Tag Archives: ஆசிரியர்தெரிவு

போராட்டத்தை குழப்ப முயன்றமைக்காக பகிரங்க மன்னிப்புக் கோரினார் சிறிதரன்!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான கிளிநொச்சி போராட்டத்தில் ஊடகவியலாளர்களிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் முல்லைதீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் பொலிசில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் இம்முறைப்பாடுகளை செய்துள்ளனர். இந்நிலையில் இன்று அவசர அவசரமாக ஊடகவியலாளர்களை சந்தித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குழப்பங்களிற்கு பொது மன்னிப்பு கோரியுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் நடாத்திய கவனயீா்ப்பு போராட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினா்கள் சிலா் குழுப்பம் விளைவித்தமை உண்மையே, என கூறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரன், அவ்வாறு குழப்பம் விளைவித்தவா்களுக்கான தாம் ஊடகவியலாளா்களிடம் பகிரங்க மன்னிப்பு கோருவதாக கூறியிருக்கின்றாா். கடந்த 28ம் திகதி ...

Read More »

அவுஸ்திரேலியாவில் புதிய அமைச்சரவை அதிரடியாக நியமனம்!

அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மொரிஸ்ஸன் (Scott Morrison), புதிய அமைச்சரவை நியமனம் குறித்து அறிவித்துள்ளார். செனட்டர் லிண்ட ரெனால்ட்ஸ் (Linda Reynolds), அவுஸ்திரேலியாவின் புதிய தற்காப்புத் தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையிலிருந்து சிலர் பதவி விலகியதைத் தொடர்ந்து பிரதமரின் அறிவிப்பு வெளியானது. வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில் லிபரல் (Liberal) கட்சி பெரும் தோல்வியைச் சந்திக்கும் என்று கருத்துக் கணிப்புகள் முன்னுரைத்துள்ளன. மொரிஸ்ஸன் (Morrison) தலைமையிலான கூட்டணி அரசாங்கம், அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளையும் தக்கவைத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைந்துகொண்டே வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக, அவுஸ்திரேலியத் ...

Read More »

அபிநந்தனின் பாதுகாப்பிற்காக லாகூரியில் தங்கியிருந்து ஆய்வு செய்த இம்ரான்கான்!

அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்படும் வரை இம்ரான்கான் லாகூரில் தங்கியிருந்து ஆய்வு செய்தார். இரவு 10.30 மணிக்குதான் இஸ்லாமாபாத்துக்கு புறப்பட்டு சென்றார். போர் கைதியாக பிடிபட்ட அபிநந்தனை விடுதலை செய்வோம் என்று கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்தார். அதன் பிறகு அவர் அபிநந்தனின் விடுதலை எப்படி நடைபெறும் என்பதை கேட்டு அறிந்தார். அபிநந்தன் பாதுகாப்பாக இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என்பதில் அவர் தீவிர கவனம் செலுத்தினார். பாகிஸ்தானியர்களிடம் சிக்கியதும் தாக்குதலுக்கு உள்ளான அபிநந்தன் பிறகு சுமூகமான முறையில் நடத்தப்பட்டார். வியாழக்கிழமை ...

Read More »

கேப்பாப்புலவில் அடையாள உண்ணாவிரதம்!

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, தொடர் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த போராட்டம் இன்று சனிக்கிழமை போராட்டம் இடம்பெறும் இடத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் ‘காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம்’ எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட  ஊர்வலம், இன்றுடன்  நிறைவடையவுள்ளது. இதனை முன்னிட்டு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

Read More »

யாழ்-வலி வடக்கில் 30 ஏக்கர் காணி விடுவிக்கப்படுமாம்!

யாழ்ப்­பா­ணம், வலி.வடக்கு பிர­தேச செய­லர் பிரி­வில் 30 ஏக்­கர் காணி மற்­றும் மக்­கள் பாவ­னைக்­கு­ரிய வீதி ஒன்­றும் நாளை மறு­தினம் திங்கட்கி­ழமை விடு­விக்­கப்­ப­ட­வுள்­ளது. மயி­லிட்­டித்­துறை வடக்கு, மயி­லிட்டி வடக்கு ஆகிய கிராம அலுவ­லர் பிரி­வு­க­ளில் மக்­கள் காணி­க­ளும், பலாலி கிழக்­கில் முதன்மை வீதி ஒன்றும் விடு­விக்­கப்­ப­ட­வுள்­ளன. தெல்­லிப்­பழை பிர­தேச செய­லர் எஸ்.சிவ­சி­றி­யி­டம் நாளை மறு­தினம் திங்­கட்­கி­ழமை மாலை 3 மணிக்கு இரா­ணு­வத்­தி­னர் காணி விடுவிப்புக்கான பத்­தி­ரத்தை ஒப்­ப­டைக்­க­வுள்­ள­னர். காணி­கள் விடு­விக்­கப்­ப­ட­வுள்ள நிலை­யில் அந்­தப் பகு­தி­யில் அமைந்­துள்ள இரா­ணுவ முகாம்­களை அகற்­றும் நட­வ­டிக்­கை­யில் இரா­ணு­வத்­தி­னர் ஈடு­பட்டு ...

Read More »

வடக்கில் குவிக்கப்படும் சிறிலங்கா காவல் துறை!

வடக்கில் மேலும் 850 சிறிலங்கா காவல் துறை உத்தியோகத்தர்களை புதிதாக இணைத்து கொள்ளவுள்ளதாக வட மாகாண சிரேஸ்ர காவல் துறை அத்தியட்சகர் கணேசநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் புதிதாக 850 தமிழ்காவல் துறை உத்தியோகத்தர்கள் இணைத்து கொள்ளப்படவுள்ளனர். இதற்காக 18 வயதுக்கு 28 வயதுக்கு இடைப்பட்ட 5 அடி 4 அங்குலம் உயரமுடைய இளைஞர்கள், யுவதிகள் முன்வரவேண்டும். இலங்கையின் சனத்தொகை ...

Read More »

இந்தியா-ஆஸ்திரேலியா நாளை மோதல்!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நாளை நடக்கிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் 20 ஓவர் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்திலும், பெங்களூரில் நடந்த 2-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வென்றது. அடுத்து இரு அணிகளும் 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் ...

Read More »

அபினந்தன் விடுதலைக்காக குரல் கொடுத்த பாகிஸ்தான் மக்கள்!

போர் வேண்டாம் என்றும், விமானி அபினந்தனை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி பாகிஸ்தானில் உள்ள பொதுமக்கள் போராட்டம் நடத்தும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை குண்டுவீசி தகர்த்தது. தங்கள் பகுதிக்குள் இந்திய விமானப்படை ஊடுருவியதால் கடும் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் ராணுவம், பதில் நடவடிக்கையாக இந்திய எல்லைக்குள் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்திய விமானப்படை மீண்டும் பதிலடி கொடுத்தது. ...

Read More »

புதிது புதிதாக ஆணைக்குழுக்களை அமைப்பதன் ஊடாக எந்தப் பலனும் இல்லை!

காணாமல் போனவர்கள் தொடர்பாக புதிது புதிதாக ஆணைக்குழுக்களை அமைப்பதன் ஊடாக எந்தப் பலனும் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க, பழைய தகவல்களுக்கு அமைய பரணகம மற்றும் உடலாகம ஆணைக்குழுவின் தகவல்களை பெற்று காணாமல் போனோருக்கான சான்றிதழை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். சுஹூருபாயவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினர் அனர்த்த நிலைமைகளின் போதே முகாம்களில் இருந்து வெளியே வந்து செயற்படுகின்றனர். வேறு தேவைகளுக்காக அவர்கள் வெளியே வர வேண்டிய அவசியம் இல்லாத ...

Read More »

மைத்திரி- மஹிந்த- ரணிலுடன் ஜே.வி.பி பேச்சுவார்த்தை !

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கி நாடாளுமன்ற முறைமையை உருவாக்கும் 20 ஆம் திருத்ததை நிறைவேற்றிக்கொள்ள ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் அடுத்தவாரம் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸநாயக தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும் மார்ச் மாதம் முழுவதும் மக்கள் சந்திப்புகள், கூட்டங்கள் நடத்தி நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் தீமைகள் குறித்து பேசவுள்ளோம் தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

Read More »