எல்லை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியாவும் சீனாவும் சம்மதித்து இருப்பதாக சீன வெளியுறவுத்துறை அதிகாரி கூறினார். லடாக் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிப்பது தொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே சமீபத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை சுமுமாகவும், ஆக்கபூர்வமாகவும் அமைந்து இருந்ததாகவும், எல்லைப் பகுதிகளில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவ ராணுவ மற்றும் தூதரக ரீதியில் தொடர்ந்து பேச்சுவார்த்தை ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
வடமாகாணத்தில் மருத்துவ நிர்வாக சேவையை மலினப்படுத்தும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்
வடமாகாணத்தில் மருத்துவ நிர்வாக சேவையை மலினப்படுத்தும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் – வைத்தியர் முரளி வல்லிபுரநாதன் இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விடயம் வருமாறு, மருத்துவ சேவை வைத்தியர்களின் நியமனம் ஏனைய அரச சேவை நியமனங்களைப்போல் சேவை மூப்பு மற்றும் கல்வித்தராதரங்களுக்கு ஏற்ப ஸ்தாபனக் கோவை விதிகளுக்கு உட்பட்ட வகையில் இடம் பெறும். நியமனம் பெற்ற ஒரு மருத்துவரின் இடமாற்றம் அவரது சுயவிருப்பின் பேரில் அல்லது ஒழுக்காற்று விதிகளுக்கு அமைய ...
Read More »இங்கிலாந்தில் தனிமைப்படுத்துவதில் புதிய விதிமுறைகள் அமல்
இங்கிலாந்தில் தனிமைப்படுத்துதல் தொடர்பாக புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக போராடி வருகிற இங்கிலாந்தில் 2 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அந்த தொற்றின் பாதிப்பு உள்ளது. ஏறத்தாழ 40 ஆயிரம் பேர் அங்கு கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்த நிலையில் அங்கு தனிமைப்படுத்துதல் தொடர்பாக புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.இதன்படி அங்கு செல்கிற இங்கிலாந்துவாசிகள் உள்பட அனைவரும் 14 நாட்களுக்கு சுயமாக தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அயர்லாந்து, சேனல் தீவு, மனித தீவுவாசிகளுக்கு ...
Read More »ஜெயித்தது நியூசிலாந்து – இன்று முதல் கட்டுப்பாடுகள் இல்லாத சுதந்திர வாழ்க்கை
கொரோனாவை ஜெயித்து காட்டி இருக்கும் நியூசிலாந்தில் இன்று முதல் மக்கள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் சுதந்திரமான வாழ்க்கைக்கு திரும்பப்போகிறார்கள். ஒவ்வொரு நாட்டுக்கும் ஆசைதான், கொலைகார கொரோனா வைரசுக்கு விடை கொடுத்து விட வேண்டும் என்று. ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா வைரஸ், ‘விட்டேனா பார்’ என்கிற அளவுக்கு, கட்டுப்பாடுகளை எல்லாம் தகர்த்தெறிந்து பரவி வருகிறது. ஆனால் கொரோனாவை ஜெயித்து காட்டி இருக்கிறது, நியூசிலாந்து. ஜெசிந்தா ஆர்டெர்ன் என்ற பெண் பிரதமர் ஆளுகிற இந்த நாட்டில் மொத்தம் 1,154 பேருக்குத்தான் கொரோனா தொற்று ஏற்பட்டது. பலியானவர்களின் ...
Read More »ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா கௌரவ விருதுக்கு மைக்கேல் கிளார்க் தெரிவு
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற கௌரவ விருதுக்கு மைக்கேல் கிளார்க் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு துறையிலும் சிறந்த சாதனை படைக்கும் நபர்களுக்கு அந்த நாட்டு அரசு பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2015-ம் ஆண்டில் உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனான மைக்கேல் கிளார்க், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற கவுரவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ...
Read More »நியூஸிலாந்து – கொரோனா தொற்று நீங்கியது!
நியூஸிலாந்து நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய எவரும் இப்போது இல்லை என்று நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா அர்டன் அறிவித்துள்ளார். நியூஸிலாந்தில் 1,504 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதுடன், அவர்களில் 22 பேர் மரணமடைந்தனர். எஞ்சிய அனைவரும் முற்றாக குணமடைந்துள்ளர். இந்நிலையிலேயே 75 நாட்கள் ஊரடங்கினால் முடக்கப்பட்டிருந்த தமது நாடு அபாய எச்சரிக்கையில் இருந்து முன்னோக்கி (லெவல் -1க்கு) வந்துள்ளது என்றும், நாளை (09) முதல் நாடு வளமைக்கு திரும்பும் எனவும் ஜசிந்தா அறிவித்துள்ளார். நியூஸிலாந்தில் இறுதியாக மே 22ம் திகதி கொரோனா தொற்றாளி ...
Read More »உலக நன்மைக்கு தடுப்பூசி தருவோம்- சீன அதிகாரி தகவல்
வெற்றிகரமான ஆராய்ச்சி மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் சீனா தனது கொரோனா தடுப்பூசியை உலகளவிலான பொது நன்மைக்கு உட்படுத்தும் என அதிகாரி தெரிவித்துள்ளார். உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு, பரிசோதனை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் சீனாவின் மூத்த அதிகாரி ஒருவர் பீஜிங்கில் நேற்று கூறுகையில், “வெற்றிகரமான ஆராய்ச்சி மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் சீனா தனது கொரோனா தடுப்பூசியை உலகளவிலான பொது நன்மைக்கு உட்படுத்தும்” என்று குறிப்பிட்டார். இதற்கிடையே பீஜிங்கில் சீன அறிவியல், தொழில்நுட்ப மந்திரி வாங் ஜிகாங் ...
Read More »இன்று முதல் கண்காணிப்பு பணிகள் ஆரம்பம்
தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக சுமார் 100 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று(08) முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவால் தேர்தல் தினம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், மற்றுமொரு பகுதியினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என, அதன் இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க கூறியுள்ளார்.
Read More »ஜீவன் ஹூல்லை வெளியேற்றும்படி கோரிக்கை!
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூல் சட்ட விதி முறைகளை மீறி செய்பட்டுள்ளமையால் அவரை தேர்தல் ஆணையத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் ஜெயந்த சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்த சமரவீர தெரிவித்ததாவது, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூல் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவரை போல நடத்தையில் வெளிப்படுத்தியுள்ளார், மேலும் அவர் இறுதியாக நாட்டின் உச்ச சட்டமான அரசியலமைப்பைக் குறைத்து மதிப்பிட்டுள்ளார். தேசிய ...
Read More »அவுஸ்திரேலிய அரசின் மதிப்புமிகு விருது பெறும் தமிழர்கள்
மகாராணியின் பிறந்தநாள் 2020 விருது பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போலவே ஆஸ்திரேலியாவின் பன்முக கலாச்சாரத் தன்மையை இந்த வருட Queen’s Birthday விருது பட்டியலும் பிரதிபலிக்கிறது. இதன்படி முன்னாள் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சமூக தொண்டர்கள் என சுமார் 738 ஆஸ்திரேலியர்கள் Queen’s Birthday விருது பெறுவோர் பட்டியலில் இடம்பிடித்து அரசின் Order of Australia எனும் மதிப்புமிகு விருதை பெறுகிறார்கள். மேலும் 128 பேர் சிறப்பு விருது பெறுகிறார்கள். Order of Australia விருதை பெறுபவர்களில் தமிழர்களான Dr.சிதம்பரப்பிள்ளை தவசீலன், Dr.ஆறுமுகம் அழகப்பா ...
Read More »