Tag Archives: ஆசிரியர்தெரிவு

மசூதிக்குள் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்- 2 பேர் பலி

காபூலில் உள்ள மசூதிக்குள் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் பசுமை மண்டலத்தில் ஒரு பிரபலமான மசூதிக்குள் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர் என  உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தாரிக் அரியன் கூறியதாவது:- செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி (1500 ஜிஎம்டி) இரவு 7:25 மணியளவில் வஜீர் அக்பர் கான் மசூதியை குறிவைத்து ...

Read More »

ஒடுக்கப்பட்ட இனத்தவருக்கு கூகுள் எப்போதும் துணை நிற்கும் – சுந்தர் பிச்சை

இன சமத்துவத்திற்கு ஆதரவாக எப்போதும் நின்றிடும் என கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். மின்னசோட்டா தலைநகரான மின்னபோலிஸ் நகரில் கள்ளநோட்டு தொடர்பான விசாரணை ஒன்றின்போது, கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் எனும் நபர் காவல் துறையின்  பிடியில் உயிரிழந்தார். இந்த இறப்பிற்கு நீதி வேண்டி அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். கடந்த நான்கு நாட்களாக, நாடு முழுவதும் பரவியுள்ள இந்த போராட்டத்தால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. பல இடங்களில் கலவரம் வெடித்ததைத் ...

Read More »

எமது அரசியல் அபிலாசைகளைக் கைவிடுவது அர்த்தமற்றது!

உலகமே எதிர்பார்த்திராத தருணத்தில் கொவிட்-19 எனப்படுகின்ற ஒருவகை கொரோனோ வைரஸ் தனது தாக்குதலை ஆரம்பித்து அனைத்துலகையுமே நிலைகுலைய வைத்திருக்கிறது என தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இதன் நேரடியான மற்றும் மறைமுகமான தாக்கங்கள் குறைந்தபட்சம் இன்னும் 3-4 ஆண்டுகள் வரையாவது தொடருவதற்கான தெளிவான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில் எமது சுகாதார, பொருளாதார, கல்வி, அரசியல், சமூக ஸ்திரத்தன்மையை தக்கவைத்து பாதுகாத்து மேம்படுத்துவதற்கான திட்டமிடல்களும்  தயார்படுத்தல்களும் உத்வேகம் பெறவேண்டிய ஒரு தேவை ...

Read More »

ஆறுமுகனின் திடீர் மறைவு – ஐவரடங்கிய இடைக்கால நிர்வாகக் குழு …….!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவையடுத்து ஏற்பட்டுள்ள கட்சித் தலைமை வெற்றிடத்தை உரிய முறையில் நிரப்பும் வரையில், கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு, ஐவரடங்கிய இடைக்கால நிர்வாகக் குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாக, கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். இந்த இடைக்கால நிர்வாகக் குழுவில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் போசகரும் முன்னாள் தலைவருமான முத்து சிவலிங்கம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தலைவர் எஸ்.சிவராஜா, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிர்வாக செயற்பாட்டுக்கான உப தலைவர் எம்.மாரிமுத்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் ...

Read More »

சிங்கங்களால் கடித்துக்குதறப்பட்ட அழகிய இளம்பெண் இவர்தான்: புகைப்படம் வெளியானது!

அவுஸ்திரேலிய வன விலங்குகள் பூங்காவில் சிங்கங்களால் கடித்துக்குதறப்பட்ட இளம்பெண் குறித்த விவரங்களும் அவரது புகைப்படமும் வெளியாகியுள்ளன. அவரது பெயர் Jennifer Brown (35). அவுஸ்திரேலியாவின் North Nowraவிலுள்ள Shoalhaven உயிரியல் பூங்காவில், Jennifer சிங்கங்கள் இருக்கும் கெபியை சுத்தம் செய்யச் செல்லும்போது, அவர்மீது பாய்ந்து அவரை தாக்கிய சிங்கங்கள் அவரது தலை மற்றும் கழுத்தைக் கடித்துக் குதறியுள்ளன. சிங்கங்களைக் கையாள்வதில் நிபுணரான Jenniferஐ அந்த சிங்கங்களே கடித்துக்குதறியது ஏன் என்று தெரியவில்லை. அவரது சக ஊழியர்கள் இருவர் சமயோகிதமாக செயல்பட்டு அந்த சிங்கங்களை அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். ...

Read More »

அமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு ஆஸ்பத்திரி செலவு எவ்வளவு?

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான கட்டணம் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது. அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் உள்ள டென்வர் நகரில் ராபர்ட் டென்னிஸ் என்ற உயர்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு கொரோனா வைரஸ் பாதித்தது. இதையடுத்து அவர் அங்குள்ள ஸ்கை ரிட்ஜ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 வாரம் செயற்கை சுவாச கருவி பொருத்தி இருந்தனர். குணம் அடைந்த பின்னர் அவருக்கு அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கான பில்லை நீட்டினர். அதைப் பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். சிகிச்சை கட்டணமாக ...

Read More »

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது – ஒரே நாளில் 138 பேர் பலி

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 62 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3.72   லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து ரஷ்யாவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது. ரஷ்யாவில் கடந்த 24 ...

Read More »

வாழைச்சேனையில் மோட்டர் குண்டு மீட்பு

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில், பாவிக்க முடியாத நிலையில், கைவிடப்பட்டிருந்த  மோட்டார் குண்டொன்று, இன்று (31) மீட்கப்பட்டுள்ளதாக, வாழைச்சேனை காவல் துறையினர் தெரிவித்தனர் வாழைச்சேனை, குறிஞ்சிமலை  வீதியில், மணல் குவிக்கப்படும் மண் யாட் பகுதியில் குறித்த மோட்டர் குண்டு இருப்பதாக காவல் துறைக்குத் தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர், காவல் துறையினர் விரைந்து, மேற்படி  மோட்டர் குண்டை மீட்டு, எடுத்துச் சென்றுள்ளனர்.

Read More »

அமரர் ஆறுமுகனின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமானது. அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினர். அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் மதியம் 02 மணிக்கு கொட்டகலையிலிருந்து ஹட்டன், டிக்கோயா வழியாக நோர்வூட் தொண்டமான் விளையாட்டரங்கிற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வினை அடுத்து, பலர் இரங்கல் உரையாற்றினர். இதனையடுத்து, இந்தது சமய முறைப்படி இறுதி சடங்குகள் முன்னெடுக்கப்பட்டன. இதனையடுத்து, அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இறுதிக்கிரியைகளை அடுத்து, அக்கினியுடன் சங்கமமாகியது.

Read More »

அவுஸ்திரேலியாவில் ‘தமிழ்க்குரல்’ சண்முகம் சபேசன் காலமானார்!

அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனை தளமாகக்கொண்டிருந்து இயங்கிய தமிழ்ச்சங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் புனர் வாழ்வுக்கழகம், மற்றும் 3 CR வானொலி தமிழ்க்குரல் ஒலிப்பரப்புச்சேவை முதலானவற்றில் நீண்டகாலமாக ஈடுபட்டுழைத்திருக்கும் சண்முகம் சபேசன் இன்று ( 29 -05 – 2020 ) ஆம் திகதி அதிகாலை மெல்னில் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தி எம்மை வந்தடைந்தது. அவுஸ்திரேலியாவுக்கு நான் புலம்பெயர்ந்து வந்தபின்னர் எனக்கு அறிமுகமாகி, நான் உறவாடி மகிழ்ந்தவர்களில் கலை, இலக்கியம், கல்வி, ஊடகம் முதலான துறைகளிலும் மற்றும் சமூகப்பணிகளிலும் ஈடுபட்ட பலரைப்பற்றி தொடர்ச்சியாக ...

Read More »