லண்டனில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் ஆறாம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்த நெருக்கடியான தருணங்களிலும் இறுதிவரை ஈழத்தில் மருத்துவப் பணியாற்றிய களமருத்துவப்போராளி் திரு.தர்மரத்தினம் (வாமன்) ஆற்றிய உரை.
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதம் என சொல்கிறது கூட்டமைப்பு – கயேந்திரகுமார் (காணொளி)
இன்று தமிழர்களுக்கான உரிய தீர்வு என்னவென்ற விடயத்திலும் அதனை முன்னெடுப்பவர்கள் யார் என்றவகையிலும் மக்களிற்கு விளங்கப்படுத்தவேண்டிய தேவையுள்ளது. வடமராட்சியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியின் சார்பில் நடைபெற்ற மேதின பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கயேந்திரகுமார் பொன்னம்பல் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது. இன்று இனப்பிரச்சனை என்று சொல்லுகின்றோம். அதற்கான தீர்வு என்ன? இலங்கைத்தீpவில் சிங்களமக்களுக்கு எவ்வாறு சிறப்பான கலை கலாச்சாரம் உள்ளதோ அதேபோல தமிழ்மக்களும் சிறப்பான கலை கலாச்சாரத்தை கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் சிங்களவர்களின் மொழியை கலாச்சாரத்தை மதிப்பதுபோல அவர்களும் எமது மொழியை கலாச்சாரத்தை மதிக்கவேண்டும். ...
Read More »வடக்கு மக்களாலே என்னில் மாற்றம் ஏற்பட்டது: மக்களின் எண்ணத்தை செயற்படுத்துகிறேன்: முதல்வர் விக்கி
வடக்கு மக்களுடன் வாழ்ந்து வருவதன் காரணமாகவே எனக்குள் மாற்றம் ஏற்பட்டது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் பிராந்திய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இனப்படு கொலைத் தீர்மானத்தை நிறை வேற்றியமை, இராணுவ வெளியேற்றம் குறித்து பிரதமரிடம் கேள்வி எழுப்பியமை, 13ஆம் திருத்தச்சட்டம் இனப் பிரச்சினைக்கு தீர்வல்ல எனச் சுட்டிக்காட்டியமை உள்ளிட்ட பல கருத்துக்களால் அண்மைய காலத்தில் இலங்கை அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சி. வி. விக்கினேஸ்வரன் மீது சர்வதேச அளவில் கவனம் ஏற்பட்டுள்ளது. வடக்கில் ...
Read More »Two Nation One Country – தமிழரசுக்கட்சி விளக்கம்!
தந்தை செல்வநாயகம் அவர்களின் 38 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழரசு கட்சியால் அனுப்பிவைக்கப்பட்ட கட்டுரை: தமிழரசுக்கட்சியின் மதிப்பார்ந்த தலைவனாக விளங்கிய தந்தை செல்வநாயகம் அவர்களது சிரார்த்த தினத்தையொட்டி இந்த விடயத்தை ஆராய்வது காலப் பொருத்தமானது எனக் கருதப்படுகிறது. தமிழ்பேசும் மக்களின் அரசியல் வரலாற்றில் ‘தமிழ்த் தேசிய இனம்’ என்ற வார்த்தைப் பிரயோகம், தமிழரசுக்கட்சியின் அங்குரார்ப்பண நாளில் இருந்தே பாவனையிலிருந்து வருகின்றது. 18.12.1949அன்று நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் முதலாவது கூட்டத்தில் கட்சியின் அமைப்புத் தீர்மானத்தை பிரேரித்துப் பேசிய தந்தை செல்வநாயகம் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ”நாட்டின் ஒற்றுமைக்குப் ...
Read More »தமிழரசு கட்சி தமிழ் மக்களை எங்கு கொண்டு செல்ல விரும்புகிறது?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு வலுவான தமிழ்த் தேசிய அரசியல் சக்தியாக உருவாக்க வேண்டும் என்னும் குரலுக்கு கிட்டத்தட்ட அரை சகாப்தகால வயதுண்டு. ஆனாலும், ஆண்டுகள் கழிந்தனவேயன்றி முன்னேற்றங்கள் எதனையும் காண முடியவில்லை. இது தொடர்பில் நான் முன்னரும் பல தடவைகள் விவாதித்திருக்கிறேன். அந்த வகையில் என்னைப் போன்றவர்களின் வாதங்களுக்கும் அரைத்தசாப்த கால வயதாகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் இதற்காக நாம் செலவிடப் போகின்றோம்? ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் ஓரளவு சுமூகமான சூழலில் தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியை பலப்படுத்த வேண்டிய ...
Read More »பறிக்கப்படுமா தமிழரின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம்?
இலங்கையின் தேர்தல் முறைமையை மாற்றியமைக்கும் விவகாரம் இப்போது முக்கியமான கட்டத்தை அடைந்திருக்கிறது. தற்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமை பல்வேறு சிக்கல்களைக் கொண்டதாக இருப்பதால், கலப்பு பிரதிநிதித்துவ முறைமை ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கையில் ஆரம்பத்தில் இருந்தே நடைமுறையில் இருந்து வந்த தொகுதிவாரி தேர்தல் முறைமையை தனது வசதி கருதி, 1978ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது, முற்றாகவே இல்லாமல் செய்திருந்தார் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன. அப்போது பாராளுமன்றத்தில் பெற்றிருந்த அசுர பலத்தைக் கொண்டு, எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தலையெடுக்க ...
Read More »அஞ்சலிக்கு அனுமதிக்கப்படுமா முள்ளிவாய்க்கால்?
2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த முல்லைத்தீவின், முள்ளிவாய்க்கால் கரையோரத்தில், முதல் முறையாக ஒரு சர்வதேசப் பிரமுகர், போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார். இம்மாதம் முதல்வாரம், இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கியே, முள்ளிவாய்க்காலில் மலர் அஞ்சலி செலுத்திய முதல் சர்வதேசப் பிரமுகராவார். இவர் முள்ளிவாய்க்கால் கரையோரமாக நடந்து சென்று, விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு, தரைதட்டி நின்ற பாரா-–3 என்ற கப்பலின் எச்சம் இன்னமும் காணப்படும், பகுதியை அண்டிய கடற்கரையில் ...
Read More »Liberating Champoor is fundamental to Tamils’ existence in East – TamilNet
Liberating Champoor is liberating Tamils from permanent subjugation in Trincomalee district, say the Tamil people of Moothoor East in Trincomalee. From the average Tamil families languishing in the camps to experts among Tamils coming from Moothoor East, having in-depth knowledge of their region and the politics, are unanimous in their opinion that both the Indian Coal Power Plant, for which ...
Read More »எம்மை பிரித்து, கட்சியை வளர்க்கவே வந்தார் ரணில்!! – விக்கி
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது கட்சியை வளர்க்கவும் நிலைநாட்டவுமே இங்கு வந்தார். அதற்கும் எமக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இது முற்றிலும் ஓர் அரசியல் ரீதியான பயணம். எனவே நான் மக்களின் பிரதிநிதி என்ற முறையில் பிரதமரின் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லையே என்ற குற்றச்சாட்டு அர்த்தமற்றது. அவர் ராணுவத்தினரை படிப்படியாக வெளியேற்றுவேன் என உத்தரவாதம் தந்தால் நான் அவருடன் கைகுலுக்குவேன். – இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். இன்று வியாழக்கிழமை (02-04-2015) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை விடுதித் தொகுதி மற்றும் இரத்த வங்கி ...
Read More »கூட்டமைப்பு கட்டமைப்பு சார் அமைப்பாக பதியப்பட வேண்டும் – வீரகேசரி
மக்களைச் சென்றடைதல் என்பது அரசியலில் மிகவும் முக்கியமானதொரு தேவையாகும். அரசியல் கட்சி அல்லது அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் மக்களைச் சென்றடைவதன் ஊடாகத்தான் மக்களின் ஆதரவைப் பெற முடியும். அதன் அடிப்படையில்தான் மக்களை அணி திரட்ட முடியும். அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க, முடியும். ஆகவே மக்களைச் சென்றடைவதற்காக அரசியல்வாதிகள் எதனையும் சொல்வார்கள். எதனையும் செய்வார்கள். ஆனால், இவ்வாறு எதனையும் சொல்வதும், செய்வதும் ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்ததல்ல. மக்களின் தேவைகள், அவர்களின் எதிர்கால வாழ்க்கை என்பவற்றையும் நாட்டின் சுபிட்சம், எதிர்காலப் போக்கு என்பவற்றைச் சிந்தனையில் கொண்டு அதற்கேற்ற ...
Read More »