச் சடங்கொன்றில் ஒரே நேரத்தில் ஆகக் குறைந்தது 25 பேர் மாத்திரமே ;கலந்துகொள்ள முடியுமென்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் நுழையத்தடை

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் நுழையத்தடை: வேறு நாடுகள் வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழையும் பயணிகள் ஆஸ்திரேலியாவில் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வேறு நாடுகள் வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் பயணிகள் நுழைவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த வழிகளும் தற்போது அடைக்கப்பட்டு வருவதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றின் பரவல் இந்தியாவில் பெருகி வரும் நிலையில், வரும் மே 15ம் தேதி வரை இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்தது. இதனால் பயணிகள் பலர் கட்டார், சிங்கப்பூர், மலேசியா ...

Read More »

துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கொரோனாவுக்கு பலி

மூத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை சந்திரா தோமர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். இந்தியாவின் மூத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை சந்திரா தோமர் (89) கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். சந்திரா தோமர் 60 வயதுக்கு பிறகு தான் முதல்முறையாக துப்பாக்கி சுடுதலில் பங்கேற்றார். மூத்தோருக்கான தேசிய அளவிலான பல போட்டிகளில் வெற்றி பெற்று கவனத்தை ஈர்த்தார். அவரது மறைவுக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ...

Read More »

தீவிரகிசிச்சைபிரிவுகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டன

மருத்துவமனைகளின் தீவிரகிசிச்சை பிரிவுகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டதால் நெருக்கடி நிலை காணப்படுகின்றது என அரசதாதிமார் அலுவலக சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனாவைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து தீவிரகிசிச்சை பிரிவுகளில் படுக்கை வசதிகளிற்கான தேவை அதிகரித்துள்ளது என சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். இ;ந்த நெருக்கடிக்கு உடனடியாக தீர்வை காணுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அவர் அரசாங்கம் தீவிரகிசிச்சை பிரிவுகளில் படுக்கை வசதிகளை அனுமதித்துள்ளதாக தெரிவித்தாலும் 18 படுக்கைகள் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். மேல்மாகாணத்தில் நாளாந்தம் 900 கொரோனாவைரஸ் நோயாளர்கள் அனுமதிக்கப்படுகின்ற போதிலும் தீவிரகிசி;ச்சை ...

Read More »

4000 பேருடன் பிரமாண்டமாக நடக்கும் இசை விருது விழா

கொரோனாவுக்கு பின் பெரிய நிகழ்ச்சிகளுக்கு எத்தனை பேரை அனுமதிக்கலாம் என்பதற்கு முன்னோட்டமாக இந்த இசை விருது விழா நடைபெற உள்ளதாம். இங்கிலாந்தின் மிக பிரபலமான இசை விழாவான ‘பிரிட் இசை விருது விழா’, வருகிற மே 11-ந் தேதி நடைபெற உள்ளது. இவ்விருது விழா, லண்டனில் உள்ள ‘ஓ2’ அரேனாவில் நடத்தப்பட உள்ளது. இதில் 4,000 பேர் கலந்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் இதில் கலந்து கொள்பவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read More »

ரிஷாத், ரியாஜ்ஜின் மனைவிமார் மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டமை மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்ட விரோதமானது என குறிப்பிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறையிடப்பட்டுள்ளது. ரிஷாத் பதியுதீனின் மனைவி, சிஹாப்தீன் ஆய்ஷா, ரியாஜ் பதியுதீனின் மனைவி பாத்திமா இஷ்ரத் ஆகியோர் சட்டத்தரணி ஆர்ணல்ட் பிரியந்தன் ஊடாக இந்த முறைப்பாட்டை நேற்று செவ்வாய்க்கிழமை முன்வைத்துள்ளனர். கடந்த 24 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 3.20 மணிக்கு கொழும்பு 7, பெளத்தாலோக்க மாவத்தையில் உள்ள வீட்டில் வைத்து தனது ...

Read More »

தாய்லாந்தில் முக கவசம் அணியாத பிரதமருக்கு ரூ.14 ஆயிரம் அபராதம்

நாடு முழுவதும் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் பாங்காக்கில் மக்கள் எல்லா நேரங்களிலும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தாய்லாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. அங்கு கடந்த 4 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. கொரோனா வைரசின் புதிய அலையை கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசு கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக்கி வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ...

Read More »

வடமராட்சியில் சீன மொழியிலான எழுத்துக்களுடன் புதிய கட்டடம்

வடமராட்சியில் சீன மொழியிலான எழுத்துக்களுடன்  கட்டடமொன்று அமைக்கப்பட்டு வருகின்றமை மக்களிடத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி-  வத்ராஜன் பகுதியிலுள்ள  தனிநபரொருவரது சொந்த காணியில், சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானமொன்று அமைக்கப்பட்டு வருகின்றது. குறித்த மைதானத்தை அமைப்பதற்கான செலவு, தனிநபர் ஒருவரின் நிதியின் ஊடாக மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த மைதானத்தின் முன்பகுதியில், சீன எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளதுடன்  சீன தேசிய கொடியில்  காணப்படுகின்ற ராகன் சின்னமும் பதிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை தற்போது மக்களிடத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Read More »

மகாசங்கத்தினர் பௌத்த சாசனத்திற்கு முரணாக செயற்படுகின்றனர்!

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் குறித்து மகாசங்கத்தினர் முதலில் தெளிவுப் பெற வேண்டும்.நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளில் மகாசங்கத்தினர் பங்குதாரர்களாகுவது பௌத்த சாசனத்திற்கு முரணானது என தேசிய பிக்கு முன்னணியின் செயலாளர் வகமுல்லே உதித்த தேரர் தெரிவித்தார். கொழும்பில் உள்ள தேசிய பிக்கு முன்னணியின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் அவர் மேலும் குறிப்பிடுகையில், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் குறித்து அரசாங்கத்திற்குள் இரு வேறுப்பட்ட நிலைப்பாடு காணப்படுகிறது கொழும்பு ...

Read More »