மாகாணசபைத் தேர்தல்களையும், ஜனாதிபதித் தேர்தலையும் ஒன்றுக்கொன்று அண்மித்த திகதிகளிலேயே நடத்த வேண்டும். அவ்வாறில்லாத பட்சத்தில் ஒரு தேர்தலின் முடிவு மற்றைய தேர்தலின் முடிவில் தாக்கம் செலுத்தும் நிலையேற்படும் என்று பெப்ரல் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. எமது நாட்டைப் பொறுத்தவரை தேர்தல் செலவீனங்களை வரையறுக்கும் சட்டங்கள் எவையும் இயற்றப்படாமை நியாயமான தேர்தல் நடைமுறையைப் பாதிக்கின்றது. எனவே தேர்தல்களின் போது மேற்கொள்ளப்படும் செலவுகள் தொடர்பில் வரையறைகளை ஏற்படுத்துவதற்குரிய சட்டமூலம் ஒன்றினைத் தயாரித்திருக்கின்றோம். இதனை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னரேனும் நிறைவேற்றிக்கொள்வதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி குறைவு: ஆஸ்திரேலியா பிரதமர் அதிருப்தி!
ஆஸ்திரேலிய நாட்டில் 12 சதவீத பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுவதை அறிந்த அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். மறுசுழற்சி திட்டங்களுக்காக 20 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் (13.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ) ஒதுக்கப்படும் என ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் இன்று அறிவித்துள்ளார். மேலும் நாட்டில் உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை என்ற தகவல் அறிந்ததும் கடும் அதிருப்தி அடைந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நாம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் போது அவை மீண்டும் ...
Read More »ஐ.நா சிறப்பு பிரதிநிதி சிறிலங்கா வருகை!
மத சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை சிறிலங்கா வருகின்றார். ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர் அரச மற்றும் எதிர் தரப்பினர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
Read More »ஜனாதிபதி தேர்தலுக்கு முன் மாகாண சபை தேர்தலை நடத்தலாமா?
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் குறித்து சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றிடம் வியாக்கியானம் கோரியுள்ளார். எல்லை நிர்ணய அறிக்கை முன்வைக்கப்பட்டிராத சந்தர்ப்பத்தில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதா என வியாக்கியானம் தருமாறு கோரியே சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விண்ணப்பத்தை முன்வைத்துள்ளார். அதன்படி ஜனாதிபதியின் குறித்த விண்ணப்பம் மீது எதிர்வரும் 23 ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் விசாரணைகளை முன்னெடுக்க உயர் நீதிமன்றம் தீர்மனைத்துள்ளது. அதன்படி உயர் நீதிமன்றின் தீர்ப்பானது, ...
Read More »பிச்சை எடுத்து தெருவில் உறங்கிய இளைஞர்! மில்லியனராக மாறினார்!
அவுஸ்திரேலியாவில் பிச்சை எடுத்து தெருவில் உறங்கிய இளைஞர், 21 வயதிலே மில்லியனராக மாறியுள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஹாரி சாண்டர்ஸ் என்கிற 21 வயது இளைஞர் சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்தி 1.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலருக்கு சொந்தமானவராக உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வாழ்க்கையில் பலர் வெற்றிபெற விழித்திருந்து இரவு முழுவதும் வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. உங்களுக்கு மனஅழுத்தம் இருந்தால் நீங்கள் ஒரு தொழிலை நடத்த முடியாது அதிகாலை 3 மணி வரை உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்ப்பதை ...
Read More »ரஷியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம்!
ரஷியாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் சுமார் 60 ஆயிரம் பேர் திரண்டதால் மாஸ்கோ நகரத்தின் மத்திய பகுதி குலுங்கியது. ரஷிய தலைநகர் மாஸ்கோவில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் திகதி நகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை கண்டித்தும், தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சியினருக்கு வாய்ப்பு வழங்க வலியுறுத்தியும் கடந்த மாத மத்தியில் மாஸ்கோ நகர மக்கள் போராட்டத்தில் குதித்தனர். எதிர்க்கட்சியினர் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ...
Read More »செஞ்சோலை நினைவுதூபி அமைப்பவர்களுக்கு விசாரணை!
சிறிலங்கா விமானபடையினரின் விமான தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் நினைவு தூபி ஒன்று வள்ளிபுனம் பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்றது.இந்த நினைவுத் தூபியில் கொல்லப்பட்ட மாணவிகளின் படங்களை பதிப்பதற்கு தடை விதித்துள்ள புதுக்குடியிருப்பு காவல் துறை குறித்த பணிகளை முன்னெடுத்த சிலரை இன்று (11)காலை புதுக்குடியிருப்பு காவல் துறை நிலையம் வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் விமானப்படையின் விமானங்கள் நடத்திய குண்டு தாக்குதலில் 54 பாடசாலை மாணவிகள் உயிரிழந்தனர். அவர்களுடைய 13 ...
Read More »“கோத்தாவை தமிழர் ஏற்க மாட்டார்கள்” : சிறிநேசன்
கோத்தபாய ராஜபக் ஷ தமிழ் மக்களை பாதிக்கக்கூடிய மிகவும் கசப்பான உணர்வுகளை எமது மனங்களில் விதைத்துள்ளார். தமிழ் மக்கள் அவரை ஏற்கமாட்டார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மவாட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். இவ்விடயம் குறித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில். தென்இலங்கையில் இருந்து வரும் தலைவர்களைப் பொறுத்தவரை அவர்கள் அடிப்படைவாத சிந்தனையில் மூழ்கியுள்ளனர். பேரினவாத பிடிக்குள் இறுகியுள்ளனர். பேரினவாதத்தை மட்டும் கையில் வைத்து ஆட்சி செய்பவர்கள். ...
Read More »எனக்கு எப்போது விடுதலை?
அகதிகளையும் தஞ்சக் கோரிக்கையாளர்களையும் கையாளும் விதம் குறித்து அவுஸ்ரேலிய அரசு செய்து வரும் பிரசாரத்தை நிராகரிக்குமாறு குர்து- ஈரானிய பத்திரிகையாளரும் அகதியுமான பெஹ்ரூஸ் பூச்சானி அவுஸ்ரேலியர்களுக்கு கூறியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மனுஸ்தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள அவர் ‘நண்பன் இல்லை, ஆனால் மலைகள் மனுஸ் சிறையிலிருந்து எழுதுகிறேன்’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். இதற்காக அவுஸ்ரேலியாவில் வழங்கப்படும் இலக்கியதற்கான விக்டோரியா பரிசை வென்றிருக்கிறார். இவ்விருதை ஏற்றுக்கொண்டு மனுஸ்தீவிலிருந்து காணொலி காட்சி மூலம் பேசிய அவர், இலக்கியத்திற்கு விடுதலை பெற்றுக்கொடுப்பதற்கான அதிகாரம் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். அலைப்பேசியில் ...
Read More »சஜித்தின் பெயரே முன்மொழியப்பட்டது!
கட்சியில் பல்வேறு தரப்பினரும் சஜித் பிரேமதாசவையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள். சாதாரண பொதுமக்களும் அதனையே எதிர்பார்கின்றார்கள். அத்துடன் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன முன்னணியின் சார்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவை களமிறக்கினால் அவரை எதிர்கொண்டு மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சிப்பீடத்தில் அமரக்கூடிய சக்தியை கொண்டிருக்கும் ஒரேநபர் சஜித் பிரேமதாசவே என என்று டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், தகவல் தொழிநுட்ப (அமைச்சரவை அந்தஸ்து அற்ற) அமைச்சரான அஜித் பீ பெரேரா தெரிவித்தார். இதனைவிடவும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுவிலும் ...
Read More »