Tag Archives: ஆசிரியர்தெரிவு

ஆஸ்திரேலியாவை 235 ஓட்டங்களில் சுருட்டியது இந்தியா!

அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி தனது நேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை 235 ரன்களில் சுருட்டியது. ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, புஜாரா (123) சதத்தால் 250 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஆரோன் பிஞ்ச் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் வந்த கவாஜா 28 ரன்னிலும், ஷேன் மார்ஷ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ...

Read More »

விஜயகலாவின் வழக்கு ஒத்திவைப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கை, பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைத்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று(07) உத்தரவிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டமை தொடர்பிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கப்பெறாமையினால், குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read More »

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணி!

சிறிலங்காவில்  ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீல.சு.க. வின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.   ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியனவே இவ்வாறு புதிய கூட்டணியில் ஒன்றிணையவுள்ளன. குறித்த புதிய கூட்டணியானது இடம்பெறப்போகும் தேர்தலில் ...

Read More »

அவுஸ்திரேலியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து!

அவுஸ்திரேலியாவில் நோய்த்தாக்கம் ஒன்று எந்நேரமும் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. Thunderstorm ஆஸ்துமா எனப்படும் கொடிய ஆஸ்துமா நோய்த்தாக்கமே இவ்வாறு ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகரித்துவரும் வெப்பநிலையோடு காற்றில் மகரந்த துணிக்கைகளின் செறிவும் கூடும்போது குளிர்காற்றும் சேர்ந்துகொண்டால் இந்த நோய் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது. ஏற்கனவே பல சுகாதார அமைப்புக்கள் அங்கு வாழும் மக்களுக்கு அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது அவுஸ்திரேலியா முழுவதும் சீரற்ற காலநிலையும் காற்றும் அதிகரித்துவருகின்றது. இது thunderstorm ஆஸ்துமா தாக்குதலை மீண்டும் ஏற்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. காலநிலை மாற்றங்களினால் ஏற்படுகின்ற சுமார் இரண்டாயிரம் ...

Read More »

ஐ.நா.சபையில் ஹமாஸ் போராளிகளை கண்டித்து தீர்மானம்!

இஸ்ரேல்-பாலஸ்தீனம் எல்லைப்பகுதியான காசாவில் ஆதிக்கம் செலுத்திவரும் ஹமாஸ் போராளிகளை கண்டித்து ஐ.நா.சபையில் கொண்டு வந்த தீர்மானத்தில் இந்தியா நடுநிலை வகித்தது. பாலஸ்தீன எல்லையோரம் உள்ள காஸா பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் நாட்டு  ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. ஹமாஸ் போராளிகள் அவ்வப்போது இஸ்ரேல் பகுதிக்குள் ஏவுகணைகளை வீசி அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் ராணுவத்தினரை கொல்லும் முயற்சியில் ஈடுபட்டதாக ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் எல்லையில் கொல்லப்படுகின்றனர். இந்நிலையில், ஹமாஸ் உள்ளிட்ட போராளிகள் குழுக்களை ...

Read More »

நாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைகள் 12 இல் ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் கடந்த  நவம்பர் மாதம்  சபையில் இடம்பெற்ற மோதல் மற்றும் குழப்பகர சம்பவங்கள் குறித்து விசாரிக்க சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நியமிக்கப்பட்ட பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான குழு தமது விசாரணை நகர்வுகளை எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை முதல் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.   கடந்த நவம்பர் மாதம் 14,15,16 ஆம் திகதிகளில் சபையில் இடம்பெற்ற கலகலப்பு மற்றும் தாக்குதல்கள் சம்பவங்களில் நாசமாக்கப்பட்ட அரச உடைமைகள் மற்றும் சொத்துக்கள் சேத விபரம் குறித்த மதிப்பீட்டு அறிக்கை அன்றைய தினமே விசாரணை குழுவிடம் ...

Read More »

அந்தமானில் அமெரிக்கர் கொலைக்கு காரணம் என்ன?

ஜான் ஆலன், திட்டமிடப்பட்ட சாகச பயணமாக அங்கு சென்றிருந்தது, பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்திருப்பதாக தேசிய பழங்குடியினர் ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் கூறியுள்ளார். அந்தமானில் சென்டினல் பழங்குடியினரால் ஜான் ஆலன் என்ற அமெரிக்க வாலிபர் சமீபத்தில் கொல்லப்பட்டார். அவர் மத பிரசாரம் செய்ய சென்றபோது கொல்லப்பட்டதாக முதலில் தகவல் வெளியானது. இந்நிலையில், ஜான் ஆலன், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சாகச பயணமாக அங்கு சென்றிருந்தது, பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்திருப்பதாக தேசிய பழங்குடியினர் ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் கூறியுள்ளார். இருப்பினும், தொடர்ந்து விசாரணை ...

Read More »

பொன்சேகா,பூஜித் ஆகியோர் பிரதான சூத்திரதாரிகள்!

சிறிலங்கா ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொலை சதித்திட்டத்தின் பின்னாள் ரணில் விக்ரமசிங்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகிய பிரதான சூத்திரதாரிகள் இருக்கின்றனர்” என நாமல் குமார தெரிவித்துள்ளார். அம்பாறையில் நேற்று விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்படுத்தி மேற்கண்டவாறு நாமல் குமார தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட நாமல் குமார, “இவ் வருடம் கடந்த ஒகஸ்ட் மாதம் 16ஆம் திகதி மட்டில் நான் பொலிஸ் மா அதிபரை சந்திக்க சென்றிருந்தேன். அப்போது ...

Read More »

மைத்திரி, மஹிந்த, ரணில்-எதிர்ப்புத் தெரிவித்து யாழில் சுவரொட்டி!

யாழில்  மஹிந்த, மைத்திரி, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவித்து பரவலாக  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டியில் பாடசாலை மாணவர்களின் சீருடையை இல்லாமல் செய்த அதிகார சூதாட்டத்துக்கு எதிராக அணிதிரள்வோம் என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளதுடன், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More »

வவுணதீவு சம்பவத்தை அரசியல் விவகாரமாக்காதீர்கள்!

வவுணதீவில்  காவல் துறையினர்  படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் தொடர்புபட்டுள்ளதை எந்த காரணத்திற்காகவும் அரசியல் விவகாரமாக மாற்ற கூடாது என முன்னாள் இராணுவதளபதி தயா ரட்ணாயக்க தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தகாலத்தின் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் மீண்டும் ஆயுதத்தை பயன்படுத்தவேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது என்பதை அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆராயவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். வவுணதீவு சம்பவம் தனித்தவொரு சம்பவமாகயிருக்கலாம் என தெரிவித்துள்ள முன்னாள் இராணுவதளபதி புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் குறித்த மறுஆய்வுகளை உடனடியாக ஆரம்பிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அரசியல் மற்றும் அரசமைப்பு ...

Read More »