தொழிலாளியொருவரை மோசமாக தாக்கி அவமானப்படுத்துமாறு தனது மெய்ப்பாதுகாப்பாளர்களிற்கு உத்தரவிட்டார் என்ற குற்றச்சாட்டிற்குள்ளான சவுதிஅரேபிய இளவரசி ஹசா பின்ட் சல்மான் அல் சவுடடிற்கு பிரான்ஸ் நீதிமன்றம் பத்துமாதம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது. பிரான்ஸ் தலைநகரில் இடம்பெற்ற இந்த சம்பவத்திற்காகவே நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. 2016 செப்டம்பரில் பாரிஸில் உள்ள ஆடம்பர தொடர்மாடியில் நான் பணிபுரிந்துகொண்டிருந்த வேளை சவுதி இளவரசி தன்னை நான் படம்பிடித்து விட்டதாக தெரிவித்து தனது மெய்ப்பாதுகாவலர்களை என்னை தாக்குமாறு உத்தரவிட்டார் என அஸ்ரவ் எய்ட் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணை செய்த ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
ரணிலை சந்தித்த கனிமொழி உள்ளிட்ட இந்திய அரசியல் முக்கியஸ்தர்கள்!
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தி.மு.க துணைத்தலைவர் கனிமொழி உட்பட இந்தியாவின் சில முக்கிய அரசில் தலைவர்கள் பிரதமரை இன்று காலை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது இந்தியாவில் இருந்து வருகை தந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன், திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைத் தலைவரும் , இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான கே.கனிமொழி, இந்திய பாராளுமன்ற (லோக் சபா) உறுப்பினர்கள், முன்னாள் கேரள இராஜாங்க அமைச்சர் அப்துல் மஜீத், இந்திய சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மத் ...
Read More »தடைகளை தாண்டி வெடுக்குநாரி ஆதி லிங்கேஸ்வர ஆலயத்தின் இறுதி நாள் பூஜை!
நெடுங்கேணி வெடுக்குநாரி மலை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என தெரிவித்து ஆலயத்தில் பொதுமக்கள் வழிபடுவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களின் முயற்சியால் வழிபடுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கபட்டதுடன் ஆலயவளாகத்தில் கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்கு தொல்பொருள் திணைக்களம் மற்றும் காவல் துறையால் தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 4 ஆம் திகதி ஆரம்பமாகிய வருடாந்த பொங்கல் விழா தொடர்ச்சியாக 9 நாட்கள் நடைபெற்று இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் இன்றையதினம் விசேட ...
Read More »மட்டக்களப்பில் கைக்குண்டு மீட்பு !
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுங்காங்கேணியில் உள்ள தனியார் தென்னந் தோட்டத்திலிருந்து இன்று வியாழக்கிழமை கைக்குண்டு ஒன்றை மீட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். நேற்று மாலை குறித்த பிரதேசத்தில் உள்ள வீதியில் காணப்பட்ட இலுக்குப் புல்லுக்கு இனந்தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர். தீயானது பரவி வீதியின் அருகிலுள்ள தனியார் காணியினுள் பரவியதனை தொடர்ந்து தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபட்டிருந்தனர். இதன்போது மர்மப்பொருள் ஒன்று தென்படுவதனை கண்டு வாழைச்சேனை காவல் துறை மற்றும் பிரதேசத்தின் கிராமசேவகர் க.கிருஷ்ணகாந்தன் ஆகியோர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர். ...
Read More »சஹ்ரானிடம் ஆயுத பயிற்சி! – 64 பேருக்கு விளக்கமறியல்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் செப்டம்பர் 26ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. நுவரேலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் ...
Read More »சந்திரயான் 2 லேண்டரை தொடர்பு கொள்ள நாசா விஞ்ஞானிகள் முயற்சி!
சந்திரயான் 2 லேண்டரை நோக்கி ரேடியோ அலைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதை பெற்றுக்கொண்டு லேண்டர் ஓரிரு நாட்களில் பதில் அளிக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள். நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திரயான்-2 திட்டம் 95 சதவீதம் வெற்றியை பெற்றுள்ளது. நிலவின் மேற்பரப்பில் தரை இறக்கி 14 நாட்கள் ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கிய லேண்டர் கருவியை மட்டும் திட்டமிட்டபடி தரை இறக்க முடியவில்லை. வேகம் அதிகரித்ததால் சற்று திசை மாறிவிட்ட லேண்டர் கருவி நிலவின் மேற்பரப்பில் தென்துருவ பகுதியில் விழுந்து கிடக்கிறது. ...
Read More »அறிவற்ற முரளியுடன் பயணிக்க வேண்டாம்! -கோத்தாவுக்கு அதிரடி ஆலோசனை
நாம் இன்று புதிய பாதையினை உருவாக்குவதற்காக நேர்மையான முறையிலே பழையவற்றை களைந்து புதிய பாதையில் பயணத்தை ஆரம்பித்துக் கொண்டிருக்கும் பொழுது முத்தையா முரளிதரன் போன்ற அரசியல் அறிவற்றவர்களின் கருத்துக்கள் எம்மை பலவீனப்படுத்தும் என இவருடன் பயணிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ புரிந்து கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்தார். இது சம்பந்தமாக மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷவின் வாக்குகளை வீணடிக்கும் ...
Read More »தாமரை கோபுரம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு!
தென் ஆசியாவின் பாரிய கோபுரம் ஆன தாமரை கோபுரம் எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது. இதனை ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. 350 மீற்றர் உயரம் மற்றும் 17 அடுக்குகளை கொண்ட தாமரை கோபுரமானது 104 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதில் 80 சதவீதமான நிதியை சீனா முதலீடு செய்துள்ளது. இதன் கையளிப்பு நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More »சவேந்திர சில்வா நியமனம் குறித்து மனித உரிமை பேரவையில் கவலை!
சிறிலங்காவின் இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த முக்கிய குழு கவலை வெளியிட்டுள்ளது கனடா ஜேர்மனி மொன்டிநீக்ரோ வடமசெடோனியா பிரிட்டன் ஆகியநாடுகளே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன. இந்த நாடுகளின் சார்பில் பிரிட்டனின் சர்வதேச மனித உரிமைகளிற்கான தூதுவர் ரிட்டா பிரென்ஞ் அறிக்கையை வெளியிட்டுள்ளார். சிறிலங்காவின் புதிய இராணுவதளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவித்து இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளை பாதிக்கின்றது என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வெளியிட்ட கரிசனையினை பகிர்ந்துகொள்வதாக ...
Read More »மொட்டில் நாம் இணையோம் – தயாசிறி
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் ‘தாமரை மொட்டு ‘அல்லாத பொதுச் சின்னத்திலேயே போட்டியிடும். அவ்வாறு பொது சின்னத்துக்கு இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் சு.க தனித்து போட்டியிடும் நிலைமையே ஏற்படும் என்று சு.கவின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஹெட்டிபொல பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், கடந்த கால அரசியல் வரலாற்றை நோக்கும் போது கட்சிகள் இணைந்து கூட்டணி ...
Read More »
Eelamurasu Australia Online News Portal