இனி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜக்கிய தேசியக் கட்சியின் அடிமைகளாகவே இருப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்று(06) கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி கோவில்வயல் கிராமத்தில் இடம்பெற்ற கிராம சக்தி வேலைத்திட்ட முன்னேற்ற மக்கள் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் யார் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களுக்கு நன்மை கிட்டும், தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதனை கருத்தில் எடுத்து தீர்மானங்களை மேற்கொள்ளும் நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
அமெரிக்கா விரோதத்தோடுதான் உள்ளது! – வடகொரியா
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும் அமெரிக்கா விரோதத்தோடுதான் இருக்கிறது என வடகொரியா பகிரங்க குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது. பரம எதிரிகளாக இருந்து வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் முறையாக சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த இந்த சந்திப்பில் கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் இதுதொடர்பாக எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ...
Read More »அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்கு இடமளிக்க கூடாது!
விடுதலை புலிகளுடன் முன்னெடுக்கப்பட்ட 30 வருடகால போரின் போது கூட நாட்டை துண்டாட யாருக்கும் இடமளிக்க வில்லை என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ , தேசிய பாதுகாப்பிற்கு நேரடியாக தாக்கம் செலுத்த கூடிய அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்கு இடமளிக்க கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்குமிடையிலான சந்திப்பு நேற்று எதிர்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் சோபா மற்றும் மில்லேனியம் சவால்கள் ஆகிய ஒப்பந்தங்களில் இலங்கைக்கு ஏற்படக் கூடிய ...
Read More »பலாலியிலிருந்து பிராந்திய நாடுகளுக்கு செப்டெம்பரில் விமான சேவை!
இந்தியாவிற்கும் பிராந்திய நாடுகளுக்கும் சுமார் 80 – 100 இருக்கைகளைக் கொண்ட விமானங்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் பலாலி விமான நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடுத்தப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார். பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகளை இன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாற தெரிவித்தார். அங்குதொடர்ந்தும் கூறுகையில் , வடக்கும் கிழக்குமாகு 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்த்தினால் எவ்வித அபிவிருத்தியும் இன்றி காணப்பட்ட பிரதேசங்களாகும். எனினும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் என்ற ...
Read More »இந்த புகைப்படம் உலகையே உலுக்கியது ஏன்?
அமெரிக்காவில் பறவை ஒன்று தனது குஞ்சுக்கு உணவு வழங்கிய புகைப்படம் பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம். அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் கடற்கரையில் பறவைகள் பல அழகாக பறந்துக் கொண்டிருப்பது வழக்கம். இதனை அழகாக புகைப்படம் எடுக்க கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று கரேன் மேசன் எனும் புகைப்பட கலைஞர் சென்றிருந்தார். வரிசையாக பல பறவைகளின் அசைவுகளை வித்தியாசமாக படம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது பிளாக் ஸ்கிம்மர் எனும் பறவை தனது குஞ்சிடம் நெருங்கி வந்துக் கொண்டிருந்தது. அந்த பறவையின் ...
Read More »ஆயுதமேந்துவோம் எனக் கூறுவதில் எவ்விதமான பின்னணியும் இல்லை!
சம்பந்தனின் தலைமைத்துவத்தின் கீழ் தீர்வுகள் கிடைக்கும் சாத்தியங்கள் தென்படவில்லையெனத் தெரிவித்த வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், மூன்று மாதங்களுக்குள் தீர்வுகள் கிடைக்காவிடின் ஆயுதமேந்துவோம் எனக் கூறுவதில் எவ்விதமான பின்னணியும் இல்லை. இது சும்மா பேச்சுக்காகப் பேசும் பேச்சு போலவே தெரிகிறது என்றார். சம்பந்தனின் தலைமைத்துவதின் கீழ் அவரது காலத்தில் தீர்வுகள் கிடைக்குமென்ற சாத்தியங்கள் தென்படவில்லை என்றும் கூறிய அவர், ஆயுதமேந்தும் நிலையில் தமிழர்கள் இல்லையென்றார். கிளிநொச்சி மாற்று வலுவுள்ளோர் சங்கத்தில் நோர்வே சுன்மோர வாழ் மக்களின் நிதியுதவியுடன் நேற்று(03) இடம்பெற்ற வாழ்வாதார உதவிகள் ...
Read More »உலகின் பல்வேறு பகுதிகளில் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் வலைத்தளங்கள் முடங்கின!
உலகின் பல்வேறு பகுதிகளில் பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் முடங்கியதால் பயனாளர்கள் மத்தியில் இன்று பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் இன்று அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்று இருக்கின்றன. இத்தகைய ஊடகங்களில் நாள்தோறும் மணிக்கணக்கில் நேரம் செலவிடும் இளைய தலைமுறையினர் ஏராளம். அப்படி சமூக ஊடகங்களில் ஒன்றிப்போனவர்களுக்கு, அவற்றின் முடக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விடும். அப்படி ஒரு நிகழ்வு இன்று நடைபெற்றது. இன்று மாலை பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ...
Read More »சஹ்ரான் குழுவினர் பயன்படுத்திய வேனை விடுவித்த நீதிமன்றம்!
சஹ்ரான் குழுவினரால் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு காவல் துறையால் மீட்கப்பட்ட டொல்பின் ரக வேன் இன்று (03) கல்முனை நீதிமன்ற நீதிவானால் நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டது. சாய்ந்தமருது தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த சஹ்ரான் குழுவினர் வாடகைக்குப் பெற்றுப் பயன்படுத்திய வேன் மூலம் மீரிகம பகுதிக்குச் சென்று ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் சிங்களப் பெண்கள் அணியும் 10 வெள்ளை நிற ஆடை உள்ளிட்ட பொருட்களைக் கொள்வனவு செய்திருந்தனர். இந்நிலையில் வாடகை மூலம் பெறப்பட்ட குறித்த வேன் அண்மையில் காவல் துறையால் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் குறித்த ...
Read More »ஹிஸ்புல்லா குற்றத்தடுப்பு பிரிவில் வாக்குமூலம்!
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினார். கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கந்தசாமி இன்பராசா என்பவரை தொலைபேசி மூலமாக அச்சுறுத்தினார் என்று முறைப்பாடளிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலேயே அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பிரிவில் முன்னிலையாக ஏற்கனவே முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதற்கமைய, இன்று காலை 10 மணியளவில் அவர் திட்டமிட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் பிரிவில் முன்னிலையாகியிருந்ததார் .
Read More »கொள்ளையடித்த பணத்தை தந்துவிட்டு பாகிஸ்தானை விட்டு வெளியேறுங்கள்!
பாகிஸ்தான் முன்னாள் அதிபரும் முன்னாள் பிரதமரும் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை திருப்பித் தந்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறுவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை என இம்ரான் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஆகியோருக்கு எதிராக பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவர்கள் சில வழக்குகளில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைப்பட்டிருக்கும் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி நேற்று மற்றொரு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை திருப்பித் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal