தனது மகனின் பிறந்த நாள் களியாட்ட நிகழ்வின் போது ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி 6 நட்சத்திர ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டு டுபாயில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரபல பாதாள உலகத் தலைவனும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னனுமான மாக்கந்துரே மதூஷ் என அழைக்கப்படும் சமரசிங்க ஆராச்சிலாகே மதூஷ் லக்ஷித டுபாயிலிருந்து நேற்று நாடு கடத்தப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை 5 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த யூ.எல்.226 எனும் விமானத்தில் மாக்கந்துரே மதூஷ் நாடுகடத்தப்பட்டிருந்தார். விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரைப் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
இந்திய சுற்றுலாவாசியை வெளியேற்றிய ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்ற 45 வயது இந்தியர் ஒருவரின் செல்போனில் வெறுக்கத்தக்க காணொலி இருந்ததால், அவரை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்க அந்நாட்டு அதிகாரிகள் மறுத்துள்ளனர். கடந்த மே 2ம் திகதி மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவின் பெர்த் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த அவரிடம் பரிசோதனை நடத்திய போது இக்காணொலி கண்டெடுக்கப்பட்டதாக இன்று (மே 05) ஆஸ்திரேலிய எல்லைப்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனையை தொடர்ந்து அவரின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, அவரின் சுற்றுலா விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த மே 2ம் திகதி முதல் பெர்த் குடிவரவு ...
Read More »இறுதி நேரத்திலேயே சஹரான் தற்கொலைதாரியாக மாறினார்!
தற்கொலைக் குண்டுதாரிகளின் சூத்திரதாரியான சஹரான் ஹாசிம் மற்றும் உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாகவே சஹரான் நேரடியாக தற்கொலை தாக்குதலை மேற்கொண்டதாக முக்கிய சந்தேகநபரான மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா வாக்குமூலம் வழங்கியுள்ளார். பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் காவல் துறையினர் தேடப்பட்டுவந்த சந்தேகநபர்களில் இருவர் நாவலப்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா மற்றும் மொஹமட் இப்ராஹிம் சாஹித் அப்துல்லா ஆகிய இருவருமே இவ்வாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். இந்நிலையிலே ...
Read More »மூளைச் சலவை செய்த சஹ்ரான்!
உயிர்த்த ஞாயிறுதினத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹஸீம், தான் திட்டமிட்டிருந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கான 6 இளைஞர்களை, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தியே, பகிரங்கமாகத் தேடிக் கண்டுபிடித்துள்ளாரென, இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இந்த ஆறு இளைஞர்களையும், தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தத் தயாராகும் மனநிலைக்குக் கொண்டுவருவதற்கான மூளைச் சலவையை, தொடர்ந்து பல மாதங்களாக, தனிப்பட்ட “ஷெட்ரூம்” ஊடாக மேற்கொண்டுள்ளார் என்று, சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிலோன் தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் ஆர்.அப்துல் ராசிக், இலங்கை ...
Read More »“தமிழ் துணை இராணுவம்” அமைக்க இரகசியப் பேச்சு!
கடந்த ஈஸ்டர் ஞாயிறு அன்று திடீரென ஒரே சமயத்தில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்களினால் கதிகலங்கி போயுள்ள பாதுகாப்பு உயர் வட்டாரங்கள் இந்த தீவிரவாதத்தை அடக்கும் அவசர நடவடிக்கைகளில் ஒன்றாக தமிழ் துணை இராணுவ குழுக்களுக்கு மீண்டும் உயிரூட்ட தீர்மானித்து அதற்கான நடவடிக்கைகளை அவசரஅவசரமாக ஆரம்பித்து இருக்கின்றன என்று நம்பிக்கையாக அறியவருகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது மாற்று தமிழ் போராளிகள் குழுக்களையும் ராசிக் குழு, கருணா குழு, பிள்ளையான் குழு,போன்றவற்றையும் இராணுவத்துணைப் படையாக இலங்கை அரசுத் தரப்பு பயன்படுத்திவந்தது என்பது பரகசியமான ...
Read More »தற்கொலைக் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டோருக்கு சீனா நிதியுதவி!
ஈஸ்டர் ஞாயிறு இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியை சீனா நேற்றைய தினம் வழங்கியுள்ளது. இலங்கையிலுள்ள சீனத்தூதுவர் ஷெங் யுவான் சீன செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய செயலாளர் நிமல் குமாரிடம் ஒரு கோடி 78 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவிற்கான காசோலையைக் கையளித்தார். இந்த நிதியுதவி விசேடமாகக் குண்டுத்தாக்குதல்களில் காயமடைந்தவர்களின் சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்படும். துயரம் நிறைந்த இந்தத் தருணத்தில் இலங்கை மக்களுக்கு ஆதரவாக சீன அரசாங்கம் உறுதியாக நிற்கிறது. தேசிய பாதுகாப்பு மற்றும் உறுதிப்பாட்டை பேணிக்காத்து சமாதானத்தையும் ...
Read More »பல்கலை மாணவர்களை விடுவிக்க சட்டமா அதிபரின் அனுமதியை பெற நடவடிக்கை!
யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கு சட்டமாஅதிபரின் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளதாக அறிவித்துள்ளதோடு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விடயங்களை சரியாக அறியாது அல்லது விளங்காமை போன்று பாசாங்கு செய்வதாகவும் சாடியுள்ளது. இதுதொடாபில் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்,ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பல்கலைக் கழக நிர்வாகத்தின் கோரிக்கையின் பெயரில் பல்கலைக் கழகத்தில் நடாத்தப்பட்ட சோதனையின்போது கைது செய்யப்பட்ட இரண்டு மாணவத் தலைவர்களும் குற்றம் சாட்டப்படாமல் விடுவிக்கப்பட வேண்டும் ...
Read More »அவுஸ்திரேலியாவில் மூன்று கண்ணுடன் சிக்கிய அதிசய பாம்பு!
அவுஸ்திரேலியாவில் மூன்று கண் கொண்ட பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதன் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவுஸ்திரேலியாவின் Humpty Doo பகுதியில் இருக்கும் Arnhem தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் Monty என்ற பெயர் கொண்ட பாம்பை Northern Territory Parks and Wildlife அதிகாரிகள் கண்டுள்ளனர். அந்த பாம்பிற்கு மூன்று கண்கள் இருந்ததாகவும், சுமார் 40 செ.மீற்றர் நீளம் இருந்ததாகவும், இளம் பாம்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாம்பை எக்ஸ்-ரே எடுத்து பார்த்த போது, ஒரு மண்டை ஓடு மற்றும் ஒரு ...
Read More »மீண்டும் ஏவுகணை சோதனைகளை தொடங்கியது வடகொரியா !
வடகொரியா மீண்டும் ஏவுகணைகள் சோதனையை தொடங்கி உள்ளது. இது அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. வடகொரியா மீண்டும் ஏவுகணைகள் சோதனையை தொடங்கி உள்ளது. இது அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. அடுத்தது என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் விதித்த பொருளாதார தடைகளை மீறியும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதித்து வந்தது. இது அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே தீராப்பகையை ஏற்படுத்தியது. ...
Read More »யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவர்,செயலாளருக்கு விளக்கமறியல்!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரை வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் காவல் துறையால் சுற்றிவளைக்கப்பட்டபோது.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்,மாவீரர்களின் ஒளிப்படங்கள் மற்றும் தமிழீழ வரைபடம் என்பன கைப்பற்றப்பட்டன. அதனையடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு எதிராக ...
Read More »