வவுனியா வடக்கு கச்சல் சமளங்குளத்தில் நடைபெறும் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்தையும், பௌத்த மத ஆக்கிரமிப்பையும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக வவுனியா மாவட்டச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியா மாவட்டத்தின் ஒரு பகுதியான வவுனியா வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவு எல்லைக்குட்பட்ட கச்சல் சமளன்குளம் சீரமைக்கப்படுவதாகவும், அக்குளத்தின் கீழ் உள்ள காணிகள் அப்பிரதேசத்திற்கு வெளியேயிருந்து கொண்டு வந்து குடியேற்றப்படும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அங்கு ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
பி.எம்.எஸ்.சார்ள்சை மங்கள எப்படி வருணித்தார் தெரியுமா?
பிரபாகரனுக்கும் அஞ்சாத இரும்புப் பெண் என்று சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பி.எம்.எஸ் சார்ள்சை வர்ணித்துள்ள சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, அவர் மீது தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார். சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பதவியில் இருந்து பி.எம்.எஸ்.சார்ள்சை நீக்கி விட்டு, முன்னாள் கடற்படை அதிகாரியை அந்தப் பதவியில் நியமிக்க சிறிலங்கா அமைச்சரவை கடந்தமாதம் முடிவு செய்தது. இதற்கு எதிராக, சுங்கத் திணைக்கள அதிகாரிகள் பணிப் புறக்கணிப்பு மற்றும், சட்டப்படி வேலை செய்யும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதனால், சுமார் 10,000 கொள்கலன்கள் சோதனையிடப்படாமல் முடங்கிக் ...
Read More »அவுஸ்திரேலியாவின் பேர்த் மாநகரில் தமிழ் விழா!
அவுஸ்திரேலியாவின் மேற்கு மாநிலத்தில் உள்ள பேர்த் மாநகரில் இயங்கி வரும் தெற்கு தமிழ்ப் பாடசாலையின் வருடாந்த தமிழ் விழா நடைபெற்றது. இந்நிகழ்வு கடந்த 24.11.2018 தெற்கு தமிழ்ப் பாடசாலையால் மிகவும் சிறப்பாக ஒழுங்மைக்கப்பட்டு நடத்தப்பட்டது. தமிழர்களின் மொழி, கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆடல், பாடல், நாடகம், வில்லுப் பாட்டு போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்தப் பாடசாலையில் கல்வி கற்று வரும் சுமார் 30-க்கும் அதிகமான சிறுவர்கள் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர் என்பது ...
Read More »10 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியன் பெண்கள் கிரிகெட் அணி!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் சவுத் ஆஸ்திரேலியன் பெண்கள் கிரிக்கெட் அணி 10 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான டிவிசன் அளவிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டமொன்றில், தெற்கு ஆஸ்திரேலியன் – நியூ சவுத் வேல்ஸ் அணிகள் மோதின. முதலில் தெற்கு ஆஸ்திரேலியன் அணி பேட்டிங் செய்தது. நியூ சவுத் வேல்ஸ் அணியின் ரோக்சனா வான்-வீனின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தெற்கு ஆஸ்திரேலியன் அணியின் வீராங்கனை வரிசையாக வெளியேறினார்கள். தொடக்க வீராங்கனை பெபி மான்செல் ...
Read More »யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை! மீண்டும் விசாரணைகள்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20 ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் காவல் துறை மா அதிபர் பாரப்படுத்தினார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் உடனடியாக ஆரம்பித்து, யாழ்ப்பாணம் ...
Read More »வடகொரிய தலைவரை வியட்நாமில் சந்திப்பேன்- டிரம்ப்
வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் உடனான இரண்டாவது சந்திப்பு வியட்நாமில் இம்மாத இறுதியில் நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதி செய்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்து வந்தது வடகொரியா. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து போர்பதற்றம் நிலவியது. குறிப்பாக இந்த விவகாரத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு கடும் மோதல் போக்கு நீடித்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு ...
Read More »ஆஸ்திரேலியாவில் வெள்ளம்- தெருக்களில் உலாவந்த முதலைகள்
ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அணைகளில் இருந்த முதலைகள் வெளியேறி தெருக்களிலும், ரோடுகளிலும், உலாவருகின்றன. ஆஸ்திரேலியாவில் வட கிழக்கு பகுதியில் வரலாறு காணாத பருவ மழை பெய்கிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக குவின்ஸ் லெண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகள், பள்ளிகள் மற்றும் விமான நிலையங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். சிலர் தங்களின் வீட்டு கூரைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். தொடர்ந்து ...
Read More »நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம்! -பாதுகாப்பிற்கு 390 பில்லியன்!
2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்படி அரசாங்கத்தின் மொத்த செலவினம் ,2312 பில்லியன் ரூபாவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக பாதுகாப்பு அமைச்சுக்கு, 390.3 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, உள்நாட்டு விவகார மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சுக்கு, 290.2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 13.55 பில்லியன் ரூபா, அதிபர் செயலகத்துக்கும், 1.62 பில்லியன் ரூபா பிரதமர் செயலகத்துக்கும், 950 மில்லியன் ரூபா எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்துக்கும், நாடாளுமன்றச் செலவினங்களுக்கு, 3.58 பில்லியன் ...
Read More »வாள்வெட்டுக்குழு யாழில் மீண்டும் அட்டகாசம்!
யாழில்.வாள் வெட்டுக்கும்பலை கட்டுப்படுத்தி விட்டோம் என பொலிசார் மார்தட்டி இரண்டு நாட்களுக்குள் உடுவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வாள் வெட்டு கும்பல் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. யாழ்.உடுவில் ஆலடி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று இரவு 10 மணியளவில் உட்புகுந்த வாள் வெட்டு கும்பல் வீட்டினுள் பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொண்டு , வீட்டில் இருந்த உடமைகளை அடித்து உடைத்து சேதமாக்கி விட்டு , வீட்டு வளவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரண்டு மோட்டார் சைக்கிளையும் தீக்கிரையாக்கி விட்டு தப்பி ...
Read More »அவுஸ்திரேலியா விசேட கலந்துரையாடல்!
இந்தியாவில் இருந்து இலங்கையர்கள் சட்டவிரோதமான படகு பயணத்தின் மூலம் அவுஸ்திரேலியாவை சென்றடைவதை தடுப்பதற்கு அவுஸ்திரேலியா விசேட கலந்துரையாடலை நடத்தியுள்ளது. இதற்காக அவுஸ்திரேலியாவின் வான்படை தளபதி ரிட்சர் ஓவென் தலைமையிலான பிரதிநிதிகள் குழு ஒன்று இந்தியாவின் தமிழக மற்றும் புதுச்சேரி கடற்படை பிரதானி அலோக் பட்நகரை சந்தித்துள்ளது. தமிழகத்தில் ஏதிலி முகாம்களில் வசிக்கின்றவர்களும், இலங்கையில் இருந்து புதிதாக செல்லும் சிலரும் அங்கிருந்து கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்லும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் அவர்களுக்கு இடையில் கலந்துரையாடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் எதிர்வரும் மார்ச் மாதம் 28ம் திகதி முதல் ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			