மன்னர் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளிலிருந்து அதன் மாதிரிகள் பரிசோதனைக்கு கொழும்பிற்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மன்னார் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில், கடந்த புதன் கிழமை முதல் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு வந்துள்ளன. 6 மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மன்னார் மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள் கடந்த வெள்ளிக்கிழமையுடன் 121 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
அமெரிக்க அரசு நிர்வாகம் மீண்டும் முடக்கம்!
அமெரிக்காவில் அரசின் செலவின மசோதாவுக்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்காததால், அரசு நிர்வாகப் பணிகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் செலவின மசோதாவுக்கும், அதிபர் டிரம்பின் கோரிக்கைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து எந்தவிதமான நிதி மசோதாவையும் நிறைவேற்றாமல் செனட் சபை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கி உள்ளது. நிர்வாக முடக்கம் காரணமாக 8 லட்சம் அரசு ஊழியர்கள் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். அல்லது அவர்கள் ஊதியம் இல்லாமல் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், நிர்வாக ...
Read More »9 மாகாணங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல்!
ஒன்பது மாகாணசபைகளுக்குமான தேர்தல்கள் ஒரே நாளில் தாமதமின்றி நடக்கும் என அமைச்சர் வஜிர அபயவர்த்தன தெரிவித்துள்ளார். தேர்தல்களில் வெற்றிபெறும் நோக்கத்துடன் கடந்த காலங்களில் பொதுச்சொத்துக்களை தவறாக பயன்படுத்தி வெவ்வேறு நாட்களில் மாகாணசபை தேர்தல்கள் இடம்பெற்றன என அவர் தெரிவித்துள்ளார். எனினும் நாங்கள் இந்த பாராம்பரியத்தினை மாற்றுவோம் என அவர் தெரிவித்துள்ளார். மாகாணசபைகளிற்கான தேர்தல்கள் ஒரே நாளில் இடம்பெறும் முடிந்தால் ஜனாதிபதி தேர்தல் பொதுத்தேர்தலையும் கூட ஒரே நாளில் நடத்துவோம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த 52 நாட்கள் நீடித்த அரசியல் நெருக்கடி நாட்டின் பொதுச்சேவையில் ...
Read More »எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்!
புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் இன்று காலமானார். புதுவையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன். இவர் 100-க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதுவை மதகடிப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 2 மாதகாலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் கடந்த மாதம் 15-ந் ...
Read More »விரைவில் மீண்டும் ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தை கவிழ்ப்போம்! -மகிந்த
விரைவில் மீண்டும் ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தை கவிழ்ப்போம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தங்களை ஆட்சியமைக்க இடமளிக்கவில்லை. எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. நான், பிரதமராக பதவியேற்றபோது அதனைச் செய்தேன். இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தில் இருப்பவர்கள் தமது ஆசனங்கள் நிலையானவை என நம்பியிருக்க கூடாது நாங்கள் விரைவில் மீண்டும் ஆட்சியை கவிழ்ப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் ...
Read More »நாமல்குமார ஒரு பைத்தியக்காரன்!-சரத்பொன்சேகா
சிறிலங்கா ஜனாதிபதி கொலை முயற்சி சதி தொடர்பான விடயத்தில் எனக்கு எந்த வித தொடர்பும் இல்லை என்பது காவல் துநை விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா இன்று பாராளுமன்ற அமர்வில் தெரிவித்துள்ளார். அத்துடன் நாமல் குமார ஒரு பைத்தியக்காரன் எனவும், என் மீது வீண் பழி சுமத்தி வருகின்றான் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த விடயம் தொடர்பாக சபாநாயகர் கவனம் கொள்ள செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
Read More »அவுஸ்திரேலியாவில் இருந்து ஈழ தம்பதியினர் நாடு கடத்தப்படும் அபாயம்!
அவுஸ்திரேலியாவில் தொடர்ந்து தங்கியிருப்பதற்கான ஈழ தமிழ் குடும்பத்தின் வேண்டுகோளை மெல்பேர்ன் நீதிபதியொருவர் நிராகரித்துள்ளார் ஈழத்தைச் சேர்ந்த நடேஸ் பிரியா தம்பதியினரின் வேண்டுகோளையே நீதிபதி நிராகரித்துள்ளார். வெள்ளிக்கிழமை நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தீர்ப்பை வழங்கியுள்ள நீதிபதி ஜோன் மிடில்டென் நான் இவர்களின் மனுவை நிராகரிக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார். எனினும் ஈழ தம்பதியினரை பெப்ரவரி நான்காம் திகதி வரை நாடு கடத்தவேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஈழத்தைச் சேர்ந்த நடேஸ் பிரியா தம்பதியினரை அவர்களின் இரு பெண் குழந்தைகளுடன் அவுஸ்திரேலிய அதிகாரிகள் தடுப்பு முகாமில் தடுத்து வைத்துள்ளனர். ...
Read More »சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்படவில்லை – டிரம்ப் தகவலை மறுத்த பிரிட்டன்
சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், அதனை பிரிட்டன் மறுத்துள்ளது. வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க, அரசுப் படைகளுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை உதவி செய்தது. கூட்டுப்படையில் அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 2,000 அமெரிக்க வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த கூட்டுப் படையினர் ஐஎஸ் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தி பல்வேறு பகுதிகளை மீட்டுள்ளனர். இந்நிலையில் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் வீழ்த்தப்பட்டுவிட்டனர் என்றும், சிரியாவில் வரலாற்று வெற்றிகளை பெற்றுள்ள அமெரிக்க துருப்புகளை நாட்டுக்கு மீண்டும் ...
Read More »அமைச்சரவையில் பொன்சேகாவிற்கு இடமில்லை!
முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகாவிற்கு அமைச்சு பதவியை வழங்குவதற்கு பிடிவாதமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பதவியேற்றுள்ள புதிய அமைச்சரவையில் சரத்பொன்சேகா இடம்பெறாத நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது ஐக்கியதேசிய கட்சியினர் பலதடவைகள் வேண்டுகோள் விடுத்தபோதிலும் சிறிசேன சரத்பொன்சேகாவை நியமிக்க மறுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் நெருக்கடி ஆரம்பமானதன் பின்னர் சரத்பொன்சேகா தனது நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார் என்;பதை காரணம் காட்டி சிறிசேன சரத்பொன்சேகாவை அமைச்சராக நியமிக்க மறுக்கின்றார் என தகவல்கள் ...
Read More »வடக்கு அபிவிருத்தி அமைச்சு ரணில் வசம்!
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரம் உட்பட பல அமைச்சின் அமைச்சராக சற்று முன்னர் நியமிக்கப்பட்டார். இதனடிப்படையில் தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரம், மீள் குடியேற்றம் மற்றும் மறுசீரமைப்பு, வடக்கு அபிவிருத்தி, தொழிற் பயிற்சி மற்றும் நிபுணத்துவ அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More »