சீனாவை உலுக்கி எடுத்துவரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 56 பேரும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பயோ-வெப்பன்(உயிர் ஆயுதங்கள்) தயாரிக்கும் ஆய்வுக்கூடத்தில் இருந்து வைரஸ் உருவாகியிருக்கலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன உலகிற்கு தெரியாமல் சீனா கிருமிகளை உருவாக்கி மனிதர்களைக் கொல்லும் உயிர்-ஆயுதங்களை(பயோ-வெப்பன்) உருவாக்கும் ஆய்வுக்கூடத்தை வுஹான் மாநிலத்தில் செயல்படுத்தி வந்தது. அங்கிருந்து பரவி இருக்கலாம் என்று தி வாஷிங்டன் டைம்ஸ் நாளேட்டுக்கு இஸ்ரேலைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி தெரிவித்துள்ளார். மத்திய சீன நகரமான வுஹான் நகரில்தான் முதன் முதலாக கரோனா வைரஸ் ...
Read More »அதிக வாசிப்பு
அவுஸ்திரேலியாவுக்கு காத்திருக்கும் மற்றுமொரு ஆபத்து?
அவுஸ்திரேலியாவில் இந்த ஆண்டு ஏற்கனவே காட்டுத் தீ, வெள்ளம் மற்றும் ஆலங்கட்டி மழை ஆகியவற்றினால் பாதிப்படைந்துள்ள நிலையில் தற்போது ஓர் வகையான விசத் தன்மையுடைய சிலந்திகள் (Funnel-web spiders) குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு அவுஸ்திரேலியாவின் ஈரமான வனப் பகுதியில் உள்ள இந்த சிலந்தி வகைகள் விரைவாக செயற்படக் கூடிய மிகவும் நச்சுத் தன்மை கொண்டவை என நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சோமர்ஸ்பியை மையமாகக் கொண்ட அவுஸ்திரேலிய ஊர்வன பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். என்ற இந்த சிலந்திகளானது உலகின் ...
Read More »இலங்கையர்கள் ஐவர் அவுஸ்திரேலியாவில் கைது!
திருட்டு சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய இலங்கையர்கள் ஐவர் அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, விக்டோரியா காவல் துறையினர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 7 பேரைக் கொண்ட குறித்த திருட்டுக் குழுவில் இலங்கையர்கள் ஐவரும் உறுப்பினர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த திருட்டுக் குழுவினர் அவுஸ்திரேலியாவின் பிரதான நகரங்களிலுள்ள ரயில் நிலையங்கள், சுப்பர் மாக்கட் உள்ளிட்ட இடங்களில் குறித்த சந்தேகநபர்கள் திருட்டில் ஈடுபட்டவர்களென்றும் தெரிவிக்கப்படுகின்றது. மெல்போர்ன் நகரில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர்களுள் பெண்கள் மூவரும் ஆண்கள் நாள்வரும் அடங்குவதுடன் இவர்கள் 25- ...
Read More »அவுஸ்திரேலிய காட்டுத்தீயில் தீயணைப்பு வீரர்கள் இருவர் பலி!
அவுஸ்திரேலியாவில் சிட்னி காட்டுத்தீயை (bushfires) அணைக்க போராடி வரும் இரண்டு தீயணைப்பு வீரர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா கிழக்கு பகுதிகளில் பல வாரங்களாக காட்டுத்தீயை எதிர்த்துப் போராடி வருகிறது, இதனால் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளார்கள், மற்றும் 700 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, கிட்டத்தட்ட 1.2 மில்லியன் ஹெக்டேர் நிலம் (3 மில்லியன் ஏக்கர்) அழிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான சிட்னியில் காட்டுத்தீ விபத்து ஏற்பட்டபோது, தீயணைப்பு வீரர்களின் லொரி ஒரு மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், சாரதியும் தியணைப்பு விரரும் ...
Read More »அவுஸ்திரேலியாவில் வரலாறு காணாதளவு வெப்ப நிலை உயர்வு!
அவுஸ்திரேலியாவின் சராசரி வெப்ப நிலையானது 40.9 செல்சியஸ் ஆக உயர்வடைந்துள்ளதாக அந் நாட்டு வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியா வரலாற்றிலேயே பதிவான ஆகக் கூடுதலான வெப்ப நிலை இது எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிதுள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் வெப்ப நிலையானது 40.3 ஆக பதிவாகியிருந்தது. இந் நிலையிலேயே நேற்றைய தினம் 40.9 என்ற ஆகக்கூடுதலான வெப்பநிலை பதிவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் நிலவும் கடும் வறட்சி மற்றும் காட்டுத் தீ ஆகியவையே இந்த வெப்ப நிலை ...
Read More »ஆஸ்திரேலிய காட்டுத்தீக்கு காரணமானவர் கைது!
கஞ்சா செடிகளை பாதுகாக்க புதர்களுக்கு தீவைத்து ஆஸ்திரேலிய காட்டுத்தீக்கு காரணமானவரை காவல் துறையினர் கைது செய்தனர். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. வனப்பகுதி மட்டும் இன்றி புதர் மண்டிய பகுதிகளிலும் தீ பற்றி எரிகிறது. வறண்ட வானிலை காரணமாக தீ கட்டுக்குள் அடங்காமல் வேகமாக பரவி வருகிறது. இந்த காட்டுதீயில் இதுவரை 4 பேர் பலியாகி இருக்கிறார்கள். 300-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 10 ஆயிரம் ஹெக்டேருக்கு அதிகமான வனப்பகுதி ...
Read More »ஈழப் பெண் நடிகையை கியூ பிரிவு காவல் துறையினர் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளனர்!
கடல் குதிரை படத்தின் கதாநாயகியை காவல் துறை சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாக இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை பெரம்பூரை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது:- காற்றுக்கு என்ன வேலி, ரசிகர்மன்றம் உள்பட பல திரைப்படங்களை தயாரித்து, இயக்கியுள்ளேன். கடல்குதிரை என்ற திரைப்படத்தை தயாரித்து, இயக்க திட்டமிட்டேன். இந்த திரைப்படம், தமிழ் ஈழத்தின் பெண்ணின் வாழ்க்கை தொடர்பானது என்பதால், ஈழப் பெண்ணை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டேன். 1993-ம் ...
Read More »5 வயது சிறுவனால் குடும்பத்தை நாடு கடத்த உத்தரவிட்ட அவுஸ்திரேலிய அதிகாரிகள்!
அவுஸ்திரேலியாவில் பிறந்த ஐந்து வயது சிறுவனுக்கு விசா விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டதால் அவரது குடும்பத்தினருடன் வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்படுவதை எதிர்கொள்கிறார. டாக்டர் மகேடி ஹசன் பூயான் 2011 இல் மாணவர் விசாவில் அவுஸ்திரேலியாவிற்கு வந்தார். அடுத்த ஆண்டிலே ரெபாக்கா சுல்தானா என்கிற இளம்பெண்ணை வங்கதேசத்தில் திருமணம் செய்து கொண்டு 2013 இல் ஆஸ்திரேலியாவில் பணியில் சேர்ந்தார். அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர்களுக்கு அதியன் ஜீலாங் என்கிற மகன் பிறந்தான். பிறந்த சில மாதங்களுக்குப் பிறகு, பூயான் மற்றும் சுல்தானா, தங்களுடைய மகன் அத்யான் தலையை உயர்த்த ...
Read More »ஆஸ்திரேலியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள விசாக்கள்!
ஆஸ்திரேலியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள பிராந்தியா விசாக்கள், வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான வழியை ஏற்படுத்துகின்றது. அதே சமயம், பிராந்திய விசாக்கள் மூலம் PR எனப்படும் நிரந்தர வதிவிடம் கோரி விண்ணப்பிக்கும் பொழுது, சம்பந்தப்பட்ட நபர் பிராந்திய பகுதியில் மூன்றாண்டுகள் வாழ்ந்ததை நிரூபிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் டேவிட் கோலிமன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பிரதான நகருங்களுக்கு வெளியே உள்ளவை பிராந்திய பகுதிகளாக பார்க்கப்படுகின்றது. இவ்வாறான பகுதிகளில் பணியாற்ற ஆட்கள் பற்றாக்குறை நிலவி வருவதால், வரும் நவம்பர் மாதம் திறன்வாய்ந்த குடியேறிகளுக்கான 2 ...
Read More »நடுவீதியில் காரிலிருந்து விழுந்து கர்ப்பிணிபெண் மரணம்- அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவில் மேல்பேர்னின் வடமேற்கு பகுதியில் நபர் ஒருவரால் தாக்கப்பட்ட கர்ப்பிணிப்பெண் காரிலிருந்து விழுந்ததில் உயிரிழந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டில் ஆரம்பித்த சம்பவம் வீதியில் முடிவடைந்தது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 32 வயது கர்ப்பிணியை குறிப்பிட்ட வீட்டில் அச்சுறுத்த ஆரம்பித்துள்ளார் பின்னர் காரிலும் அச்சுறுத்தியுள்ளார் அதன் போது குறிப்பிட்ட பெண் தவறி விழுந்ததில் பலத்த காயங்களிற்கு உள்ளானார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆபத்தான நிலையில் ஹெலிக்கொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பெண் அங்கு உயிரிழந்தார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை சிசேரியன் மூலம் ...
Read More »