சபாநாயகர் கருஜெயசூரியவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமொன்றினை கொண்டுவரவுள்ளதாக ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கடந்த இரண்டுவாரங்களாக இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகளின் போது சபாநாயகர் பக்கச்சார்பாக நடந்துகொண்டார் என்பதை அடிப்படையாக வைத்தே இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது நாங்கள் ஏனையவிடயங்கள் குறித்து ஆராய்ந்துவருகின்றோம் கூடிய விரைவில இது குறித்து தீர்மானிப்போம் என அவர் தெரிவித்துள்ளார். சபாநாயகர் நாடாளுமன்ற நடைமுறைகள் அனைத்தையும் புறக்கணித்துள்ளார் இதன் காரணமாக ஜனாதிபதி சபாநாயகரை நாடாளுமன்ற நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளவேண்டிய நிலையேற்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
வரைவு ஒப்பந்தத்தை நிறைவேற்ற தெரசா மே உறுதி!
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக முடிவு எடுத்துள்ள இங்கிலாந்து, அது தொடர்பான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. ஆளுங்கட்சி மந்திரிகளிடையே இது தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள வரைவு அறிக்கைக்கு அங்கு அதிருப்தி நிலவுகிறது. அந்த அதிருப்தியில், ‘பிரிக்ஸிட்’ என அழைக்கப்படுகிற அந்த நடவடிக்கையை கவனித்து வந்த மந்திரி டொமினிக் ராப், அந்த துறைக்கான ராஜாங்க மந்திரி சூயல்லா உள்பட 4 மந்திரிகள் அடுத்தடுத்து நேற்று முன்தினம் பதவி விலகினர். இதனால் பிரதமர் தெரசா மேவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அவர் இந்த வரைவு ஒப்பந்தத்தை நிறைவேற்ற ...
Read More »அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஈழத்தமிழ் அகதிகள் கைது!
சட்டவிரோதமாக ஆபத்தான படகு வழி மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற ஈழத்தமிழ் அகதிகள் 489 கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களைத் தடுக்கும் திட்டத்தினை அவுஸ்திரேலிய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 2013ல் முதல் நடைமுறையில் உள்ள கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கையின் கீழ் படகு வழியாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்றவர்கள் தடுக்கப்பட்டனர். இவ்வாறு தடுக்கும் விதமாக எடுக்கப்பட்ட 78 நடவடிக்கைகளில் 2,525 புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் ஓகஸ்ட் மாதம் வரை எடுக்கப்பட்ட 10 நடவடிக்கைகளில் 297 பேர் தடுக்கப்பட்டுள்ளதாக ...
Read More »“என்னை பலவந்தமாகவும் முறையற்ற விதத்திலும் பதவி நீக்க முடியாது”!
“என்னை பலவந்தமாகவும் முறையற்ற விதத்திலும் பதவி நீக்க முடியாது” என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். வீரகெட்டியவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Read More »இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்!
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. புரோவிடென்சியில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தங்கள் பிரிவில் இடம் பிடித்துள்ள ...
Read More »சவுதி இளவரசர் உத்தரவுப்படியே கஷோகி கொல்லப்பட்டார்!
துருக்கி நாட்டு தூதரகத்தில் மயக்க மருந்து கொடுத்து வெட்டிக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் படுகொலைக்கு சவுதி இளவரசர் மீது அமெரிக்க உளவுப்படை குற்றம்சாட்டியுள்ளது. சவுதிஅரேபியாவின் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கஷோகி என்ற பத்திரிகையாளர் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்தவாறு சவுதி அரசுக்கு எதிராக கட்டுரைகளையும், செய்திகளையும் வெளியிட்டு வந்தார். இந்நிலையில், சமீபத்தில் தாய்நாட்டுக்கு சென்று திருமணம் செய்துகொள்ள தீர்மானித்த ஜமால் கஷோகி, தேவையான சில ஆவணங்களை பெறுவதற்காக துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா நாட்டு ...
Read More »கஜா புயலின் எதிரொலி – மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை!
கஜா புயலின் எதிரொலியானது மன்னார் மாவட்டத்தில் தொடர் மழையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பெரும் அச்சத்தை எற்படுத்தியிருந்த கஜா புயல் ஆனது நேற்று நள்ளிரவுடன் கரையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் விடுக்கப்பட்ட அறிவுறுத்தளின் படி ‘கஜா’ புயலானது மன்னார் மாவட்டத்தின் ஊடக காற்றின் திசை காரணமாக கடந்து செல்லும் எனவும் சில நேரங்களில் புயலின் தாக்கம் வழைமையை விட அதிகமாக காணப்படும் எனவும் அதனால் மன்னார் மாவட்ட மக்களை தயார் நிலையில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அத்துடன் மன்னார் மாவட்ட அரசங்க அதிபர் ...
Read More »மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்!
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி முன்னெடுக்கப்படுமென சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள மனித புதை குழி அகழ்வு பணியானது மீண்டும் எதிர் வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படும் என குறித்த அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார் மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது கடந்த 12 ஆம் திகதி திங்கட்கிழமை எவ்வித அறிவித்தல்களும் இன்றி இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.கடந்த ...
Read More »பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்!
பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியாவுக்கு செல்ல உள்ளார் என பாகிஸ்தான் வெளியுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வல்லரசு போட்டியில் முதலிடத்தை பிடிக்க முயன்றுவரும் சீனா இந்தியாவின் எதிரியான பாகிஸ்தான் மீது அளவுகடந்த பாசத்தை பொழிந்து வருகிறது. பாகிஸ்தானில் குவாடார் உள்ளிட்ட துறைமுகங்களின் மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைய நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை சீனா செய்து வருகிறது. தற்போது கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் அரசு சர்வதேச நிதியத்தின் உதவியை ...
Read More »தீபிகா படுகோன், ரன்வீர் சிங்கின் திருமணம்!
பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோனே – ரன்வீர் சிங்குக்கு இத்தாலியில் வைத்து இந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்து முடிந்தது. இந்தி நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர்சிங்குக்கும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். இத்தாலியில் வைத்து திருமணம் நடக்க இருப்பதாக சமீபத்தில் சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 தினங்களுக்கு முன்பே மும்பையில் இருந்து இருவரும் இத்தாலி புறப்பட்டு சென்றனர். அங்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதனைத் தொடர்ந்து ...
Read More »