யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாவடியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் உடல்நிலை தேறி வருகின்றார் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அவரது உடல்நிலையில் தொடர்பில் நேற்று இரவு தொலைபேசியின் ஊடாக கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலை பணிப்பாளருடன் உரையாடியிருந்தேன். தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவர், இன்று உடல்நிலை தேறி சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் இன்னும் சில நாட்கள் அல்லது வாரத்தின் பின்னர் வீடு திரும்புவார் ; என்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
மூலிகைகளை பயன்படுத்தி ஆவி பிடிக்கும் முறை….!-வைத்தியர் நிபுணர் அனுருத்த பாதெனிய
பக்றீரியா மற்றும் வைரஸ் தொற்று என்பவற்றுக்கு கொத்தமல்லி, வெனிவேல் என்வற்றை பயன்படுத்துவதன் பலாபலன் பற்றி ஆராயப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய தெரிவித்தார். அத்தோடு மூலிகை இலைகளைப் பயன்படுத்தி ஆவி பிடிக்கும் முறைமையை பின்பற்றுவது சிறந்த நோய்த் தடுப்பு முறைமை எனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், கொத்தமல்லி மற்றும் வெனிவேல் தொடர்பில் அறிவியல் – தொழிநுட்ப அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை அறிக்கை எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அதில் நோய்த்தடுப்பு சக்தி தொடர்பில் மூன்று பிரிவுகள் இணங்காணப்பட்டுள்ளன. அந்த ...
Read More »ஊரடங்கு அனுமதிப்பத்திர விநியோகம் தொடர்பில் புதிய நடைமுறைகள் அறிமுகம்
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாட்டில் அமுல் செய்யப்பட்டு வரும் நிலையில், அத்தியாவசிய தேவைக்காக ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள காவல் துறை நிலையங்களில் ; மக்கள் ஒன்று கூடும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு அனுமதிப்பத்திர விநியோகம் தொடர்பில் புதிய நடை முறைகளை அரசாங்கம் நடை முறைப்படுத்த தீர்மானித்துள்ளது. இது குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பதில் காவல் துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு ஆலோசனை வழங்கிய நிலையில், ...
Read More »இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்ய அஞ்சுவதற்கு காரணம்!
ஐபிஎல் தொடரில் அதிக அளவில் பணம் கிடைப்பதால் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட விரும்புவதில்லை என மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணி கிரிக்கெட் போட்டியில் விளையாடும்போது எதிரணி வீரர்களை மிகப்பெரிய அளவில் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவார்கள். குறிப்பாக ஆஷஸ் தொடரின்போதும், இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போதும் இந்த ஸ்லெட்ஜிங் அதிக அளவில் இருக்கும். இந்திய வீரர்களை சீண்டியே அவுட்டாக்கும் யுக்தியை கடைபிடிப்பார்கள். ஆனால் விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக பதவி ஏற்றப்பிறகு, விராட் கோலி ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு இணையாக வார்த்தைப்போரில் ...
Read More »யாழ். மக்கள் கொரோனாவின் பாதிப்பிலிருந்து தப்புவது எப்படி?
யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள் இன்னும் இரண்டு தொடக்கம் மூன்று வாரங்கள் தற்போதைய கட்டுப்பாட்டுகளுடன் இருந்துவிட்டால் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் தப்பிவிடலாம் என்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் 319 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ள நிலையில் 50 பேரை மாத்திரமே பரிசோதனை செய்துள்ளோம். எனவே அனைவரது மாதிரிகளையும் மூன்று தடவைகளாவது பரிசோதனை செய்யவேண்டுமாயின் ஆயிரம் தடவைகள் ஆய்வுகூடச் சோதனைக்குட்படுத்தவேண்டும். அதனை விரைந்து செய்வதற்கு எம்மிடம் வசதிகளும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் ...
Read More »ஆப்பிரிக்க மக்கள் மீது கொரோனா தடுப்பூசியை சோதிக்க அனுமதிக்க முடியாது!
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி மருந்துகளை ஆப்பிரிக்க மண்ணில் அந்நாட்டு மக்களுக்கு பரிசோதித்து பார்ப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது, இந்த ஏதேச்சதிகார புத்தி மாறவேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். கரோனா வைரஸின் பாதிப்பால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 லட்சத்து 46 ஆயிரமாக அதிகரித்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மனித குலத்தை மிரட்டி வரும் இந்த கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், அது இன்னும் பரிசோதனை ...
Read More »ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ’கீபே முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்த ஆஸ்திரேலியாவின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ’கீபே முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஸ்டீவ் ஓ’கீபே. 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்து விளையாடும்போது ஒரு டெஸ்டில் 70 ரன்கள் விட்டுக்கொடுத்து 12 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்தியாவை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார். 35 வயதாகும் இவர் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஷெஃப்பீல்டு ஷீல்டு தொடரில் சிறப்பாக விளையாடினார். ஆனால், ...
Read More »‘ பிளக் டீ’ நிமோனியா நோயினை கட்டுப்படுத்த உதவும்!
இலங்கையின் ‘ பிளக் டீ’ நிமோனியா நோயினை கட்டுப்படுத்த உதவுவதாகவும், அதிக மருத்துவ குணம் கொண்டதாகவும் மருத்துவத்துறையினர் கூறுகின்றனர். இதன் காரணத்தினால் இலங்கையின் தேயிலை சர்வதேச சந்தையில் கேள்வியை எழுப்பியுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரொமேஷ் பத்திரன இதனை தெரித்தார். அவர் மேலும் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பிரதான ஏற்றுமதியான தேயிலை, இறப்பர் என்பவற்றை பலப்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்படுகின்றது. அதேபோல் தேசிய விவசாயத்தை பலப்படுத்த இப்போதே பல வேலைத்திட்டங்களை ...
Read More »இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 178
இலங்கையில் இன்று (06.04.2020) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 178 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில், தற்போது வைத்தியசாலையில் 137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை கொரோனா தொற்றினால் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான ; 34 பேர் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Read More »கொரோனாவுக்கு எதிரான போரில் சுய ஒழுக்கத்தை கடைப்பிடியுங்கள்!
கொரோனாவுக்கு எதிரான போரில் சுய ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டுமென இங்கிலாந்து மக்களுக்கு ராணி 2-ம் எலிசபெத் அழைப்பு விடுத்துள்ளார். இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 4,500-ஐ எட்டியுள்ளது. இந்த கொடிய வைரஸ் அந்த நாட்டின் இளவரசர் சார்லஸ், பிரதமர் போரிஸ் ஜான்சான் ஆகியோரையும் விட்டுவைக்கவில்லை. இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் இளவரசர் சார்லஸ் கொரோனா வைரசில் ...
Read More »