பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் முரண்பட்டாலும் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளன. பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் அமெரிக்கா, சீனா இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் பிற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன. உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான உறவு கடந்த சில ஆண்டுகளில் மிகவும் மோசமடைந்துள்ளது. வர்த்தக போரில் தொடங்கிய பிரச்சினை படிப்படியாக வளர்ந்து மோதலாக உருவாகி நிற்கிறது. வர்த்தகம், ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
ட்ரோன்களை சிறிலங்காவுக்கு ஆஸ்திரேலியா! -தமிழ் அகதிகள் கவுன்சில் கண்டனம்
இலங்கையில் அரசியல் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் சிறிலங்கா காவல்துறைக்கு ஆஸ்திரேலிய அரசு கண்காணிப்பு ட்ரோன்களை வழங்கியுள்ளமைக்கு ஆஸ்திரேலியாவை மையமாகக் கொண்டு செயல்படும் தமிழ் அகதிகள் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. “பல்வேறு குற்றச்செயல்களைத் தடுக்க இந்த ட்ரோன்கள் பயன்படும் எனக் கூறுகிறது ஆஸ்திரேலிய எல்லைப்படை. ஆனால், இந்த நன்கொடை ஆஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையின் அங்கமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ட்ரோன்கள் இலங்கையிலிருந்து தமிழர்கள் வெளியேறுவதைத் தடுக்கவும் அரசியல் செயல்பாட்டாளர்களை கண்காணிக்கவுமே உதவும்,” என தமிழ் அகதிகள் கவுன்சிலின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
Read More »அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவே ஈஸ்டர் தாக்குதல்
உயிர்த்த ஞாயிறுதின தற்கொலை குண்டு தாக்குதலானது , மதத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதல்ல, சிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நியாயத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறுதின குண்டுதாக்குதல்களின் போது உயிரிழந்தவர்களை நினைவுக் கூறுவதற்காக , பொரளை மற்றும் மாதம்பிட்டி பொது மயானத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியை இன்று ஞாயிற்றுக்கிழமை பேராயர் மெல்கம் ; கர்தினால் ரஞ்சித் ஆண்டகை திறந்து வைத்திருந்தார். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ...
Read More »மூத்த மருத்துவ போராளி அருள் காலமானார்
தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை நேசித்த மற்றுமொரு மருத்துவ போராளி மண்ணை விட்டு பிரிந்துள்ளார். விடுதலைப்போராட்டத்தில் சுமார் இரு தசாப்தங்களாக மருத்துவ போராளியாக பணியாற்றிய மருத்துவர் அருள் நேற்று மண்ணை விட்டு பிரித்துள்ளார். மருத்துவ போராளியான அருள் என்றழைக்கப்படும் இராசையா யதீந்திரா போராளிகளினதும் மக்களினதும் இறுதி யுத்தம் வரையாக உயிரைக் காத்த ஒரு மருத்துவன் என நண்பர்கள் நினைவுகூர்ந்துள்ளனர். போரின் பின்னான தன் அமைதியான வாழ்க்கை போலவே அமைதியாக அவர் விடைபெற்றுக் கொண்டு விட்டார் என அவருடன் கூட பயணித்த போராளிகள் நிiவுகூர்கின்றனர். விபத்தொன்றில் காயமடைந்த மருத்துவர் ...
Read More »விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை விஜயதாச ராஜபக்ச விமர்சித்தார் என்ற அடிப்படையிலேயே இந்த ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இவ்வாறான விவகாரங்களை கையாள்வதற்கு பொதுஜனபெரமுனவிற் கு ஒரு முறையுள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த முறையை பின்பற்றுவோம் என குறிப்பிட்டுள்ளார். விஜயதாச ராஜபக்சவின் அரசியல் வரலாறும் நடத்தைகளும் மக்கள் நன்கு அறிந்த விடயம் என கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
Read More »“என் குழந்தைகளை பிரிந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டன!”-அலி
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த பல ஆப்கான் அகதிகள், அகதிகளாக அங்கீகரிக்கப்பட்ட போதும் அவர்களது மனைவி மற்றும் குழந்தைகளை ஆஸ்திரேலியாவுக்கு அழைப்பதற்கான விசாவைப் பெற பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக அல்லது அவ்விசாவைப் பெறுவதே சாத்தியமற்றதாக உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலிருந்து நான்கு மணிநேர பயணத் தூரத்தில் உள்ள ஸ்வான் ஹில் ஆஸ்திரேலியாவின் உணவுக் கிண்ணமாக வர்ணிக்கப்படுகிறது. பெருமளவிலான பாதாம் பருப்பும் திராட்சைகளும் தயாரிக்கக்கூடிய பகுதியாக இது இருக்கிறது. இப்பகுதியில் பெரும் உற்பத்தி நடக்கக்கூடிய காலங்களில், பல அகதிகள் உள்பட ...
Read More »விடுதலைப்புலிகள் அமைப்பு மீளுருவாக்க முயற்சி -புதுக்குடியிருப்பில் கைது!
பயங்கரவாத செயற்பாட்டினை உருவாக்கும் நோக்குடன் குழுக்கள் அமைத்து செயற்பட்டமை மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பினை மீளுருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திலும் இன்று (17.04.2021) ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அண்மையில் இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டவர்களுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுடன் தொடர்பினை பேணிய குறித்த குடும்பஸ்தர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 45 அகவையுடைய பாடசாலை வீதிவள்ளிபுனம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த குடும்பஸ்தரே இன்று அதிகாலை பயற்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பிற்கு ...
Read More »மீறல்களுக்கு வழிவகுக்கும் பயங்கரவாதத்தடை விதிமுறைகள்
சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டிருக்கும் பயங்கரவாதத்தடை தொடர்பான விதிமுறைகள் ஏற்கனவே மிகவும் ஆழமான குறைபாடுகளைக் கொண்டிருந்த பயங்கரவாத்தடைச்சட்டத்தின் மூலம் மேலும் வன்முறைகளும் மீறல்களும் இடம்பெறுவதற்கு வழிவகுக்கும் என்று சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச யூரர்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: பயங்கரவாதத்தடை தொடர்பான விதிமுறைகள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் கடந்த செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டது. அதில் 11 அமைப்புக்கள் ‘தீவிரவாத அமைப்புக்களாக’ இனங்காணப்பட்டிருப்பதுடன் இதுபோன்ற அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது இதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு ...
Read More »சுகாதார அமைச்சின் மீது அதிதிருப்தி
சுகாதார அமைச்சினால், 2006 ஆம் ஆண்டு 31.71 மில்லியன் ரூபா செலவில், கைவிரல் அடையாளத்தைப் பதிவுசெய்யும் 224 இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோதும், 15 வருடங்களுக்கு மேலாக அவை செயலற்ற நிலையில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவான கோப் குழுவில், இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில், கோபா குழு தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேநேரம், சுகாதாரத்துறை அபிவிருத்தி விரிவாக்கத் திட்டத்தின்கீழ், ஐந்து வருடங்களில் புத்தாக்கத் திட்டங்களை ஊக்குவிக்க, 346 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. 2017ஆம் ஆண்டு ...
Read More »தடுப்பூசி போட்டதன் விளைவாக அவுஸ்த்ரேலியாவில் முதல் மரணம்!
ஆஸ்திரேலியாவில் AstraZeneca தடுப்பூசி போட்டுக்கொண்ட 48 வயது பெண் ரத்த உறைவால் மரணித்துள்ளதாக கூறப்படுகிறது ஆஸ்திரேலியாவில் தடுப்பூசியால் ஏற்பட்டுள்ள விளைவினால் ஏற்ப்பட்ட முதல் மரணம் என பதியப்பட்டுள்ளது. அந்தப் பெண் ஆஸ்திரேலியாவில் AstraZeneca தடுப்பூசி போட்ட பின் ரத்த உறைவுப் பிரச்சினையை எதிர்கொண்ட 3வது நபர் எனவும் , ஏற்க்கனே இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த இருவரின் உடல்நலம் தேறிவருவதாகத் கூறப்படுகிறது. அவருக்கு ஏற்க்கனவே நீரிழிவு உள்ளிட்ட சில நோய்களும் இருந்ததாகவும் அனால், ரத்த உறைவுக்கு அது காரணங்களாக அமையாது எனவே அது தடுப்பூசியினால் ஏற்பட்டது என்றே ...
Read More »