வரக்காபொல ;கணேகம ;பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவரின் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிப் பிரயோகம், தாய் மற்றும் மகள் மீது மேற்கொள்ளப்பட்ட நிலையில், 22 வயதுடைய மகள் உயிரிழந்துள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் குறித்த துப்பாக்கிச் சூட்டில் தாய் படுகாயமடைந்த நிலையில், வரக்காபொல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (14.01.2020) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு என்கிறது ஐரோப்பிய ஒன்றியம்!
ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் பெயரிட்டப்பட்டுள்ளது. 21 பயங்கரவாத குழுக்கள் மற்றும் 15 தனிநபர்களின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. 2006 ஆம் ஆண்டின் மே மாதம் முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்க்கட்டது. தொடர்ந்து 14 வருடங்களாக இந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Read More »நிதி மோசடி செய்த வங்கியின் முகாமையாளர் கைது!
நிதி மோசடி செய்த குற்றத்திற்காக கம்பஹா சணச கிராமிய வங்கியின் முகாமையாளர் மற்றும் பிரதி பொது முகாமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 73 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது. வைப்பாளர்களினால் வைப்பில் இடப்பட்ட நிதியே இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை அடுத்தே சணச கிராமிய வங்கியின் முகாமையாளர் மற்றும் பிரதி பொது முகாமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். குறித்த சம்பவம் ...
Read More »ஆஸ்திரேலிய காட்டுத் தீயணைப்பு பணியில் தன்னார்வ வீரர் உயிரிழப்பு!
ஆஸ்திரேலிய காட்டுத் தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வ வீரர் பில் ஸ்லேட் தென்பகுதியில் தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது மரம் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். ஆஸ்திரேலியாவின் தென் பகுதியிலும், நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா கடற்கரையையொட்டிய பகுதிகளிலும் பரவி வருகிற காட்டுத்தீ அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரீசனுக்கு பெருத்த தலைவலியாக மாறியுள்ளது. இந்த தீயில் சிக்கி இதுவரை தீயணைப்பு வீரர்கள் 3 பேர் உள்பட 26 பேர் உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரம் வீடுகள் எரிந்து தரை மட்டமாகி உள்ளன. அமெரிக்காவின் இண்டியானா மாகாண பரப்பளவுக்கு ...
Read More »கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய சவூதி விமானம்!
சவூதி – ஜெட்டாவிலிருந்து இந்தோனேசியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்திலிருந்து, இந்தோனேசியாவை சேர்ந்த இரு பெண்களின் சடலங்கள் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன
Read More »வாள் – கத்தி முனையில் அச்சுறுத்தி யாழில் கொள்ளை!
யாழ்ப்பாணம், குப்பிழான் தெற்கு வீரமனைப் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறையின் புகை போக்கியைப் பிரித்து உள்ளிறங்கிய கொள்ளைக் கும்பல் குறித்த வீட்டிலிருந்தவர்களை வாள் மற்றும் கத்தி முனையில் கடுமையாக அச்சுறுத்தி அங்கிருந்த தங்க நகைகள் பெறுமதிவாய்ந்த கைத்தொலைபேசிகள் மற்றும் ஒருதொகைப் பணம் என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது. குறித்த கொள்ளைச் சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை (11) அதிகாலை இடம்பெற்றுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த வீட்டின் உரிமையாளர்களான கணவனும், மனைவியும் வீட்டில் இல்லாத நிலையில் அவர்களது நெருங்கிய உறவினரான இருவர் வீட்டின் பாதுகாப்புக் ...
Read More »அவுஸ்திரேலியா காட்டுத் தீ பாதிப்பை கண்முன் காட்டும் படங்கள்!
அவுஸ்திரேலியாவில் பல மாதங்களாக எரியும் காட்டுத் தீ ஒரு அழியாத வடுவை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் மாதம் முதல், அவுஸ்திரேலியா முழுவதும் கிட்டத்தட்ட 10 மில்லியனுக்கும் அதிகமான ஹெக்டயர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலாக்கிய ;தீ விபத்தில் குறைந்தது 27 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன், சுமார் 2,000 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்து நாசமாகியுள்ளது அத்தோடு, வனவிலங்குகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 1 பில்லியனுக்கும் அதிகமான விலங்குகள் ;உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு, பாதிக்கப்பட்ட பகுதிகள் வழமை நிலைக்கு மீள்வதற்கு பல ஆண்டுகள், தசாப்தங்கள் ஆகலாம் எனவும் ...
Read More »இந்தியாவின் பாதுகாப்பு ஈழ தமிழர்களை பாதுகாப்பதில் தங்கியுள்ளது!
லங்கை தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெறும் ஆறாம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழா மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இன அழிப்பில் இருந்து தமிழ் மக்களை பாதுகாத்துக்கொள்வதற்கு சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டி கட்டமைப்பே தீர்வு என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதை பெற்றுக்கொடுக்கும் பாரிய கடப்பாடு பாரத மக்களுக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒற்றையாட்சிக்குள் ...
Read More »நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர் – இந்திய அணி இன்று அறிவிப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து 20 ஓவர் போட்டிகளை கொண்ட இந்திய அணி வீரர்களின் பெயர் இன்று அறிவிக்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணி வருகிற 24-ந்தேதி முதல் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து 20 ஓவர் போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்டுகளில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. வழக்கமான 15 வீரர்கள் பட்டியலுக்கு பதிலாக 16 அல்லது 17 வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. 20 ஓவர் அணியை பொறுத்தவரை உலக கோப்பை போட்டிக்கு ...
Read More »காட்டுத்தீ நிவாரணத்துக்காக ரசிகர்களுக்கு நிர்வாண படத்தை அனுப்பி ரூ.7 கோடி திரட்டிய மாடல் அழகி!
ஆஸ்திரேலியாவில் கடந்த 4 மாதங்களாக எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்க நிவாரணத்துக்காக ரசிகர்களுக்கு மாடல் அழகி கெய்லன் வார்டு தனது நிர்வாண படத்தை அனுப்பி ரூ.7 கோடி திரட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு மாகாணங்களில் கடந்த 4 மாதங்களாக எரிந்து வரும் காட்டுத்தீ, அங்கு இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 24 பேரை பலி கொண்ட இந்த காட்டுத்தீ இன்னும் கட்டுக்குள் அடங்காமல் பற்றி எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீயில் பறவைகள், பாலூட்டிகள் மற்றும் ஊர்வன என சுமார் 100 கோடி ...
Read More »