மலேசியாவில் எற்பட்டுள்ள பிளாஸ்டிக் மாசுபாட்டினை கட்டுப்படுத்தும் முயற்சியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர். மலேசியாவின் பல்வேறு பகுதிகளிலும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் தொழிற்சாலைகளின் கழிவுகள் ஆகும். மேலும் பல நாடுகளில் இருந்தும் பிளாஸ்டிக் கழிவுகள் மலேசியாவிற்கு வந்து குவிந்துள்ளன. இவற்றை அகற்றும் முயற்சியில் ஜெஞ்ரோம் பகுதியைச் சேர்ந்த டேனியல் டாய், டன் சிங் ஹின் ஈடுபட்டுள்ளனர். மேலும் இப்பகுதியைச் சேர்ந்த பலரும் இவர்களுடன் இயற்கை சமூக ஆர்வலர்களாக இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அப்பகுதி மக்களின் நலன் கருதி பிளாஸ்டிக் எரிக்கப்படுவதற்கு எதிராகவும், ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
வடக்கு மக்கள் வாகன வரிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ள புதிய வசதி !
வாகன வரிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய தன்னியக்க இயந்திரங்கள் வடக்கு மாகாணத்தில் 3 இடங்களில் பொருத்தப்படவுள்ளதென மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாகன வரிப் பத்திரங்களை பிரதேச செயலகங்களில் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் அதைப் பெற்றுக் கொள்வதற்காக அதிக நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளது. அதை இலகுபடுத்தும் வகையில் தன்னியக்க இயந்திரம் மூலம் வாகன வரிப் பத்திரங்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள பிரதி முதன்மைச் செயலர் அலுவலகத்தில் பரீட்சார்த்தமாக ஏசியன் பவுண்டேசனின் தொழில் நுட்ப உதவியுடன் இந்த ...
Read More »மீண்டும் திறக்கப்படும் கிறிஸ்துமஸ் தீவு தடுப்புக்காவல் நிலையம்!
கிறிஸ்துமஸ் தீவில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய தடுப்புக்காவல் நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் தீவில் அமைந்துள்ள தடுப்புக்காவல் நிலையத்தை மீண்டும் திறக்கவிருப்பதாக அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் அந்தத் தடுப்புக்காவல் நிலையம் மூடப்பட்டது. அதிகமான குடியேறிகள் கிறிஸ்துமஸ் தீவிற்கு வரும் சாத்தியம் உள்ளதால், அதனைக் கையாள தடுப்புக்காவல் நிலைய வசதிகளை மீண்டும் திறக்கத் தாம் ஒப்புதல் அளித்ததாக திரு.மோரிசன் தெரிவித்தார்.
Read More »டிரம்பை எதிர்த்து போட்டியிட வாய்ப்பு தேடும் 5 பெண்கள்!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப்பை தோற்கடிக்க ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்க 5 பெண்கள் வாய்ப்பு தேடுகிறார்கள். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி டிரம்ப் போட்டியிட்டால் அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு ...
Read More »பாகிஸ்தானுக்கு உதவ தயார் – சர்வதேச நிதியம் தகவல்!
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு உதவ தயாராக இருப்பதாக சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. சர்வதேச நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) பெற்ற கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடியில் அந்நாடு உள்ளது. அந்நாட்டின் அன்னியச்செலாவணியின் கையிருப்பு வெறும் 8.12 பில்லியன் டாலர் (சுமார் ரூ.57 ஆயிரத்து 650 கோடி) மட்டுமே உள்ளது. இது ஐ.எம்.எப். மற்றும் உலக வங்கி நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச அன்னியச்செலாவணி கையிருப்பை விட குறைவான தொகை ஆகும். அது மட்டுமின்றி இந்த தொகை, 7 ...
Read More »ஆஸி. வதிவிட உரிமைபெற்ற வெளிநாட்டவர்கள் தாய்நாடு சென்றபோது கைது?
அவுஸ்திரேலியாவில் வதிவிட உரிமை பெற்றுக்கொண்ட 17 சீனர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். அவ்வாறு கைது செய்யப்பட்டவர், சீன இரகசியப்படையினரால் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள் என கூறப்படுகின்றது. தங்களது உறவினர்களை காண்பதற்காக சொந்த ஊருக்கு சென்றபோது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இவ்வாறு இரகசிய இடங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் பலரது மனைவிமார் மற்றும் குழந்தைகள் அவுஸ்திரேலிய குடியுரிமையுடைவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் நால்வர் வீட்டுக்காவலிலும் ஏனையோர் தடுப்புமுகாம்களில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரியவருகின்றது. சீன அரசினால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுவருவதாக கூறப்பட்டும் Uighur சிறுபான்மை ...
Read More »யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பணி பூர்த்தி!
இறுதிப் போரில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி யாழ்ப்பாண பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்த தூபி அமைக்கும் பணிகள் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அந்தப் பகுதியில் தூபியை அமைப்பதற்கு கொழும்பின் உத்தரவுக்கு அமைவாக பல்கலைக்கழக நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் ஆரம்ப கட்ட வேலையுடன் இடைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அமைக்கும் பணிகளை பல்கலைக்கழக மாணவர்கள் முடிவுறுத்தியுள்ளனர். இறுதிப் போரின் போது படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள், தற்போது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்களின் ...
Read More »காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ. நா. கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டுக் குழுவின் 117 ஆவது கூட்டத் தொடர் பொஸ்னியாவிலும், ஹெசகோபினாவிலும் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இக் கூட்டத் தொடரில் 37 நாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற 760 முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை இடம்பெறவுள்ளது. அத்துடன் இதில் இலங்கையும் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More »அபுதாபி நீதிமன்றம் இந்தி 3-வது அலுவல் மொழியாக சேர்ப்பு!
அபுதாபி நீதிமன்றங்களில் இந்தி 3-வது அலுவல் மொழியாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்தி மொழி பேசக்கூடிய தொழிலாளர்கள் தங்களது குறைகளை எளிதில் தெரிவித்து தீர்வு காண உதவியாக இருக்கும். அபுதாபி நீதித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அபுதாபி நீதித்துறை செயல்பாட்டில் கடந்த ஆண்டு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நீதிமன்றத்தில் வாதி, பிரதிவாதிகளுக்கு ஆவணங்கள் அரபி மொழியில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. இதைத்தொடர்ந்து அனைத்து சிவில் மற்றும் வர்த்தகம் தொடர்புடைய வழக்குகளில் ஆவணங்கள் கடந்த ஆண்டு (2018) நவம்பர் மாதம் முதல் ஆங்கில மொழியிலும் ...
Read More »தலைவர் பிரபாகரன் வழியில் பாவமன்னிப்பு வழங்கினாராம் விக்கி!
வாரத்திற்கொரு கேள்வி 10.02.2019 இவ்வாரத்தின் கேள்வி சீக்கிரமே கிடைத்துள்ளது. அது பலர் கேட்கும் கேள்வியாக ஆனால் தனியொருவரிடமிருந்து வந்துள்ளது. இதோ அந்தக் கேள்வி – கேள்வி : ஈ.பி.ஆர்.எல்.எவ் கூட்டத்தில் கலந்து கொள்ளாதீர்கள் என்று நான்எச்சரித்தேன் அதற்கு காரணங்கள் தந்து நீங்கள் பங்குபற்றினீர்கள். நாங்கள் தடுத்தமை பற்றிக்கூட உங்கள் பேச்சில் குறிப்பிட்டிருந்தீர்கள். இப்பொழுது நடந்ததைப் பார்த்தீர்களா? அது உங்களுக்கே உலை வைத்துள்ளதே! நீங்கள் அந்தக் கூட்டத்தில் பங்கு பற்றியது சரியா? பதில்- கட்டாயம் சரி! மூளை உள்ளவன் தன்நலங் கருதி இவ்வாறானவற்றைத் தவிர்ப்பான். நெஞ்சத்தில் ஈரம் ...
Read More »