திருட்டு சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய இலங்கையர்கள் ஐவர் அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, விக்டோரியா காவல் துறையினர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 7 பேரைக் கொண்ட குறித்த திருட்டுக் குழுவில் இலங்கையர்கள் ஐவரும் உறுப்பினர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த திருட்டுக் குழுவினர் அவுஸ்திரேலியாவின் பிரதான நகரங்களிலுள்ள ரயில் நிலையங்கள், சுப்பர் மாக்கட் உள்ளிட்ட இடங்களில் குறித்த சந்தேகநபர்கள் திருட்டில் ஈடுபட்டவர்களென்றும் தெரிவிக்கப்படுகின்றது. மெல்போர்ன் நகரில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர்களுள் பெண்கள் மூவரும் ஆண்கள் நாள்வரும் அடங்குவதுடன் இவர்கள் 25- ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
தமிழ் இளைஞர்கள் கடத்திய சிறிலங்கா கடற்படை அதிகாரிக்கு பதவி உயர்வு!
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டீகேபி தசநாயக்கவிற்கு அரசாங்கம் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தசநாயக்க ரியர் அட்மிரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் இவருக்கு தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டுதடுத்துவைக்கப்பட்டிருந்த இவர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். 2008 முதல் 2009 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பி;ல் காணாமல் போன 11 இளைஞர்கள் தொடர்பிலேயே இவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
Read More »ஆஸ்திரேலியாவில் திடீர் மழை – காட்டுத்தீயின் தாக்கம் குறைகிறது!
ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பரவிய பகுதிகளில் திடீரென பெய்த மழையால் காட்டுத்தீயின் தாக்கம் குறைந்ததால், தீயணைப்பு வீரர்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் அதன் தென் பகுதியிலும், நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா கடற்கரையையொட்டிய பகுதிகளிலும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருகிறது. இந்த காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். ஏறத்தாழ 100 கோடி விலங்குகள் பலியாகி இருக்கின்றன. 2 ஆயிரம் வீடுகள் எரிந்து தரை மட்டமாகின. 1 கோடி ஹெக்டேர் நிலப்பரப்பு சேதம் அடைந்தது. வெப்பத்தின் ...
Read More »நாங்கள் வேலை தருகிறோம் – ஹாரிக்கு அழைப்பு !
பிரிட்டிஷ் அரச குடும்பத்திலிருந்து விலகிய ஹாரிக்கு தங்கள் நிறுவனத்தில் வேலை தருவதாக ’பர்கர் கிங்’ அறிவித்துள்ளது. பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸின் இளைய மகன் ஹாரி. இவர் கடந்த 2018 மே 19-ம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை மேகன் மெர்கலை காதல் திருமணம் செய்து கொண்டார். வெள்ளையினத் தந்தை, கருப்பினத் தாய்க்குப் பிறந்த மேகன் மெர்கலுக்கு அரச குடும்பத்தினர் உரிய மரியாதை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவர் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதால் அரச குடும்பத்தினர் பொதுமேடைகளில் அவதூறாகப் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின. ...
Read More »கிட்டு பப்பாசியை அ டுத்து புதிய மா இனம் ஒன்று அறிமுகம் !
புதிய வகை மா இனம் ஒன்று ஆராச்சியின் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என கிளிநொச்சி. பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம், மேலதிகப்பணிப்பாளர் கலாநிதி.சி.ஜே.அரசகேசரி, தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தப்பிப்பிழைத்திருக்கும் பல்லாண்டு தாவரங்களை இனங்கண்டு அவ்வாறு இனங்காணப்பட்ட தாய்த்தாவரங்களை குறிப்பிட்டு, அவற்றை நாற்றுக்கள் தயாரிப்பாளர்களுக்கு வழங்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதற்காக மாகாண விவசாயத்திணைக்களத்தினருடன் இணைந்து திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையத்தினர் மாவட்ட செயலகத்தின் நிதியுதவியுடன் 2005,2006 ஆம் ஆண்டுகளில் ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தனர். இவ் ஆய்வில் பலதரப்பட்ட மாங்கன்றுகளும், பலாக்கன்றுகளும் தாவரரீதியில் ஆராயப்பட்டு ...
Read More »அவுஸ்திரேலிய காட்டுத்தீயினால் உலக முழுவதும் புகை பரவும் அபாயம் – நாசா
அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயில் இருந்து வெளியாகும் புகை விரைவில் உலக முழுவதும் பரவி ; தேசதத்தை ஏற்படுத்தும் என நாசா தெரிவித்துள்ளது. கிழக்கு கடற்கரையில் பல மாதங்களாக ஆக்கிரமித்த பாரிய காட்டுத்தீயால், பசிபிக் சதுமுத்திரம் முழுவதும் புகையைத் தூண்டியுள்ளது. புத்தாண்டு தினத்தை அடுத்த தீப் பிழப்புகளினால் புகை தென் அமெரிக்காவைக் நோக்கி நகர்ந்து, வானத்தை மங்கலாக மாற்றி, ஜனவரி 8 ஆம் திகதிக்குள் பூமியைச் சுற்றி பாதி அளவே நகர்ந்ததாக நாசா கூறியுள்ளது. இந்த புகை உலகம் முழுவதும் நகர்ந்து செல்லும் என்று ...
Read More »தேசிய புலனாய்வு பிரிவுகளை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்!
தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து அனைத்து புலனாய்வு பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் புலனாய்வு பிரிவுகளை ஒழுங்குப்படுத்தல் மற்றும் அதிகாரமளிக்கும் சட்டமொன்றை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
Read More »தமிழ் மக்களின் தீர்வு விடயங்களில் அலைஸ் வேல்ஸ் அழுத்தம் ….!
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் மற்றும் பொருளாதார மீள் எழுர்ச்சி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் ஜெனிவா தீர்மானத்தில் வெளிமட்ட அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளரும் தேசிய பாதுகாப்பு சபையின் இயக்குனருமான அலைஸ் வேல்ஸ்ஸிடம் வலியுறுத்தியுள்ளது தமிழ் மக்களின் தீர்வு விடயங்களில் தாம் அழுத்தம் கொடுப்பதாக அலைஸ் வேல்ஸ் கூட்டமைப்பிடம் வாக்குறுதியளித்துள்ளார் சிறிலங்கா வந்துள்ள அமெரிக்காவின் தெற்கு ...
Read More »காட்டுத்தீ புகையால் காற்று மாசுபாடு: போட்டியின்போது நிலைகுலைந்த டென்னிஸ் வீராங்கனை!
மெல்போர்னில் காற்று மாசு காரணமாக மூச்சு திணறி டென்னிஸ் கோர்ட்டில் வீராங்கனை நிலைகுலைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவில் புதர்கள் தீப்பற்றி எரிந்தது. தற்போது அது காட்டுத்தீயாக மாறியுள்ளது. காட்டுத்தீயால் மெல்போர்ன் நகரமே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. வீரர்கள் தீயை அணைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இருந்தாலும் தீயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் முதன்மை சுற்றுக்கு முன்னேறுவதற்கான தகுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஸ்லோவேனியா வீராங்கனை டேலிலா ஜகுபோவிச் சுவிட்சர்லாந்தின் ஸ்டெஃபானியை ...
Read More »ஹரி – மேகன் தம்பதியின் புதிய மாற்றத்திற்கு ராணி அனுமதி!
பிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து ஹரி தனது மனைவியும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்ற பதவியில் இருந்து விலகுவதற்கு ;மகாராணி எலிசபெத் அனுமதி அளித்துள்ளார். மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவின் இரண்டாவது மகனான ஹரிக்கும் அமெரிக்க நடிகையான மேகனுக்கும் ;2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அரசு குடும்ப நிகழ்வுகளில் இருந்து தள்ளி இருந்த ஹரி – மேகன் தம்பதி, பிரிட்டன் அரசு குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தனர். தங்கள் தேவைக்காக பணிக்கு செல்வதாகவும் கூறினர். இது ...
Read More »