உலங்கு வான ஊர்தி விபத்தில் முப்படை தலைமை தளபதி உயிரிழந்தது குறித்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வேதனை தெரிவித்தார். குன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ உலங்கு வான ஊர்தி விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை உறுதிபடுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரியில் உரை நிகழ்த்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ராணுவ உலங்கு வான ஊர்தி மூலம் பயணம் மேற்கொண்டதாக விமானப்படை ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
மாவீரர் நெப்போலியனின் போர்வாள் ரூ. 21.11 கோடிக்கு ஏலம்
1799-ம் ஆண்டு மாவீரர் நெப்போலியன் ஆட்சிக்கவிழ்ப்பை நிகழ்த்திய போது எடுத்துச் சென்ற ஆடை, வாள் மற்றும் 5 ஆயுதங்கள் அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டன. மாவீரர் நெப்போலியன் போனபார்ட்டின் பல்வேறு நாடுகள் மீது படையெடுத்து அதில் வெற்றிவாகையும் சூடினார். பிரான்சை சேர்ந்த அவர் உலகம் முழுவதும் உள்ள நாடுகளை தன் வசப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு போர்களை தொடுத்தார். 1799-ம் ஆண்டு அவர் ஆட்சிக்கவிழ்ப்பை நிகழ்த்திய போது எடுத்துச் சென்ற ஆடை, வாள் மற்றும் 5 ஆயுதங்கள் அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டன. இல்லினாய்ஸ் மாகாணத்தை தலைமையிடமாக கொண்ட ...
Read More »மக்கள் தமது சொந்தக் காணிகளுக்குச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
இடிந்த தமிழ் பாடசாலைக் கட்டிடங்கள் உள்ள இடங்கள் கூட காட்டுப் பிரதேசங்கள் என்று ஒதுக்கப்படுவதுடன் 6 அடிக்கு மேற்பட்ட மரங்கள் ஓரிடத்தில் இருக்குமென்றால் அந்த இடம் காடாக ஒதுக்கப்பட்ட இடமாகவும் அதேபோல் கூகுள் வரைபடத்தில் பார்த்து கொஞ்சம் பச்சை வட்டமாக இருந்தால் அதுவும் ஒரு காட்டுப் பிரதேசமாகவும் ஒதுக்கப்படும் அவலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும் முன்னெடுக்கப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தா. சித்தார்த்தன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு ...
Read More »சிரியா துறைமுகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்
சிரியாவில் பெரும்பாலான இறக்குமதிகள் நடைபெற்று வரும் மிக முக்கிய துறைமுகத்தில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது. சிரியா நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு அரசு படைகளும், கிளர்ச்சியாளர்களும் சண்டையிட்டு வருகிறார்கள். இதில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சிரியா மீது இஸ்ரேல் நாடும் அடிக்கடி தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிரியாவில் உள்ள துறைமுகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் கடற்கரை நகரமான லதா கியாவில் உள்ள ...
Read More »யாழில் கரையொதுங்கும் சடலங்கள் தொடர்பில் விசாரணைகளை தீவிரப்படுத்தப்படுத்துங்கள்
யாழ். மாவட்ட கடற்கரைகளில் கரையோதுங்கும் நிலையில் இதுவரை தகவல்கள் வெளியாக நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரமேசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாண கரையோரங்களில் கடந்த வாரம் ஆறு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. இது தொடர்பில் எந்த விதமான தகவல்களும் வெளிவரவில்லை. அதனால்காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் வெளிவராத நிலையில் இந்த சடலங்கள் கரை ஒதுங்குகின்றன. கடற்கரைகளில் சடலங்கள் ஒதுங்கி ...
Read More »‘மனிதாபிமானம் எங்கே?’
மனிதாபிமானம் எங்கே?’ ‘நாங்கள் உங்களை போன்ற மனிதர்கள் இல்லையா?’ – ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் படகு வழியாக தஞ்சமடைந்த அகதிகளை தொடர்ந்து சிறைப்படுத்தி வைத்துள்ள ஆஸ்திரேலிய அரசு, தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் மெல்பேர்னில் உள்ள பார்க் ஹோட்டலிலும் அகதிகளை தடுத்து வைத்திருக்கிறது. இந்த அகதிகளை விடுவிக்கக்கோரி டிசம்பர் 10, மனித உரிமைகள் தினத்தன்று அந்த ஹோட்டலுக்கு எதிரே போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Read More »புதிய குற்றச்சாட்டு வழக்கு: ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறை
தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைவர் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி அந்நாட்டு ராணுவம், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதை தொடர்ந்து, நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்தது. அப்போது முதல் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ...
Read More »பிரியந்தவின் உடற்பாகங்கள் தாங்கிய பேழை ஏற்றப்பட்டது
பாகிஸ்தானில் கொடூரமாக அடித்து தீமூட்டி படுகொலைச்செய்யப்பட்ட இலங்கை பொறியிலாளரான பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல், இன்று மாலை 5 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டுவரப்படும் பாகிஸ்தான் லாகூரியிலிருந்து புறப்படும் யு.எல்.186 என்ற இலக்கத்தைக் கொண்ட ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தின் மூலமாக அவரது உடற்பாகங்கள் தாங்கிய பேழை எடுத்துவரப்படவுள்ளது. அந்தபேழை, இலங்கை அதிகாரிகளிடம் பாகிஸ்தானில் வைத்து கையளிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படம்.
Read More »பேராயர் மல்கம் ரஞ்சித் கண்டனம்
பாகிஸ்தானின் சியால்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் மறைவுக்கு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் இரங்கல் தெரிவித்ததுடன், கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற கொலைக்கு தனது கண்டனத்தையும் தெரிவித்தார். மதம் என்ற போர்வையில் இழைக்கப்படும் இதுபோன்ற கொடூரமான, குற்றச்செயல்களால் ஏற்படும் அவலங்களை தடுத்து நிறுத்த அனைத்து நாடுகளின் தலைவர்களும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என தனது இரங்கல் செய்தியில் பேராயர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கொலைக்கு எதிராக பாகிஸ்தான் தலைமை உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
Read More »மக்கள் கிளர்ச்சி ஆரம்பித்துவிட்டது
இலங்கையில் அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி ஆரம்பித்து விட்டதாக தெரிவிக்கும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், இந்த மக்கள் கிளர்ச்சி ஆட்சி மாற்றத்தில் மாத்திரமே முடியுமெனவும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் நேற்றைய (03) குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோர் தற்போதையஅரசாங்கத்தின் தூண்களாக இருக்க, தற்போது அவர்கள் ஆட்டம் காண்கிறார்கள் எனவும் கூறினார். ஆட்சிபீடம் மேற்றிய பெரும்பான்மை இன மக்களே தற்போதைய அரசாங்கத்தை திட்டித்தீர்க்கிறார்கள். இவ்வாறான நிலையில் ...
Read More »