யாழில் கொரோனா தொற்று ; வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது ஆனால் பொதுமக்கள் அலட்சியமாக செயற்படுவதை காண முடிவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.ம கேசன் தெரிவித்தார். தற்போதுள்ள யாழ் மாவட்ட கொரோனா நிலைமை தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் முகமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலவரம் சற்று அதிகரித்து செல்லும் நிலையை காணப்படுகிறது. பொதுவாக வடமாகாணத்தில் அதிகரித்து செல்லும் போக்கு காணப்படுகிறது. ஆகவே நாம் அனைவரும் இச் சந்தர்ப்பத்தில் மிகுந்த ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
இலங்கைக்குள் ஒரு சீன அரசு
இந்த அரசிடம் தமிழர்கள் கேட்பது அனைத்தும் மறுக்கப்படுகின் றது. சீனா கேட்கும் சகலதும் வழங்கப்படுகின்றது. இந்த நாடு எமக்கும் உரியது.அதனை தாரை வார்க்க அனுமதிக்க முடியாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ்மாவட்ட எம்.பி.யுமான உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்ட மூல த்தை அவசர அ ...
Read More »அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் 3-வது டோஸ் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு
கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசிகளில் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசியும் ஒன்று. கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசிகளில் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசியும் ஒன்று. இந்த தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் இந்தியாவும் தயாரித்து பயன்படுத்தி வருகிறது. ஒருவருக்கு இந்த தடுப்பூசி, 2 டோஸ்கள் போடவேண்டிய நிலையில், இதன் 3-வது டோஸ் மூலம் என்னவித மாற்றங்கள் நிகழும்? என்பதை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆய்வு செய்தது. இதில் ஆச்சரியமான முடிவுகள் கண்டறியப்பட்டு உள்ளன. குறிப்பாக 3-வது டோஸ் ேபாடப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இன்னும் வலிமையாகி ...
Read More »பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் புழல் ஜெயிலில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் புழல் ஜெயலில் உள்ளார். அவரை மருத்துவ காரணங்களின் அடிப்படையில் பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அற்புதம்மாள் கோரிக்கையை ஏற்று 30 நாட்கள் பரோல் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் பேரறிவாளன் 30 நாட்களில் பரோலில் ஜெயிலில் ...
Read More »ஆஸ்திரேலியாவில் மாறிக்கொண்டே இருக்கும் குடிவரவு விதிகள்?
“இப்போது ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான விசா பெற விண்ணப்பிப்பது சாதாரணமான காரியமல்ல. குடிவரவு விதிகள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கின்றன. அதுவும் ஒரு விண்ணப்பப் பணிகளுக்கே இடையிலேயே அந்த மாற்றம் நிகழ்கின்றது. ஒரு முறை விண்ணப்பிக்க தகுதியான நபர், அடுத்த முறை தகுதியற்றவராக இருக்கிறார்,” எனத் தெரிவித்திருக்கிறார் Melanie Macfarlane எனும் ஆஸ்திரேலிய புலம்பெயர்வு முகவர்.
Read More »புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டு உள்ளதா?
சிங்கப்பூரில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை என அந்நாடு விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் முதியவர், இணைநோய் அல்லாதோர் மட்டுமல்லாமல் இளம்வயதினர் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, நோயின் தீவிரம் கருதி பல நாடுகள் இந்தியாவிற்கான விமான போக்குவரத்து சேவையை ரத்து செய்துள்ளது. தற்போது இந்தியாவிலும் குழந்தைகளிடையே கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிங்கப்பூரில் குழந்தைகளிடம் தீவிரமாக கொரோனா பரவி வருவதால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இந்தியாவில் காணப்படும் பி.1.617.2 வகை கொரோனா ...
Read More »சிறைக்கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து சுகாதார அமைச்சருக்கு பிரேமலால் விளக்கம்
நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து சுகாதார அமைச்சருக்கு விளக்கமளித்தார். சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறி த்து சுகாதார அமைச்சருக்கு விளக்கமளித்தார். சிறைக் கைதிகளுக்கு மிக விரைவில் கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என்றும் கைதிகளுக்கிடையிலான இடைவெளியைப் பராமரிக்க சரியான முறையை ...
Read More »தடைகளை தாண்டி சிவாஜிலிங்கம் நந்திக்கடலில் அஞ்சலி !
யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களிற்கு முள்ளிவாய்க்காலில் நினைவஞ்சலி இடம்பெறக் கூடாதென பெரும் தடைகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், அதையும் மீறி இன்று (18.05.2021) அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணி பிரமுகர் பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்ட தரப்பினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை நந்திக்கடலில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர். முள்ளிவாய்க்கால், நந்திக்கடல் பிரதேசங்கள் முழுமையான இராணுவ வலயங்களாக்கப்பட்டு, பெருமளவு இராணுவம் ,கடற்படை புலனாய்வாளர்கள் காவல் துறை குவிக்கப்பட்டுள்ள நிலையில், எம்.கே.சிவாஜிலிங்கம், ...
Read More »கொவிட் தொற்றுக்கு உள்ளாகி துரைரத்னசிங்கம் காலமானார்!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரத்னசிங்கம் காலமாகியுள்ளார். கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது 80 ஆவது வயதில் இவ்வாறு உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More »ஒரு கனத்த இதயங்களோடு தான் இந்த நினைவு கூரலை நாங்கள் சந்திக்கின்றோம்!
முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்ட எமது மக்களை நினைவுகூர்வதை தடுக்கின்ற இக்கட்டான நிலையிலிருந்து நாங்கள் முன்னேறிச் செல்ல வேண்டி இருக்கிறது என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடகிழக்கு பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவரும், தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவருமான, அருட்தந்தை சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவேந்தல் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், முப்பது ஆண்டு காலப் போர் முடிவடைந்து ஒரு தசாப்தம் இரண்டு ஆண்டுகளை, அதாவது பன்னிரண்டு ஆண்டுகளை கடந்து போகிற நிலையிலே, முள்ளிவாய்க்கால் பகுதியிலும் அதை அண்டிய பகுதிகளிலும், இறுதிப்போர் காலங்களிலே ...
Read More »
Eelamurasu Australia Online News Portal