ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்ட டுவிட் தொடர்பாக விசாரணை செய்ய குற்றவியல் புலனாய்வு திணைக்களம் பி.பி.சி செய்தியாளர் அஸாம் அமீனுக்கு விடுத்த அழைப்பை மீளப்பெற்றுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்க மற்றும் சிவில் அமைப்புக்களின் அழுத்தங்கள் காரணமாக இன்று காலை அஸாம் அமீனை தொடர்பு கொண்ட குற்றவியல் புலனாய்வு திணைக்களம் அழைப்பை மீளப்பெற்றுள்ளது. இது தொடர்பாக அஸாம் அமீன் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ் விடயம் தொடர்பாக விசாரணை செய்வற்கு குற்றப்புலனாய்வு பிரிவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்மையானது பொருத்தமானதல்ல என தொலைப்பேசி ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
மலேசியாவில் 92 வயது நிரம்பியவர் பிரதமராக பதவியேற்க உள்ளார்!
மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 92 வயது நிரம்பிய முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது பிரதமராக பதவியேற்க உள்ளார். மலேசிய பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. பிரதமர் நஜீப் ரஜாக்கின் ஆளும் பி.என்.கட்சிக்கும், முன்னாள் தலைவர் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒன்றரை கோடி மக்களில் 69 சதவிகிதம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆளும் பி.என். கட்சி தலைமையிலான கூட்டணியை விட ...
Read More »கழுதை தேய்ந்து கட்டெறும்பானது! கூட்டமைப்பு பங்காளிக்கட்சிகள் கூட்டம்!!
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஆராய்வதற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான சந்திப்பு யாழில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு யாழ்ப்பாணம் மார்டீன் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப் பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது. அத்துடன், அந்தக் கட்சி கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட உள்ளதென கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார். அதனால் அந்தக் கட்சி கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான இன்றைய சந்திப்பை தவிர்த்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
Read More »யாழ். பல்கலைக்கழகத்தை மூடி மாணவர்கள் போராட்டம்!
அரசியல் கைதிகளின் போராட்டத்திற்குரிய தீர்வினை முன்வைக்கவேண்டும் என்று கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் இன்று (30) முதல் காலவரையறையற்ற கதவடைப்புப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளது. இதன்படி இன்றிலிருந்து பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா செயற்பாடுகள் முற்றிலும் ஸ்தம்பிதமடையும் வகையில் பிரதான வளாகத்தின் அனைத்து வெளிப்புறக் கதவுகளும் இழுத்து மூடப் பட்டுள்ளன. அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணா நிலைப் போராட்டத்தினை முன்னெடுத்துவந்த மூன்று அரசியற்கைதிகள், தமது வழக்கினை தமிழ் பிரதேச நீதிமன்றம் ஒன்றுக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருந்தனர். குறித்த கைதிகளின் கோரிக்கைகள் இதுவரையில் நிறைவேற்றப்படாத சூழ்நிலையில் அவர்களுக்கு ...
Read More »யாழில் குழந்தைகளுக்கு நஞ்சு ஊட்டி தானும் தற்கொலை செய்த தாய்!
1 கோடியே 17 லட்சம் ரூபா பணத்தினை வாங்கியவர்கள் ஏமாற்றியதனால் கணவன் நஞ்சு குடித்து தற்கொலை செய்திருந்த நிலையில் அக் குடும்பத்தினைச் சேர்ந்த தாய் மற்றும் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் நஞ்சு குடித்து நேற்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் யாழில் பெரும் பரப்பினை ஏற்படுத்தியுள்ளது. யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உட்பட சிறிய தாயாருக்கும், தனது குடும்பத்தினருக்கும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தானும் மருந்தினைக் குடித்து தனது குழந்தைகளுக்கும் பருக்கித் தாயும் பிள்ளைகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். யாழ்.அரியாலை ஏ.வி.வீதியில் உள்ள ...
Read More »புதிய கடற்படை தளபதியாக ரணசிங்க!
சிறிலங்கா கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது. இரண்டுமாதங்கள் மாத்திரமே சிறிலங்காவின் கடற்படைத் தளபதியாக செயற்பட்ட ட்ராவிஸ் சின்னையா இன்றுடன் தனது கடற்படைத் தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெறுகின்றார். 55 வயதுடன் ஓய்வு பெரும் வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையாவின் பதவிக் காலத்தை மைத்திரிபால சிறிசேன விரும்பினால் நீடித்திருக்க முடியும், எனினும் ஒரு மாத காலத்திற்கு மட்டுமே அவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, மிகவும் குறுகிய காலத்திற்கு நாட்டின் கடற் படைத் தளபதியாக பதவி வகித்தவர் ...
Read More »சின்னையாவின் கதி இன்று தெரியும்!
கடற்படைத் தளபதி ட்ராவிஸ் சின்னையாவின் தொடர்ந்து பதவியில் நீடிப்பாரா என்பது இன்று தீர்மானிக்கப்படும். ட்ராவிஸ் சின்னையா 55ஆவது வயது பூர்த்தி காரணமாக கடந்த செப்டம்பர் 23ஆம் திகதி பதவியில் இருந்து ஓய்வுபெறும் நிலையில் இருந்தார். அக்காலப் பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்கான பயணமொன்றை மேற்கொள்ள இருந்த நிலையில் கடற்படைத் தளபதிக்கு ஒருமாத கால பதவி நீடிப்பை வழங்கி, இது தொடர்பாக நாடு திரும்பிய பின் கலந்துரையாட அவகாசமளிப்பதாக உறுதியளித்திருந்தார். இந்நிலையில், நாளையுடன் ட்ராவிஸ் சின்னையாவின் பதவி நீடிப்புக் காலம் நிறைவடைய உள்ள நிலையில் ...
Read More »முல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவ சிப்பாய் பலி
முல்லைத்தீவு கேப்பாப்புலவில் 59 ஆவது படைப்பிரிவை சேர்ந்த இராணு சிப்பாய் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இராணுவ சிப்பாய் கேப்பாப்புலவு இராணுவ முகாமிற்குள் உழவு இயந்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்த சமயம் விபத்தில் சிக்கியுள்ளதாக இராணுவத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளாகிய இராணுவ சிப்பாயின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இராணுவப் பொலிஸ் பிரிவினர் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Read More »இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டோரின் 30வது ஆண்டு நினைவு!
யாழ் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் 30வது ஆண்டு நினைவுநாள் தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். போதனா வைத்தியசாலையில் 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21, 22 ஆம் திகதிகளில் வைத்தியசாலை வளாகத்துக்குள் நுழைந்த இந்திய படையினரால் சுட்டுப்படுகொலை செய்ய்பட்ட 21 பேரின் நினைவு தினம் இன்று நினைவு கூரப்பட்டது. 30வது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது. அகவணக்கத்துடன் ஆரம்பமான நினைவு நிகழ்வில் உயிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் ...
Read More »எல்லை நிர்ணயம் குறித்து யோசனைகள் பெறுவதற்கு ஆணைக்குழு நடவடிக்கை
மாகாணசபைகளுக்கு நிர்வாக மாவட்டங்களின் கீழ் தேர்ந்தெடுக்கப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தேர்தல் தொகுதிகளை ஏற்படுத்துவதற்கு தேவையான யோசனைகள் மற்றும் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கு எல்லை நிர்ணய ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு 17ஆம் இலக்க மாகாணசபை தேர்தல் வாக்கெடுப்பு திருத்த சட்டமூலத்தின் அடிப்படையிலே இந்த தேர்தல் தொகுதிகள் ஏற்படுத்தப்படுவதாகஆணைக்குழுவின் செயலாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், மாகாணசபைகளுக்கு குறிப்பிட்ட நிர்வாக மாவட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படவுள்ள முழு உறுப்பினர்களின் எண்ணிக்கையில் நூற்றுக்கு 50 க்கு ஈடான தொகையை தெரிவு ...
Read More »