அண்மையில் சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வருகை தந்தபோது அவருடன் ஒன்றாக உலங்குவானூர்தியில் பறந்து இடங்களைப் பார்வையிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் எதுவும் கதைப்பதில்லையென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். மாறாக எம்.ஏ.சுமந்திரன் சிறிலங்காப் பிரதமருக்குத் தனது உறவினர்களையே அறிமுகம் செய்துவைத்தார் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார். கிளிநொச்சி மாவட்டம் இரணைதீவு மக்கள் தமது பூர்வீக நிலத்தில் குடியேற்றுமாறு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் அம்மக்களைச் சந்தித்தபோது ஊடகவியலாளர்களால் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தி கொழும்பில் மாபெரும் அறவழிப் போராட்டம்!
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தி அரசியல் கைதிகள் விடுதலை செய்வதற்கான அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பில் மாபெரும் அறவழிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை வலியுறுத்தி இப்போராட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் நடைபெறவுள்ளது. அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான இப்போராட்டத்தில் வடக்கு- கிழக்கிலுள்ள சிவில் அமைப்பினர், காணாமல் போனோர்கள், தமிழ் அரசியல் கைதிகள் ஆகியோரின் உறவினர்களும் கலந்துக் கொள்ள வேண்டும் ...
Read More »பளையில் பொலிசார் மீது துப்பாக்கிப் பிரயோகம் – இராணுவம் சுற்றிவளைப்பு
பளைப்பகுதியில் பொலிஸார்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது . இராணுவம் குவிப்பு சுற்றிவளைப்புகளும் மேற்கொள்ளப்படுகிறது . இன்று(19) காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது . அதிகாலை 3:30 மணியளவில் ரோந்தில் ஈடுபட்ட பளை பொலீசார் மீது பளை கச்சாய் வேலி பகுதியில் பொலீசாரின் வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.இனந்தெரியாத நபர்களினால் மறைவான இடம் ஒன்றில் இருந்து இந்த சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதி ரோந்து சென்ற பொலீசாரின் வாகனம் சிறு சேதமடைந்த ...
Read More »ரணம் ஆறவில்லை! வலிகள் தீரவில்லை!
நெஞ்சமெலாம் பதைபதைக்க, உலகம் முழுதும் வேடிக்கை பார்த்திருக்க, ஆயிரக்கணக்கான எம் உறவுகள் கொத்துக் கொத்தாய்க் கொன்றழிக்கப்பட்ட கோரம் நிகழ்ந்து இன்றோடு எட்டு ஆறு ஆண்டுகள். தமிழ்த் தேசியத்தைச் அழித்து- அதன் ஒட்டுமொத்த அரசியல் பலத்தையும் சிதைத்து, எம்இனத்தை நிரந்தரமாக அடிமைப்படுத்த சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் நிகழ்த்திய ஊழித் தாண்டவம் அது. ‘பயங்கரவாதம்’ என்ற ஒற்றைச் சொல்லுக்குள் எமது இனத்தின் ஒட்டுமொத்த உரிமைகளும் அடக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, சிங்களத்தில் காலடிக்குள் வீழ்த்தப்பட்ட நாள் இது. அதை உலகமே ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது. கைதட்டி வரவேற்றது. முள்ளிவாய்க்காலில் ...
Read More »மே18 – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு!
தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட இனவழிப்பின் 08ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் இரண்டு இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது. • கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரையில் மாணிக்கபுரம் வாவிக் கரையில். (வாகரை வைத்தியசாலைக்கு அண்மையில் மட்டு-திருகோணமலை வீதியில்) காலை 9.30 மணிக்கு நடைபெறும். • வடக்கு மாகாணத்தில் முள்ளிவாய்க்கால் கிழக்கு கடற்கரையில் (ஏ32வீதியில் 46வது கிலோ மீற்றர் கல்லிலிருந்து புனித சின்னப்பர் ஆலய வீதி) பி.ப 2.30 மணிக்கு நடைபெறும். ...
Read More »யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!
பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கை யாழ். மேல் நீதிமன்றத்திலேயே நடத்தக் கோரியும், கடந்த ஒக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு நீதியை வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதேவேளை குறித்த இருவிடயங்களையும் அரசு கருத்தில் கொண்டு, எதிர்வரும் 30 நாட்களுக்குள் உரிய பதிலை முன்வைக்க வேண்டும் என இன்றைய போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன்போது, ‘சேயாவிற்கு ஒரு நீதி, வித்தியாவிற்கு ஒரு நீதியா?’, ‘காவுகொள்ளப்பட்ட எம் ...
Read More »சவேந்திரசில்வாவை நீதிமன்றிற்கு அழைக்க மறுப்பு!
இனஅழிப்பு போர்க்குற்றவாளிகளுள் ஒருவரான மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வாவினை சாட்சியமாக முல்லைதீவு நீதிமன்றிற்கு அழைக்க விடுக்கப்பட்ட கோரிக்கையினை முல்லைதீவு நீதிபதி நிராகரித்துள்ளார். இறுதி யுத்த காலத்தினில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் தொடர்பினில் வவுனியா மேல்நீதிமன்றினில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான ஆரம்ப கட்ட விசாரணைகள் முல்லைதீவு நீதிமன்றினில் நடைபெற்றுவருகின்றது. சுரணடைந்தவர்கள் தொடர்பாக அப்போது அங்கு கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வாவிற்கே தெரியுமென கூறப்பட்டிருந்த நிலையினில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வாதாடும் சட்டத்தரணி மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வாவினை சாட்சியமாக இணைந்து கொள்ளவும் நீதிமன்றினில் ஆஜராக்கவும் கேட்டிருந்தார்.அதனையே இன்று முல்லைதீவ ...
Read More »மோடியும் விக்கியும் இரகசிய உரையாடல் – கூர்ந்து அவதானித்தார் சம்பந்தன்
சர்வதேச வெசாக் தின நிகழ்வின் அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள சிறீலங்கா வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று (11) விசேட இராப்போசன விருந்து ஒன்றினை கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்திருந்தார். ஜனாதிபதி மாளிகைக்கு வருகைதந்த இந்திய பிரதமரை ஜனாதிபதி வரவேற்றார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், அமைச்சர்களான மங்கள சமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம, நிமல் ...
Read More »விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் பாகங்கள் மீட்பு!
தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட, சிறீலங்கா விமானப்படையின் வை-8 ரக விமானத்தின் பாகங்கள் யாழ். ஆணையிறவு இயக்கச்சி பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட விமான பாகங்களானது, கடந்த 1992ஆம் ஆண்டு சுட்டுவீழ்த்தப்பட்ட பலாலி விமானப்படையினருக்குச் சொந்தமான விமானத்தின் பாகங்கள் என தெரிவிக்கப்படுகிறது. விமானப்படையினரின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், விமானப்படையினரின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விமானத்தின் பாகங்களையும் மீட்டுள்ளனர். சுமார் 25 வருடங்களின் பின்னர் குறித்த விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் ஆவேசம்! வடமாகாண சபை முற்றுகை!
யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகள் இன்று (9) வடமாகாண சபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் வடக்கு மாகாண சபையின் அமர்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டதால், உள்ளே செல்ல முடியாது திரும்பி சென்றார். கடந்த பெப்ரவரி 27ம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எமக்கு இன்றைய தினமே தீர்வொன்றை வடக்கு மாகாண முதலமைச்சர் வழங்க வேண்டும் என்று போராட்டக்கார்கள் தெரிவித்தனர். எனினும் இது மத்திய அரசாங்கத்துடன் தொடர்புடைய ...
Read More »