Home / Tag Archives: ஆசிரியர்தெரிவு (page 10)

Tag Archives: ஆசிரியர்தெரிவு

மற்றுமொரு வைத்தியரும் விலகினார்!

சுகாதார அமைச்சின் கொவிட் தொற்றொழிப்பு தொழில்நுட்ப குழுவிலிருந்து மயக்க மருந்து நிபுணர் டாக்டர் அசோக குணரத்ன இராஜினாமா செய்துள்ளார். இந்தக் குழுவில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதில் எவ்விதமான பிரயோசமும் இல்லை என்பதால், அக்குழுவிலிருந்து இராஜினாமா செய்வதாக மயக்க மருந்து நிபுணர் டாக்டர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார். முன்னதாக,   பேராசிரியர் நீலிகா மாலவிகே மற்றும் டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம ஆகியோரும் தொழில்நுட்பக் குழுவில் இருந்து விலகினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read More »

இனச் சுத்திகரிப்பு பற்றிப் பேசுவோர் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் பற்றியும் நினைவில் கொள்ள வேண்டும்!

வடக்கில் இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பு பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கும் எம்மவர்கள் கிழக்கில் மாற்றுச் சமூகத்தினால் இடம்பெற்ற இனஅழிப்பு தொடர்பில் ஏன் கருத்திட மறுக்கின்றார்கள். இனச் சுத்திகரிப்பு பற்றிப் பேசுவோர் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் பற்றியும் நினைவில் கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவருமான இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார். தமிழ்த் தேசிய அரசியற் நிலவரம் தொடர்பில் இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கையிலேயே ...

Read More »

நோக்கியா 3310 போனை முழுவதுமாக விழுங்கிய இளைஞர்

நோக்கியா 3310 தொலைபேசியை முழுவதுமாக விழுங்கிய நபருக்கு இம்மாதத் தொடக்கத்தில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு அந்த போன் நீக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் கொசோவோவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ”கொசோவோ நாட்டில் உள்ள பிரிஸ்டினா நகரைச் சேர்ந்த 33 வயதான இளைஞர் ஒருவர் 2000ஆம் ஆண்டின் தொடக்கக் கால மாடலான நோக்கியா 3310 போனை முழுமையாக விழுங்கி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இளைஞர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் ...

Read More »

நாடாளுமன்றத்தில் 73.2 பில்லியன் ரூபா துணை மதிப்பீடு சமர்ப்பிப்பு

தற்போதைய கொவிட் – 19 தொற்றுநோய் மற்றும் இதர செலவுகளுக்காக செலவிடப்பட வேண்டிய 73.2 பில்லியன் ரூபா (ரூ. 732,124,887,226) மதிப்புள்ள துணை மதிப்பீட்டை அரசாங்கம் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தொற்றுநோய் தொடர்பான விடயங்களுக்காக செலவழிக்க அரசாங்கம் பாராளுமன்றத்தில் ஒப்புதல் கோருகிறது. தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரணம் வழங்க மற்றும் கொவிட் சிகிச்சை மையங்களுக்காக அரசாங்கம் மேலதிக நிதியை ...

Read More »

சிறிலங்கா அரசாங்கத்தின் அவசரகால விதிமுறைகள் ஒரு வித்தை

ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவுகள் மீது அவசரகால விதிமுறைகளை விதிப்பது குறித்த வர்த்தமானிக்கு கண்டனம் தெரிவித்ததுடன், இது ஜனாதிபதியும் அரசாங்கமும் மேலதிக அதிகாரத்தைப் பெற அனுமதிக்கும் ஒரு வித்தை என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. தனது மூன்று பக்க ஊடக அறிக்கையில் இது தொடர்பில் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தனது கைகளில் அதிகாரங்களை திணிப்பதாகவும், தனது சொந்த நலனுக்காக நாடு தொடர்பான முடிவுகளை எடுக்க தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் ...

Read More »

எனது மகன் விபத்தில் சிக்கிய வேளை உதவிய சிரியா ஈராக்கை சேர்ந்தவர்கள் அவரை தீவிரவாதமயப்படுத்தியிருக்கவேண்டும்!

நியுசிலாந்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் அவர் வசித்த பகுதியில் வாழ்ந்த சிரியா ஈராக் பிரஜைகளால் தீவிரவாதமயப்படுத்தப்பட்டார் என அவரது தாயார் தெரிவித்துள்ளார் காயமொன்றிலிருந்து எனது மகன் மீள்வதற்கு உதவிய அவர்கள் அவரை தீவிரவாதமயப்படுத்தினார்கள் என அவர் தெரிவித்துள்ளார். 2016 இல் எனது மகன் பல்கலைகழகத்தில் கல்வி கற்றவேளை பல மாடிக்கட்டிடத்தில் விழுந்து விபத்திற்குள்ளானார் என அவரது தாயார் முகமட் இஸ்மாயில் பரீதா தெரிவித்துள்ளார். அவருக்கு அவ்வேளை உதவுவதற்கு எவரும் இருக்கவில்லை ...

Read More »

ஒக்டோபர் 2 வரை ஊரடங்கை நீடிக்கவும்

இலங்கையில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை  ஒக்டோபர்  2ஆம் திகதி வரை ந   நீடிக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் கோரியுள்ளது. தற்போது அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டத்தை இம்மாதம்  23 ஆம் திகதி வரை நீடித்தால் 8,500 உயிர்களை காப்பாற்றலாம். ஒக்டோபர் 3ஆம் திகதி வரை நீடித்தால்   10 ஆயிரம்  உயிர்களை காப்பாற்ற முடியும்  என்று அந்த சங்கம் அறிவித்துள்ளது.

Read More »

நெருங்கிப் பழகியவர்களிடம் விசாரணைகள் ஆரம்பம்

நியுசிலாந்தின்- ஒக்லாந்து நகரிலுள்ள பல்பொருள் அங்காடியில் வைத்து, சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையர் தொடர்பில், குற்றவிசாரணைப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபருடன், இலங்கையில் நெருங்கிப் பழகியவர்களிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல் துறை  தலைமையகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (3) ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இலங்கையரான மொஹமட் சம்சுதீன் ஆதில் என்ற 32 வயதுடைய  சந்தேகநபர்,  ஒக்லாந்து நகரிலுள்ள பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து, அங்கிருந்த ...

Read More »

எதிர்பார்த்ததற்கு முன்னரே இலக்கை அடைந்த விக்டோரியா

விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 190 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்று கண்டவர்களில் 103 பேருக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என்பது தெரியும். விக்டோரிய மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை விரைவில் 70 சதவீதமாகும். எதிர்பார்த்ததை விட இந்த இலக்கு முன்னதாகவே எட்டப்படுகிறது. இருந்தாலும், வணிக நிறுவனங்களுக்கு ஆதரவுத் தொகை வழங்கப்படும் காலம் நீட்டிக்கப்படுகிறது என்று Jobs Minister Martin Pakula கூறினார்..

Read More »

நியூசிலாந்தில் கத்திக்குத்து தாக்குதல்

நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய நபர் ஒருவர் அந்நாட்டு காவல் துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார். குறித்த நபர், அங்குள்ள பிரபல சுப்பர் மார்கெட் ஒன்றுக்குள் நுழைந்து கத்திக் குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், இதில் ஆறு பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையர் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன், அவர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என, அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். குறித்த இலங்கையர் 2011ஆம் ஆண்டு ...

Read More »