உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக ; குரல் எழுப்பிவரும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை யுத்தத்தால் உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளுக்காகவும் ஆண்டகையின் குரலை உயர்த்த வேண்டும். ஆனால் யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்துமாறு ஒருநாள்கூட கூறியிருக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சபையில் ; தெரிவித்தார். தமிழ் இளைஞர்கள் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்படுமளவுக்கு நாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக கைதுகள் தலைத்தூக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு நாட்டின் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க ரஷியா முடிவு
பல்வேறு விவகாரங்களில் மேற்கத்திய நாடுகளுடன் பதற்றம் நீடித்து வரும் சூழலில் ரஷியா தனக்கென சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் கடந்த 1998-ம் ஆண்டு ரஷியா மற்றும் அமெரிக்காவின் கூட்டுமுயற்சியில் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விண்வெளி ஆய்வு நிறுவனங்களும் இதில் கைகோர்த்தன. தற்போது மேற்கூறிய நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி இருந்து ஆய்வுப்பணிகளை ...
Read More »சீனாவுடனான 2 ஒப்பந்தங்களை ரத்து செய்தது ஆஸ்திரேலியா
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவின் தேசிய நலனுக்கு எதிராக இருப்பதாக கூறி சீனாவுடனான 2 ஒப்பந்தங்களை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு அரசியலில் ரகசிய வெளிநாட்டு தலையீட்டை தடை செய்யும் நோக்கில் கடந்த 2018-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்த சட்டங்கள் சீனாவுக்கு எதிரான பாரபட்சம் கொண்டவை என சீனா கடுமையாக விமர்சித்தது. மேலும் இந்த விவகாரம் ஆஸ்திரேலியா சீனா இடையிலான உறவை மோசமாக்கியது. இந்த நிலையில் இந்த தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவின் தேசிய நலனுக்கு ...
Read More »இந்த அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் – எய்ம்ஸ் மருத்துவர்கள்
இந்தியா, கொரோனாவின் முதல் அலையை வெற்றிகரமாக சமாளித்து விட்டது. இரண்டாவது அலை இந்தியாவை கடுமையாக தாக்கி வருகிறது. இந்தியா, கொரோனாவின் முதல் அலையை வெற்றிகரமாக சமாளித்து விட்டது. இரண்டாவது அலை இந்தியாவை கடுமையாக தாக்கி வருகிறது. தினந்தோறும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தொற்றின் பிடியில் சிக்கி வருகின்றனர். இந்த இரண்டாது அலையை வெற்றி கொள்ள நாடு தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் எந்த எந்த அறிகுறி இருந்தால் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ...
Read More »யாழில்.நாட்டு துப்பாக்கி உட்பட வெடிமருந்துகளுடன் மூவர் கைது!
யாழ். வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்நாட்டு தயாரிப்பிலான துப்பாக்கியும் அவற்றுக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் மற்றும் பன்றி இறைச்சி என்பவற்றுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுண்டிக்குளம் காட்டுப் பகுதியில் மூவர் வேட்டையில் ஈடுபடுவதாக கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி, வெடிபொருட்கள் மற்றும் இறைச்சி என்பவற்றை கடற்படையினர் மருதங்கேணி காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். விசாரணையின் பின்னர் அவர்களையும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்களையும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ...
Read More »20ஆவது திருத்தத்தை போன்று துறைமுக நகர் ஆணைக்குழு சட்ட மூலத்தையும் பெரும்பான்மையுடன்…….
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை போன்று கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்தையும் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றுவோம். 20 இல் சில உறுப்புரைகள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வசன வாக்கெடுப்பின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டமையால் அவற்றை நீக்கினோம். அதே முறைமை துறைமுக நகர சட்ட மூல விவகாரத்தில் பின்பற்றப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், சட்ட மூலமொன்று சமர்ப்பிக்கப்பட்டு ...
Read More »‘சினோபார்ம்’ தடுப்பூசி 90 சதவீதம் தொற்றை தடுக்கக்கூடியது!
சினோபார்ம்’ தடுப்பூசி 90 சதவீதம் தொற்றை தடுக்கக்கூடியது என்றும், மேலும் மருந்தை உடலில் செலுத்திக் கொண்டவர்களில் இதுவரை இறப்பு பதிவு செய்யப்படவில்லை எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அபுதாபி பொது சுகாதார மையத்தின் சார்பில் நடைபெற்ற ஆய்வின் முடிவில் கூறியிருப்பதாவது:- அபுதாபியில் பொது சுகாதார மையத்தின் சார்பில் சினோபார்ம் தடுப்பூசி மருந்தின் விளைவுகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த ஆய்வின் முடிவுகளில் சினோபார்ம் மருந்தை உடலில் செலுத்திக் கொண்டவர்களுக்கு நோய் தொற்று காரணமாக லேசான அறிகுறிகள் மட்டுமே தென்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு மருத்துவமனையில் ...
Read More »ஈழத்தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்படுவதை உலக நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும்- வைகோ
ஈழத்தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்படுவதை உலக நாடுகள் தடுத்து நிறுத்தவேண்டும் என வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சிங்கள இனவெறி அரசு, ஈழத்தமிழர்களின் தாயக நிலப்பரப்பில், தடுக்கி விழுந்தால் ஒரு படை முகாம் அமைத்து, தமிழர்களின் நிலங்களைப் பறித்து, அவர்களின் வாழ்வாதாரங்களை முடக்கிய கொடுமை தொடருகின்றது. உலக நாடுகளை ஏமாற்ற, ஏற்கனவே பறித்த நிலங்களைத் திரும்ப வழங்குவதாகப் போக்குக் காட்டிக் கொண்டே, மறுபுறம், புதிய நிலங்களைப் பறிக்கின்றது. அண்மையில், மட்டக்களப்பு தமிழ் விவசாயிகளின் நிலங்களில், இலங்கை வனத்துறையினர் திடீரென ...
Read More »கொரோனா தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியம்
கொரோனா தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியம் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். யாழ். மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பில் அவர் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், வட மாகாணத்தைப் பொறுத்தவரை கொவிட்- 19 தொற்று அதிகரித்து வருகின்றது. இதேபோல யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் நேற்றும்(நேற்று முன்தினம்) இன்றுமாக(நேற்று) இரண்டு மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இதில், 77 வயது, 59 வயது நபர்களே இவ்வாறு மரணமாகினர். அவர்கள் சில காலமாக நோய்வாய்ப்பட்டு ...
Read More »அன்னை பூபதியின் 33ஆவது நினைவு தினம்
வடக்கு- கிழக்கில் இருந்து இந்திய இராணுவத்தினை வெளியேற்றும் பொருட்டு சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 33வது நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்தவகையில் மட்டக்களப்பிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில், அன்னை பூபதியின் 33வது நினைவு தினம், இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மட்டக்களப்பு- கல்லடி, நாவலடியிலுள்ள சமாதியில் குறித்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதன்போது நிகழ்வின் ஆரம்பத்தில் ஈகச்சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தியதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் மட்டு.மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், ஏறாவூர்ப்பற்று ...
Read More »