Tag Archives: ஆசிரியர்தெரிவு

அவுஸ்திரேலியாவில் அறிமுகமாகும் புதிய விசா!

தெற்கு அவுஸ்திரேலியாவில் புதிய விசா ஒன்று அறிமுகம் செய்ய அரசு முனைப்புக் காட்டியுள்ளது. இந்தப் புதிய விசா ஒன்றை அறிமுகப்படுத்துவதற்காக 4 லட்சம் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த விசாவில் உள்ள சிறப்பம்சம் என்னவெனில் முதலீடு செய்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட விரும்பும் புதிய தொழில்முனைவோரை வரவழைக்கும் நோக்கில் இப்புதிய விசா திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்துகிறது. இதேவேளை அவுஸ்திரேலியாவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள entrepreneurial and Business & Innovation விசாவிலிருந்து இது மாறுபட்டது என தெரிவிக்கப்படுகிறது. இந்த விசாவுக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு ...

Read More »

சீனா வேண்டாம் அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யுங்கள்!-டிரம்ப்

அப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தியை சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு மாற்ற வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் தொடங்கி உள்ளது. அமெரிக்காவில் சீனப் பொருட்கள் குவிந்ததுடன் விலையும் மலிவாக கிடைப்பதால் அமெரிக்க பொருட்களின் வர்த்தகம் சரிந்தது. இது அமெரிக்க அதிபர் டிரம்பின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே, அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை கடைப்பிடித்து வரும் டிரம்ப், சீனப் பொருட்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் வரை வரி விதித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் ...

Read More »

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாவா? பஷிலா?

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவா?, பஷில் ராஜபக்ஷவா? அல்லது வேறு யாருமா? என்பது இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலை பொது எதிரணிக்கு சாதகமாக மாற்றியமைத்துக் கொள்ள வேண்டுமானால் மக்களின் விருப்பினை பெறக்கூடிய ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும். ஆகவே ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பாக தீர்க்கமான முடிவினை எடுப்பதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளது. எனவே எதிர்வரும் இரண்டு ...

Read More »

எனக்கெதிரான நடவடிக்கைகளில் சுமந்திரன் மட்டுமல்ல….!

தனக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மட்டுமல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலரும் இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். நீதிமன்ற அவமதிப்பு விடயத்தில் மேன் முறையீட்டு நீதிமன்ற அழைப்பாணை பிரகாரம் நேற்று(7)அவர் மேன் முறையீட்டு நீதிமன்றில் ஆஜரான பின்னர் வெளியேறிச் செல்கையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Read More »

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு: டிரம்பின் ஆலோசகர் கைது!

லண்டன் பப் ஒன்றில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து கருத்து தெரிவித்து அதுகுறித்த விசாரணைக்கு வித்திட்ட டிரம்பின் முன்னாள் உதவியாளருக்கு 14 நாள் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது. 31 வயதாகும் ஜார்ஜ் பாபுடோபுலஸ் வாஷிங்டன் நீதிமன்றத்தில் தான் பொய்யால் தவறிழைத்த “தேசப்பற்றுள்ள அமெரிக்கர்” என்று தெரிவித்தார். கடந்த அக்டோபர் மாதம், ரஷ்யாவுக்காக தான் பேச்சுவார்த்தை நடத்திய நேரங்கள் குறித்து எஃப்பிஐ-யிடம் பொய் கூறுவிட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது குறித்த விசாரணையில் கைது ...

Read More »

தலைவர் பிரபாகரனின் மனைவி, மகள் போரிட்டே மரணடைந்தனராம்!- பொன்சேகா

இறுதிப் போரில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி, மகள் ஆகியோரும் பதுங்கு குழிகளில் இருந்து போரிட்டு இறந்தார்கள் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தது” என்று தற்போது அமைச்சர் பதவி வகிக்கும் சரத் ஃபொன்சேகா தெரிவித்தார். இறுதிப் போரில் 4000 முதல் 5000 வரையிலான பொதுமக்களே கொல்லப்பட்டிருக்கலாம் என தான் கணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகித்து வரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா, கொழும்பில் வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது இறுதிப் போரின் உயிர்ச் சேதங்கள் குறித்தும் பேசினார். ...

Read More »

மெக்சிக்கோவில் மனித புதைகுழிகளில் 166 உடல்கள் மீட்பு!

மெக்சிக்கோவின் வெரெகிரஸ் நகரில் பாரிய மனித புதைகுழியொன்றிற்குள் 166 உடல்களை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகஸட் மாதம் 8 ம் திகதி நபர் ஒருவர் வழங்கிய தகவலை தொடர்ந்து கடந்த ஒரு மாதகாலமாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது 32 புதைகுழிகளில் உடல்களை மீட்டதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 30 நாள் அகழ்விற்கு பின்னர் 166 உடல்களை மீட்டுள்ளோம் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மனித உடல்களிற்கு அப்பால் புதைகுழியிலிருந்து ஆடைகள் உட்பட பல பொருட்களை மீட்டுள்ளோம் எனவும் மெக்சிக்கோ அதிகாரி தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட உடல்கள் கடந்த இரண்டு ...

Read More »

நீதிமன்றில் முன்னிலையானார் முன்னாள் நீதியரசர்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். வடக்கு மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சாராக பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும் என்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டின் பிரகாரமே முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் வட மாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்துள்ள மனுவொன்றை பரிசீலித்த போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண அமைச்சர்களான அனந்தி சசிதரன், கே.சிவநேசன் ஆகியோரை நீதிமன்றில் ...

Read More »

பாகிஸ்தான் ராணுவத்தை போன்று வேறு எந்த நாடும் பயங்கரவாதத்தை எதிர்த்து போரிட்டதில்லை !

வேறு எந்த நாட்டின் ராணுவமும் பாகிஸ்தான் ராணுவத்தை போன்று பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டதில்லை என அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். கடந்த 1965-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போரை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செடம்பர் 6-ம் திகதியை பாதுகாப்பு தினமாக பாகிஸ்தான் அரசு கடைபிடித்து வருகிறது. பின்னர் இதன் பெயரை பாதுகாப்பு மற்றும் தியாகிகள் தின விழாவாக கடந்த 2014-ம் ஆண்டு மாற்றியது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான பாதுகாப்பு மற்றும் தியாகிகள் தின விழா, ராவல்பிண்டியில் ...

Read More »

ஜப்பானுக்கு உதவியாக ரோந்து விமானங்களை அனுப்பிய ஆஸ்திரேலியா!

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார தடைகளை மீறி நடுக்கடலில் கப்பல் விட்டு கப்பலில் சட்ட விரோதமாக வர்த்தகத்தில் ஈடுபடும் வடகொரியாவை கண்காணிக்க ஜப்பானுக்கு உதவியாக 3 ரோந்து விமானங்களை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அனுப்பியுள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா சமீப காலமாக பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்தது. மேலும், ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையிலும் முழுமையான வெற்றி பெற்றதாகவும் அந்நாடு தெரிவித்திருந்தது. இதனால், ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியாவுக்கு அந்நாட்டின் நிலக்கரி, லெட் (கனிமப்பொருள்) ...

Read More »