Tag Archives: ஆசிரியர்தெரிவு

30 சிசுக்களை மூன்றாம் தரப்பினருக்கு விற்ற சந்தேக நபர் கைது

பிறக்காத சிசுக்கள் சார்பாக கர்ப்பிணித் தாய்மார்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பின்னர், சிசுக்கள் பிறந்ததும் அவற்றை  மூன்றாம் தரப்பினருக்கு விற்கும் மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபரை காவல் துறை  சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சமூக ஊடகங்களின் ஊடாக பிரசாரத்தை முன்னெடுத்து தெஹிவளை பிரதேசத்தில் இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளதாககாவல் துறை  ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். குறித்த சந்தேக நபர் மாத்தளை பகுதியை சேர்ந்தவர் என்றும் கொழும்பில் தங்கியுள்ளதாகவும் காவல் துறை ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். ...

Read More »

தொடர் மழையால் கிழக்கில் வெள்ளக்காடு

கிழக்கு மாகாணத்தில், கடந்த 3 நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், தாழ்நிலப் பிரதேசங்களில் உள்ள பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், தமது வீடுகளை விட்டு வெளியேறி, உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் அச்சம் நிலவி வரும் இக்காலகட்டத்தில் மக்கள் மிகப்பெரும் அசௌகரியத்தை தற்போது எதிர்நோக்கி வருகின்றனர். முன்னதாக, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றர் மழை ...

Read More »

எதிர்கால கப்டனுக்கு ஸ்மித் மட்டுமே

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு ஸ்மித் மட்மே எதிர்கால கேப்டன் என்ற நிலை இல்லை என அந்நாட்டு கிரிக்கெட் போர்டு சேர்மன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆரோன் பிஞ்ச், டெஸ்ட் அணி கேப்டனாக டிம் பெய்ன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். டெஸ்ட் அணிக்கு ஸ்மித்தை கேப்டனாக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. டிம் பெய்னும் கேப்டன் பதவி குறித்து யோசிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஸ்மித் மட்டுமே கேப்டனுக்கான ஆப்சனில் இல்லை என அந்நாட்டு கிரிக்கெட் போர்டின் ...

Read More »

பைசர் தடுப்பூசிக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் – 27 நாடுகளில் பயன்பாட்டிற்கு வருகிறது

பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் 27 நாடுகளுக்கு ஒரே நாளில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருகிறது. அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது. இந்த தடுப்பூசி கொரோனா வைரசை தடுப்பதில் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் செயல்திறன் அறிவிக்கப்பட்ட உடன் தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய யூனியன் உள்பட பல நாடுகளிடம் பைசர் ...

Read More »

ஆவணத்தில் சுமந்திரன் சொல்லியிருப்பது என்ன?

“தமது சிபார்சுகள் என்று கூறி சுமந்திரன் எமக்குத் தந்த ஆவணத்தில் கூறியிருப்பது இலங்கை உட்பட ஒரு தடவை அல்ல மூன்று தடவைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அங்கத்தவர்கள் யாவரினதும் சம்மதத்துடன் இயற்றியது போன்ற ஒரு கூட்டத் தீர்மானத்தை 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இயற்ற வேண்டும் என்பதே. அதாவது முன்னர் மூன்று முறை காலக்கெடு அளித்தது போல் மேலும் ஒரு முறை காலக்கெடு அளிக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தம்.” இவ்வாறு கூறுகின்றார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளரும், யாழ். மாவட்ட ...

Read More »

யாழ். மாநகர சபை புதிய மேயர் யார்?

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இரண்டாவது தடவையும் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநகர சபையின் புதிய மேயர் தெரிவு எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம. பற்றிக் டிறஞ்சன் இதற்கான அறிவித்தலை விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகக் கடந்த 16ஆம் திகதி, மாநகர மேயர் இம்மானுவல் ஆனோல்ட்டால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. வரவு – செலவுத் ...

Read More »

அகதிகளுக்கு பிறந்த குழந்தைகளை பிரித்து வைத்திருக்கும் ஆஸ்திரேலிய கொள்கை

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயற்சித்து நவுருத்தீவில் உள்ள கடல் கடந்த தடுப்பில் சிறைவைக்கப்பட்ட அகதிகளுக்கு பிறந்த சுமார் 170 குழந்தைகள் நிச்சயமற்ற நிலையை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதில் 125 குழந்தைகள் ஆஸ்திரேலியாவிலும் மற்ற குழந்தைகள் கடல் கடந்த தடுப்பு தீவுகளிலும் பிறந்தவை எனக் கூறப்படுகின்றது. இவ்வாறு சமீபத்தில் எத்தனை குழந்தைகள் பிறந்துள்ளனர் அல்லது இக்குழந்தைகளில் எத்தனை பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என்ற தகவலை வழங்க ஆஸ்திரேலிய உள்துறை மறுத்திருக்கிறது. நவுரு தடுப்பில் வைக்கப்பட்டிருந்த அகதிகளுக்கு சுமார் 7 ஆண்டுகாலத்தில் பிறந்த இக்குழந்தைகள் ஆஸ்திரேலிய படகு ...

Read More »

ஆஸ்திரேலியா: தொண்டு அமைப்புகளின் உதவிகளை நாடும் தஞ்சக்கோரிக்கையாளர்கள்

கொரோனா பெருந்தொற்று சூழல் தொடங்கிய பொழுது, அரசு உதவிகளிலிருந்து தவிர்க்கப்பட்ட சுமார் 1 லட்சம் தஞ்சக்கோரிக்கையாளர்கள் வீடற்ற நிலையையும் பசியையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும் என தொண்டு அமைப்புகள் எச்சரிந்திருந்த நிலையில் புதிய கருத்துக்கணிப்பு ஒன்று அதனை நிரூபணமாக்கியுள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அகதிகள் கவுன்சில் நடத்திய ஆய்வில் 3,500 தஞ்சக்கோரிக்கையாளர்கள் தொண்டு அமைப்புகளின் உதவிகளை நம்பியிருப்பதாகவும் அதில் 70 சதவீதமானோர் போதிய உணவின்றி தவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பின் படி, சுமார் 14 சதவீதமானோர் வீடற்ற நிலையையும் எதிர்கொண்டுள்ளனர். அதே சமயம், ...

Read More »

அமெரிக்காவுடன் இணைந்து செயற்படத் தயார் -சீனா

அமெரிக்காவுடனான வேறுபாடுகளைக் களைந்துவிட்டு ஜோ பைடன் நிர்வாகத்துடன் இணைந்து செயற்படத் தயாராகவுள்ளதாகச் சீனா தெரிவித்துள்ளது.   அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக  ஜோ பைடன் ஜனவரி 20ஆம் திகதி பொறுப்பேற்கவுள்ளார். இந்நிலையில் பெய்ஜிங்கில் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ(Wang Yi), இருநாடுகளுக்கான பொது நலன்களை மறந்துவிட்டுச் சீனாவை அமெரிக்கா கடுமையாக விமர்சித்ததால் உறவு மோசமடைந்ததாகக் குறிப்பிட்டார். கொரோனா, பொருளாதார மீட்சி, பருவநிலை மாற்றம், இனச் சமத்துவம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப் போவதாக ஜோ பைடன் கூறியதை வாங், சுட்டிக்காட்டினார்.

Read More »

ஆவணத்தில் சொல்லப்பட்டிருப்பது என்ன?

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வரும் மார்ச் மாத அமர்வை ஒட்டி சர்வதேச சமூகத்தை ஐக்கியப்பட்டு அணுகுவதற்காகத் தாம் சமர்ப்பித்த வரைவு ஒன்று தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் எம்.பியும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியும் பொய்யான, விஷமத்தனமான பிரச்சாரம் செய்கின்றனர் என தமிழ்க் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. குற்றம் சுமத்தியிருக்கின்றார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- “நான் அவர்களுக்குக் கொடுத்த ஆவணத்தில் இரண்டே இரண்டு விடயங்கள் தான் இருக்கின்றன. ஒன்று – இதுவரை ஐ.நா. மனித ...

Read More »