அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொலைக்காட்சி நடிகையொருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வனோசா மார்க்வெஸ் என்ற நடிகையின் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை இடம்பெற்ற சம்பவமொன்றின் போது அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 49 வயதான நடிகை வாடகை வீடொன்றில் தங்கியிருந்ததாகவும் வீட்டின் உரிமையாளரின் அழைப்பினை தொடர்ந்து காவல்துறையினர் நடிகையின் வீட்டிற்கு சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் அங்கு சென்ற வேளை நடிகை உடல்ரீதியாக மிகவும் பாதிக்கப்ட்ட நிலையில் காணப்பட்டார்,அவர் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் அவர் திடீரென தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
வலம்புரி பத்திரிகையை எரித்தமைக்கு யாழ்.ஊடக அமையம் கண்டனம்!
கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வதனை விடுத்து ஊடகங்களை அச்சுறுத்தும் பாணியில் ஆட்களை வைத்து நாளிதழ்களின் பிரதிகளை தீயிட்டெரிப்பதும் அதனை பொதுவெளியில் பகிர்வதும் அப்பட்டமான ஊடகங்களை அச்சுறுத்தி மிரட்டுவதுடன் ஊடாக சுதந்திரத்தை அப்பட்டமாக மீறும் செயல் என்பதை யாழ்.ஊடக அமையம் வன்மையாக பதிவு செய்கின்றது. நேற்றைய தினமான சனிக்கிழமை யாழ்.நகரில் வைத்து பத்திற்கும் குறைவான நபர்களை கொண்ட சிறு அணியொன்று யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகையொன்றின், நேற்றைய பதிப்பின் மாதிரியினை தீக்கிரையாக்கியுள்ளது. யுத்தம் அதனால் ஏற்பட்ட மனக்கசப்புக்கள் மாறி மீண்டும் நட்புறவு பூக்கள் பூத்துவிடுமென்ற நம்பிக்கையினை மத ...
Read More »விக்னேஸ்வரன் மனக் குழப்பத்திலுள்ளார்!- எம்.ஏ.சுமந்திரன்
மனக்குழப்பத்தில் இருக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது மனக்குழப்பத்தை நீக்கி சரியான பதில் ஒன்றை தெரிவிப்பாராக இருந்தால், அதன் பின்னர் அடுத்த மாகாணசபை தேர்தல் குறித்து கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்துவரும் மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்தே கேட்ட மேற்கண்டவாறு கூறிய அவர், அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியான தீர்மானம் எதனையும் இதுவரை எடுக்கவில்லை. இந் நிலையில் முதலமைச்சர் உரையாற்றும்போது ...
Read More »தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்டம் 7 ஆம் திகதி முற்றாக முடங்கும்!
மட்டக்களப்பு புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் எதிர்வரும் 7 ஆம் திகதி பூரண கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்க தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை கிராமமான பசுமை நிறைந்த புல்லுமலை கிராமம் நூறு வீதம் விவசாயமும் கால்நடையும் கொண்ட பசும் சோலை கிராமமாகும். இக் கிராமங்களை அண்டி கித்துள், உறுகாமம், தம்பட்டி, வெலிக்காகண்டி என பல கிராமங்கள் உள்ளன. புல்லுமலையுடன் இணைந்த மெருவட்டை சிறு குளமும் ...
Read More »தமிழ்மக்களின் கேள்விக்கு என்னிடம் 4 தெரிவுகள்! -விக்னேஸ்வரன்
வரலாறு உங்களுக்கு வழங்க முன்வந்துள்ள தலைமைப் பாத்திரத்தை நீங்கள் ஏற்று முன்னெடுக்கத் தயாரா என தமிழ் மக்கள் பேரவையும் மக்களும் நீண்ட காலமாக என்னிடம் கேட்டு வருகின்றார்கள். இதற்குப் பதில் அளிக்க வேண்டிய கடப்பாடு எனக்கு இருப்பதை ஏற்றுக் கொள்கின்றேன்” என வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் நிரந்தர அலுவலகம் யாழ்ப்பாணம் பலாலி வீதியில் கந்தர்மடச் சந்திக்கு அண்மையாக இன்று (31) வெள்ளிக்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது. அதனைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே தமிழ் மக்கள் பேரவையின் இணைத் ...
Read More »உலக வர்த்தக அமைப்பில் இருந்து வெளியேறுவோம் – டிரம்ப்
உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வருவதை மாற்றி கொள்ளாவிட்டால் வெளியேறுவோம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். உலக நாடுகள் இடையேயான வர்த்தக சட்டதிட்டங்களை வகுக்கவும், பல்வேறு நாடுகள் இடையே ஏற்படுகிற வர்த்தக பிரச்சினைகளை தீர்க்கவும் டபிள்யு.டி.ஓ. என்னும் உலக வர்த்தக அமைப்பு. 1995-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்த அமைப்பானது, அமெரிக்க நலன்களுக்கு எதிராக செயல்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் புகார் எழுப்பி வருகிறார். இந்த நிலையில் அவர் ‘புளூம்பெர்க் நியூஸ்’ ஊடகத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது ...
Read More »ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்!
பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானும், டோலிவுட் நடிகர் பிரபாஸும் ரூ.1000 கோடியில் உருவாகும் சரித்திர கதையில் நடிக்க இருக்கிறார்கள். பாகுபலி வெற்றிக்கு பிறகு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பார்வை புராண, இதிகாச, சரித்திர கதைகள் பக்கம் திரும்பி இருக்கிறது. ராமாயண கதையை மையமாக வைத்து பாலகிருஷ்ணா, நயன்தாரா நடிப்பில் ஏற்கனவே ஸ்ரீராமராஜ்ஜியம் படம் தமிழ், தெலுங்கில் வந்தது. நாகார்ஜுனா, அனுஷ்கா நடிப்பில் ஓம் நமோ வெங்கடேசாய என்ற பெயரில் திருப்பதி வெங்கடாசலபதியின் திருவிளையாடல்களை சித்தரித்து பக்தி படம் வெளியானது. சித்தூர் ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக ...
Read More »அவுஸ்திரேலிய பிரதமர்,வெளிவிவகார அமைச்சரை இலக்கு வைத்த சிறிலங்கா பிரஜை!
அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்ட சிறிலங்கா முஸ்லீம் பிரஜை மல்கம் டேர்ன்புல் யூலி பிசப் போன்ற முக்கிய தலைவர்களை இலக்கு வைத்துள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முகமட் கமர் நிஜாம்டீனிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் இந்த அதிர்ச்சிதரும் விடயம் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் பிரதமர் மல்கம் டேர்ன்புல் மற்றும் மற்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் உட்பட பல முக்கிய பிரமுகரை இந்த நபர் இலக்குவைத்துள்ளார் என காவல்துறை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. இதேவேளை சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை நீதிமன்றம் அவரிற்கு பிணை ...
Read More »தென்கொரியாவுடன் போர் பயிற்சிக்கு அவசியம் இல்லை: டிரம்ப்
வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுடன் தனக்கு நல்ல உறவு உள்ளதாகவும், தென் கொரியாவுடன் போர் பயிற்சியை மீண்டும் நடத்துவதற்கு அவசியம் ஏற்படவில்லை என்றும் டிரம்ப் டுவிட்டரில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, வடகொரியாவுக்கு இந்த வாரம் மேற்கொள்ள இருந்த பயணத்தை ஜனாதிபதி டிரம்ப் திடீரென ரத்து செய்தார். சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அளித்த வாக்குறுதிப்படி, அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது தொடர்பான வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் மேற்கொள்ளும் நடவடிக்கையில் முன்னேற்றம் இல்லை ...
Read More »எங்களுடைய தரப்பை ஒருதரப்பாக ஏற்றுக்கொள்ள சர்வதேசம் தயாராக இல்லை!
பாதிக்கப்பட்ட எங்களுடைய தரப்பை ஒருதரப்பாக ஏற்றுக்கொள்ள சர்வதேசம் தயாராக இல்லை ஆனால் பாதிப்புக்களை ஏற்படுத்திய இலங்கை அரசாங்கத்தை ஒரு தரப்பாக சர்வதேசம் ஏற்கின்றது என வடமாகாண மகளீர்விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தையொட்டி கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச்சபை மண்டபத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் அடுத்த மாதம் ஜ.நா மன்றத்தில் மனித உரிமைகள் தொடர்பான கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. போர் முடிந்தும் ஒன்பது வருடங்கள் கடந்த நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான எந்த ஒரு வினைத்திறனான ...
Read More »
Eelamurasu Australia Online News Portal