Tag Archives: ஆசிரியர்தெரிவு

பல அமைச்சர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத காரணத்தினால் இலங்கை டிரான்பெரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பானது பல அமைச்சர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பதிவுசெய்துள்ளது. அமைச்சர் நவீன் திஸாநாயக்க, ஹரீன் பெர்னாண்டோ, மனோகணேசன், எம்.எச்.ஏ.ஹலீம், அகிலவிராஜ் காரியவசம், கயந்த கருணாதிலக்க, சஜித் பிரேமதாச மற்றம் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளது.

Read More »

மீண்டும் ஏவுகணை சோதனையை ஆரம்பித்த வடகொரியா!

வடகொரியா கடலை நோக்கி இரு ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தென்கொரிய இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.   ஜூலை மாதத்திற்கு பிறகு வடகொரியா நடத்து ஏவுகணை சோதனை இது என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. மேலும், சோதனை நடத்தப்பட்ட ஏவுகணை எந்த வகையைச் சேர்ந்தது என்று உடனடியாக விவரம் எதுவும் தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், அவ்வப்போது ஏவுகணை சோதனையை நடத்தி வரும் வடகொரியா, நடப்பு மாத இறுதியில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பாக கூறியது. இந் நிலையிலேயே மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனையினை ...

Read More »

இந்திய படையினரால் கொல்லப்பட்ட எனது மகனிற்கு நீதி வழங்குங்கள்!

காஸ்மீரில் இந்திய படையினரின் தாக்குதலில் 18 வயது இளைஞன் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி வழங்கப்படவேண்டும் என இளைஞனின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய படையினருக்கு எதிராக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாத போதிலும் இளைஞன் மீது பெல்லட் குண்டுதாக்குதலும் கண்ணீர்புகைபிரயோகமும் மேற்கொள்ளப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ள நிலையிலேயே மகனின் மரணத்திற்கு நீதி வழங்கப்படவேண்டும் என தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு மாத காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஸ்ரார் அகமட் கான் தனது கடந்த வாரம் தனது 18வது பிறந்த நாளிற்கு 11 முன்னதாக மருத்துவமனையில் ...

Read More »

படகுவழி ஆட்கடத்தலை தடுக்க அவுஸ்திரேலியா – இலங்கை தொடர்ந்து நடவடிக்கை !

படகு மூலம் நடக்கும் ஆட்கடத்தல் முயற்சிகளை தடுக்க இலங்கை மற்றும் ஆவுஸ்திரேலியா தொடர்ந்து இணைந்து செயற்படும் என இலங்கை வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் முதல் ஆட்கடத்தல் முயற்சிகள் அதிகரித்திருப்பது தொடர்பாக நடந்த சந்திப்பின் பிறகு இக்கருத்தை தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடல் பகுதியில் நடக்கும் ஆட்கடத்தல் பயணங்களை தடுக்க இலங்கை முழு ஒத்துழைப்பை வழங்கும் என இலங்கை வெளியுறவுச் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க கூறியுள்ளார். இக்கூட்டத்தில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஆணையர் டேவிட் ஹோலி, எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கட்டளை தளபதி கிராக் ...

Read More »

தமிழினம் அழிவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது!

வெளிநாட்டு மோகம் மாத்திரமில்லாமல் மருத்துவ ரீதியாக  சொல்லும்போது கூட இந்த தமிழினம் அழிவை நோக்கியே தான் சென்றுகொண்டிருக்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். வவுனியா சைவபிரகாச ஆரம்ப பாடசாலையில் இன்றையதினம் கற்றல் வளநிலையத்தை திறந்து வைத்துவிட்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் கல்வியில் கை வைக்க வேண்டும். அதனால் தான் தமிழர்களின் இருப்பை உருக்குலைப்பதற்காக எமது கலாசார, விழுமியங்கள், வரலாறுகளை தாங்கி நின்ற பொக்கிசமான யாழ் ...

Read More »

20 ஆம் திகதி தெரிவுக்குழுவுக்கு வாக்கு மூலம் வழங்கும் மைத்திரி !

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதுடன் எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள தெரிவுக்குழுவிற்கு ஜனாதிபதி எழுத்து மூலம் அறிவிப்பைவும் விடுத்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் தெரிவுக்குழு உறுப்பினர்களை வரவழைத்து தான் சாட்சியமளிக்க தயார் என  எழுத்து மூலம் இந்த அறிவித்தலை ஜனாதிபதி தெரிவிக்குழுவிடம் வழங்கியுள்ளார் என்பதை தெரிவுக்குழு தலைவர் பிரதி சபாநாயகர் ஆனத குமாரசிறி உறுதிப்படுத்தினார். மேலும் தெரிவுக்குழுவின் கால எல்லையை ...

Read More »

இங்கிலாந்து அணி வெற்றி பெற 383 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா!

ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 383 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா அணி. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, அந்த அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஓய்விற்கு பிறகு மீண்டும் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக விளையாடி இரட்டை சதத்தை பதிவுசெய்தார். இறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு ...

Read More »

உலகின் மிகப்பெரிய உணவகம் சிக்காகோவில் திறப்பு!

உலகின் மிகப்பெரிய ஸ்டார்பக்ஸ் உணவகம் சிக்காகோவில் திறக்கப்படவுள்ளது. உலகில் அதிக துரித உணவகங்கள் வைத்துள்ள ஒரு நிறுவனமாக ஸ்டார்பக்ஸ் உணவகம் திகழ்வதுடன் இந்நிறுவனம் உலகளவில் 30,000 இடங்களுக்கு மேல் இயங்கி வருகின்றது. உலகளவில் டோக்யோவில்தான் மிகப்பெரிய ஸ்டார்பக்ஸ் உணவு விடுதி செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில், நவம்பர் 15ஆம் திகதி சிக்காகோவில் 43 ஆயிரம் சதுர அடியில் 4 தளங்கள் கொண்ட ஸ்டார்பக்ஸ் உணவகத்தை திறக்கவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.   சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் புதிய தளமாக இது இருக்குமென நம்பிக்கை தெரிவித்துள்ள ஸ்டார்பக்ஸ், இங்கு ...

Read More »

விவசாய நிலத்தை மீட்டுத்தருமாறு கோரி‌ வவுனியாவில் போராட்டம்!

வவுனியா போஹஸ்வெவ பகுதியில் சிவில் பாதுகாப்புப்படையின் பயிர்ச் செய்கை மேற்கொள்ளும் விவசாய பண்ணைக்காணியை அப்பகுதியில் அரசியல் தலைமைகளினால் குடியேற்றப்பட்ட மக்கள் தமக்கு விவசாயம் மேற்கொள்வதற்கு பகிர்ந்தளிக்குமாறு கோரியுள்ளனர். இதையடுத்து அக்காணியின் உரிமையாளர்கள் இன்று மதியம் தமது விவசாயக்காணியை சிவில் பாதுகாப்புப்படையினரிடமிருந்து மீட்டுத்தருமாறு கோரிப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். போஹஸ்வாவே நந்திமித்திரகம றம்பாவெட்டிகுளம் பகுதியில் அப்பகுதி மக்கள் தமது பேரணியாக விவசாயம் மேற்கொள்ளும் பகுதிக்குச் சென்று சிவில் பாதுகாப்புப்படையினர் வசமுள்ள தமது பூர்வீக காணியை மீட்டுத்தருமாறு கோரிப் போராட்டம் மேற்கொண்டனர். மாமடுவ, மகாகச்சக்கொடிய, பிரப்பமடு பகுதிகளிலிருந்து ...

Read More »

காலை இழந்த மாணவன்; மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை!

தனக்கு  கால் இல்லாத போதும் விளையாட்டுக்கு ஊனம் தடை கிடையாது என்பதை நிரூபித்து தேசிய போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை மாணவன் ஒருவன் வெற்றுள்ளார். காத்தான் குடியைச் சேர்ந்த 17வயதான அஹமட் அனீக் என்ற மாணவரே இவ்வாறு பதக்கங்களை பெற்றுள்ளார். தனக்கு ஒரு கால் இல்லாத போதும்  விளையாட்டுக்கு ஊனம் எவ்விதத்திலும் தடை கிடையாது என்பதை நிரூபித்து (NPAC -National Para Athletics Championships-2019)    தேசிய பரா மெய்வல்லுனர் போட்டியில் எம்.எம்.அஹமட்  அனீக் என்ற மாணவன் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். ...

Read More »