Tag Archives: ஆசிரியர்தெரிவு

பாங்காக்கில் நச்சுக் காற்றினால் கண்கள், மூக்குகளில் ரத்தக் கசிவு!

பாங்காக்கில் பரவி வரும் நச்சுக்காற்றினால் மக்களின் கண்கள் மற்றும் மூக்குகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தாய்லாந்தின் தலைநகரமான பாங்காக்கில் காற்றில் நச்சு கலந்துள்ளது.  இந்த நச்சுத்தன்மையுடன் கூடிய பனிப்புகை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. நெரிசலான வாகன போக்குவரத்தும், நகரத்திற்கு வெளியே பொருட்களை எரிப்பதும், தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகைகளுமே இந்த நச்சுத்தன்மைக்கு காரணமாக கூறப்படுகிறது.  இந்த அபாயகரமான நச்சு துகள்கள் பிஎம் 2.5 எனும் அளவை கடந்து, தாய்லாந்தை சுற்றியுள்ள 41 பகுதிகளில் நச்சுக்காற்றாக வீசி வருகிறது என அந்நாட்டின் ...

Read More »

தமிழர்களுக்கு எப்போது சுந்திரம்?

சிறிலங்கா  71 சுதந்திர தினமான இன்று கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ் பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அரசியல் கைதிகளை விடுதலைச் செய், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு தீர்வினை வழங்கு, சர்வதேச விசாரணை வேண்டும், நிலங்களை ஆக்கிரமிக்காதே, இராணுவமே வெளியேறு, வடக்கு கிழக்கை பிரிக்காதே, ஒற்றையாட்சி வேண்டாம், இனப்படுகொலைக்கு நீதி வேண்டும், எங்கள் நிலம் எமக்கு வேண்டும் கொலையாளிகளை நீதிபதியாக்கும் 30/1 தீர்மானத்திற்கு  மேலும் கால அவகாசம்  கொடுத்து நீதியை இழுத்தடிக்காது  ஜநா பாதுகாப்புச் ...

Read More »

பல்கலைக் கழகத்தில் கறுப்புக் கொடிகள்!

சிறிலங்கா சுதந்திர தினம் இன்றாகும். தமிழ் மக்களுக்குச் சுதந்திரமில்லாத இன்றைய நாளைக் கருநாளாக அனுஷ்டிக்குமாறும் அன்றைய தினம் போராட்டங்களை நடாத்துமாறும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய பல அரசியல் கட்சிகளும் இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரி நாள் என்றும் வடக்கு கிழக்கில் போராட்டங்களை நடாத்தும் மக்களுடன் தாமும் இன்று இணைந்து போராட்டங்களை நடாத்துவதாகவும் அறிவித்துள்ளன.   இவ்வாறானதொரு நிலையிலேயே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு வெளியிலும் உள்ளும் கரிநாள் எனக் குறிப்பிடப்படும் கறுப்புக் கொடிகளும் தொங்கவிடப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது .

Read More »

விமான நிலையத்தை புகைப்படம் எடுத்த நால்வர் கைது!

ட்ரோன் கமராவை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை புகைப்படம் பிடித்தமைக்கா நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நால்வரும் மாலைத்தீவை நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்த காவல் துறையினர்  இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »

அவுஸ்திரேலியாவில் வரலாறு காணாத வௌ்ளப் பெருக்கு!

அவுஸ்திரேலியாவில் வரலாறு காணாத அளவில் வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் கிழக்கு அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பிராந்தியத்தில் எதிர்வரும் நாட்களிலும் கடும் மழை பெய்யும் என்று அதிகாரிகள் இன்று எதிர்வு கூறியுள்ளனர். கரையோர நகரமான டவுன்ஸ்வில்லேயில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் வேறிடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த பிராந்தியத்தில் பருவப் பெயர்ச்சி மழை கடும் தாக்கத்தை ஏற்படுத்துள்ளதாக அவுஸ்திரேலிய ஔிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. Townsville பகுதியில் 150 மில்லிமீற்றர் தொடக்கம் 200 மில்லிமீற்றர் வரை மழை எதிர்பார்க்கப்படுவதாகவும், இது ...

Read More »

பாகிஸ்தானுக்கு சீனா ரூ.17,750 கோடி நிதி

நெருக்கடியில் தத்தளித்து வருகிற பாகிஸ்தானுக்கு சீனா ரூ.17 ஆயிரத்து 750 கோடி நிதி வழங்குகிறது. பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பிடம் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் கடந்த நவம்பர் மாதம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், நெருங்கிய நட்பு நாடான சீனாவுக்கு சென்றார். அங்கு அவர் அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங், பிரதமர் லீ கெகியான் உள்ளிட்டவர்களை சந்தித்தார். அப்போது இவ்விரு நாடுகள் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதைத் தொடர்ந்து ...

Read More »

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து நடிகர் பார்த்திபன் திடீர் ராஜினாமா!

தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவராக சமீபத்தில் பதவியேற்றுக் கொண்ட நடிகர் பார்த்திபன் பதவியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக நடிகர் விஷால் இருந்து வருகிறார். துணைத் தலைவர்களாக நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், செயலாளர்களாக கதிரேசன், துரைராஜ், பொருளாளராக எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில், பார்த்திபன் தனது துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அனுப்பி வைத்தார். பதவியை ராஜினாமா செய்தது ...

Read More »

டிரம்ப் – கிம் வியட்நாமில் சந்திக்க திட்டம்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் இடையேயான 2-வது சந்திப்பு வியட்நாமில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி  உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்து வந்தது வடகொரியா. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து போர்பதற்றம் நிலவியது. குறிப்பாக இந்த விவகாரத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு கடும் மோதல் போக்கு நீடித்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், ...

Read More »

இலங்கையைச் சுற்றி சக்கர நாற்காலியில் பயணம்!

வவுனியாவைச் சேர்ந்த விசேட தேவைக்குட்பட்ட முகமட் அலி என்பவர் இன நல்லிணக்கத்தையும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமையை வலியுறுத்தியும், சக்கர நாற்காலியில் சுற்றிவரும் இலங்கையைப்  பயணத்தை இன்று (02.02) வவுனியா புதிய பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பித்தார். வவுனியா சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமூக அமைப்பைச் சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள்  கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கியிருந்தனர். சமூக சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் சம்பிரதாயபூர்வமாக  முகமட் அலியின் நல்லிணக்க பயணத்தை ஆரம்பித்து வைத்திருந்தார். முகமட் அலி இலங்கை மின்சாரசபையில் பணியாற்றியபோது ஏற்பட்ட ...

Read More »

18 பேர் கொல்லப்பட்ட மோசூல் வான் தாக்குதல் தொடர்பில் அவுஸ்திரேலியா!

கடந்த 2017ஆம் ஆண்டு ஈராக் மோசூலில் 18 பொது மக்கள் கொல்லப்பட்டதற்கு தமது வான் படையினர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக இருக்கலாம் என அவுஸ்திரேலிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. அந்த கால கட்டத்தில் மோசூல் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அந்த நகரை மீட்பதற்காக அமெரிகாவின் தலைமையிலான சர்வதேச படையணியினர் பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். எப்படியிருப்பினும், தமது படையணியின் வான் தாக்குதல் காரணமாகத்தான் இந்த பொது மக்கள் 18 பேர் கொல்லப்பட்டனர் என்பதனை உறுதியாக கூறமுடியாது என அவுஸ்திரேலிய வான் ...

Read More »